Friday, December 30, 2016

Pallikudam BHIM

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதாருடன் இணைந்த புதிய ஆப்...'பீம்!'
     டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, பயன்படுத்த எளிமையான, 'பீம்' எனப்படும் புதிய,' மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், வங்கிக் கணக்குடன் இணைக்கப் பட்டுள்ள ஆதார் எண் அடிப்படையில், கைவிரல் ரேகையை பதிவு செய்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.அதைத் தவிர, 'இ - வாலட்' எனப்படும், மின்னணு முறையில், பணப் பரிமாற்றம் செய்யவும், இந்த புதிய, 'ஆப்'பை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ஆப் பதிவிறக்கம் செய்து, நம் மொபைல் எண்ணை பதிவு செய்தால் போதும். நம் வங்கிக் கணக்கில் இருந்து, பணத்தை செலுத்துவதுடன், பணத்தையும் மிக சுலபமாக பெற முடியும்.
ஆதார் மூலமாக பரிவர்த்தனை செய்யக் கூடிய இந்த மொபைல் ஆப், என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பரிவர்த்தனை வாரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக பல்வேறு வங்கிகள் அறிமுகம் செய்துள்ள ஒருங்கிணைந்த பரிவர்த்தனை முறைகளுக்கும் பயன்படுத்தலாம்.
''சட்டமேதை அம்பேத்கரின் நினைவாக, இந்த ஆப்புக்கு, பீம் என்றுபெயரிட்டுள்ளது,'' என,
பிரதமர், நரேந்திர மோடி தெரிவித்தார்.இதன் அறிமுக விழாவில், டிஜிட்டல் பரிவர்த்த னையை ஊக்குவிக்கும் வகையில், போஸ்டர் கள், வாசகங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத் தவர்களுக்கு, பிரதமர் மோடி பரிசளித்தார். மேலும், மத்திய அரசால் சமீபத்தில் அறிவிக்கப் பட்ட, டிஜிட்டல் பரிவர்த் தனையை பயன் படுத்துவோருக்கு பரிசு அளிக்கும் திட்டத்தின் படி, முதல் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட் டோருக்குபரிசுகள் வழங்கப்பட்டன.

No comments: