Thursday, May 24, 2018

Pallikudam

பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும்.

வரலாறு:

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. 'காஞ்சனம்' என்ற பெயரில் இருந்து மருவி 'காஞ்சி' ஆனது. காஞ்சனம் என்றால் பொன்னாலான் நகரம் என்று  பொருள்.  அந்நாளில் காஞ்சி நகரம் பெரும் சீரும் சிறப்போடு இருந்ததை இந்த சொல் குறிக்கிறது. சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன. பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான்.
     பின்னர் காஞ்சி சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடபபட்டது.
சோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார்.
     பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது.
     விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.    
     1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது. இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று.
     1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின.
     18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.

காஞ்சிபுரம் பற்றிய இலக்கிய குறிப்புகள்:
காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது.
  கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவரிகளின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், ,கலை மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் இப்பகுதி தொண்டை மண்டலம் என குறிப்பிடப்பட்டது. பல்லவர்களின் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது. மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது.

"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.

வேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னனால் ஆளப்பட்ட பழைய நகரம் காஞ்சி மாநகரமாகும். இக்காஞ்சி மாநகரத்தை மேலும் செப்பம் செய்து கடிநகராக்கினான், கரிகால் பெருவளத்தான் எனும் சோழப் பேரரசன். சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும்.

திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர். புத்த சமயத்தைச் சார்ந்த அறவண அடிகள் காஞ்சியில் வாழ்ந்தார். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு புத்த சமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது.

நாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கியவர் காஞ்சியில் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானி ஆவார். திருப்பருத்திக்குன்றம் என்னும் இடத்தில் சமணர்கள் நிறைந்து வாழ்ந்த காரணத்தால் அவ்வூர் சமணக்காஞ்சி (ஜைனக்காஞ்சி) என்று வழங்கப்படுகிறது.
ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பல்லவர்களின் காலத்தில் கலைமகளும், திருமகளும் கலந்து உறைந்திருந்த காரணத்தால் கல்விக் கரையிலாக் காஞ்சி மாநகர் என்று அப்பர் சுவாமிகளால் அருளப்பெற்றது.
முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் நரகமாகும்.
சிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம்! சிற்பங்களைச் செதுக்கி, அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆழ்வார்களும், நாயன்மார்களும், சீன நாட்டின் நல்லறிஞர்களும் போற்றிப் புகழ்ந்த இம்மாநகரின் மிக முக்கிய ஆலயங்களின் தரிசனம் காண, இந்நூலை உங்கள்முன் படைக்கிறேன்.


சிறப்புகள்:

     இந்தியாவில் மொத்தம் 7 முக்தி ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரமும் ஒன்று. மேலும் காஞ்சி பட்டுக்கு மட்டுமல்ல, கலை, கலாசாரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கும் ஊராகும்.
  காஞ்சிபுரம் நமது தமிழகத்தின் பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. இங்கே ஓடும் நதி பாலாறு ஆகும்.
     காஞ்சிபுரம் "ஆயிரம் கோவில் நகரம்" என்று அழைக்கபடும் நகரம் ஆகும். இது பஞ்ச பூதங்களில் ஒன்றாக விளங்கப்படுகிறது. 

    "திருவாரூரில் பிறக்க முக்தி,
     காஞ்சியில் வாழ முக்தி,
     காசியில் இறக்க முக்தி,
     திருவண்ணாமலையை நினைக்க முக்தி"
என்ற வரிகள் மூலம் காஞ்சியின் சிறப்பை அறிய முடிகிறது.
     

கோவில்கள்:

     ஒரு காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாக மகோன்னதச் சிறப்புகளுடன் இருந்த மாநகரம் காஞ்சிபுரம்.பின்னர் சேரர்கள் விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம் என்று வரலாற்றில் தொடந்து புகழ் பெற்ற நகரம்.
சுமார் ஆயிரம் கோவில்கள் இங்கு கட்டபட்டிருப்பதாக சொல்வார்கள். தற்போது எஞ்சியிருப்பவை சுமார் 100 கோவில்கள் இருக்கலாம்.காஞ்சி நகரத்தின் எந்த சிறு தெருவிலும் ஒரு கோவில் இருக்கும்,ஒரு வரலாறு இருக்கும்.
நமது பாரம்பரியம், வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது.
தெற்கே விஷ்ணு காஞ்சி,வடக்கே சிவகாஞ்சி - இப்படி இரண்டாக பிரிக்கபட்டுள்ளது இந்த நகரம்.சிவகாஞ்சியில் சிவன் கோவில்கள் அதிகம்,விஷ்ணுகாஞ்சியில் வைணவ கோவில்கள் அதிகம். இது கோயில்களுக்கு சிறப்பு பெற்ற ஊர் ஆகும். பல்லவர், சோழர், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில்,சுப்பரமணிய சுவாமி கோவில், கட்பேசுவரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் போன்ற பல கோவில்கள் ஆகியவை சிவகாஞ்சியில் உள்ளன.இதை பெரிய காஞ்சிபுரம் என்பார்கள்.தெற்கே சின்ன காஞ்சிபுரம் அல்லது விஷ்ணு காஞ்சியில் இருப்பது வரதராஜ பெருமாள் கோவில்.
    
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.
    
பாரம்பரியம்,வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது. பாரம்பரியம் மிக்க இந்த நகரில் இருந்து அறிஞர் அண்ணா புறப்பட்டு வந்ததில் வியப்பேதுமில்லை.

Thursday, May 17, 2018

Pallikudam

எத்தனை மணி நேரம் விழித்திருக்கலாம்?
‘அலாரம் அடிக்கிற சத்தம் கேட்டும் தூங்கிட்டிருக்கியே... நானெல்லாம் சின்ன சத்தம் கேட்டாக்கூட கண் முழிச்சிடுவேன்...’ என்பார்கள் சிலர். இரவுத் தூக்கத்தில் சிறு சத்தம் கேட்டாலும் விழித்துக்கொள்வது நல்லதுதான் என்றாலும், இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. தூக்கத்திலிருந்து பாதியில் எழுந்தால், மீண்டும் அவ்வளவு எளிதில் தூக்கம் வராது.

Tuesday, May 15, 2018

Pallikudam

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்.
புகழ்பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன். இவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 71. 

Monday, May 14, 2018

Pallikudam

பிராய்லர் சிக்கனை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?

ஜி.லட்சுமணன்
   
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று, மக்கள்-மருத்துவர் உறவை மேம்படுத்துவதற்கான விழிப்புஉணர்வு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று  நோய்கள், அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து விளக்கமளிப்பார்கள். 

Thursday, May 10, 2018

Pallikudam

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமில்லை : தமிழக பாடத்திட்டத்தில் சேர அரசு சலுகை

சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2015 - 16ம் கல்வி ஆண்டு முதல், ஒன்றாம் வகுப்பில் இருந்து, படிப்படியாக, ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயமாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வரும் கல்வி ஆண்டில், நான்காம் வகுப்பு வரை, தமிழ் கட்டாயமாகிறது.

பிறமொழியை தாய்மொழியாக உடைய, மொழி சிறுபான்மை மாணவர்கள், தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்தால், அவர்களுக்கு, 10ம் வகுப்பில், தமிழ் பாடம் கட்டாயம் படிக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு மற்றும், 10ம் வகுப்பில் சேர்ந்தால், தமிழ் கட்டாயமில்லை என, ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக பாடத்திட்டம் இல்லாமல், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில், தமிழகத்திலேயே படித்த மாணவர்கள், தமிழக பாடத்திட்டத்தில், ஒன்பது அல்லது, 10ம் வகுப்பில் சேர்ந்தால், அவர்களுக்கும் தமிழ் கட்டாயம் இல்லை என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.பிற பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, 2017 - 18 கல்வியாண்டு வரை, 3ம் வகுப்பு வரை மட்டுமே, தமிழ் கட்டாயம் ஆகியுள்ளது. எனவே, நான்காம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையுள்ளவர்கள், தமிழை படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர்களுக்கு தமிழக பாடத்திட்டத்தில், திடீரென தமிழை கட்டாயமாக்க முடியாது என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இது குறித்து, உயர்நீதிமன்றமும் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றி, தமிழுக்கு விலக்கு அளிக்கும் அரசாணையை, அரசு பிறப்பித்துள்ளது. தமிழ் படிக்க விலக்கு அளிக்கும் சட்டம், 2024 - 25 வரை அமலில் இருக்கும். பின், பிறமொழி பாடத்திட்ட மாணவர்களுக்கும், 10ம் வகுப்பில், தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Pallikudam

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடைமாறுகிறது.
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டாக்டர் புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.