Sunday, December 4, 2016

Pallikudamnews

அந்தமான் அருகில் புதிய புயல் : தமிழகத்தில் கனமழை பெய்யுமா?
          புதிய புயல் சின்னம்! : சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர், ஸ்டெல்லா கூறியதாவது:

       வங்கக் கடலின் கிழக்கு பகுதியில், அந்தமான் அருகே, காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக, இன்று மாற வாய்ப்பு உள்ளது.

        அதைத் தொடர்ந்து, 48 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.இதனால், தமிழகத்திற்கு மழை வாய்ப்பு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். அதே நேரத்தில், அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து, மத்திய வங்கக் கடல் பகுதியில், புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக, தனியார் வானிலை கணிப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
        இந்தப் புயல் உருவானாலும், விசாகப்பட்டினத்தை நோக்கியே நகரும் என்பதால், தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு மட்டுமே, மழை கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: