Sunday, March 29, 2015

pallikudam

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயம்: புத்தகங்கள் விற்பனைக்குத் தயார்


 
      வரும் கல்வியாண்டில் (2015-16) ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்படுகிறது என்பதால், அதற்கான பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 
 
ஒன்று முதல் பத்து வரையிலான வகுப்புகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, வரும் கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வரும் கல்வியாண்டில் (2015-16) பல்வேறு வாரியங்களைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிகளும் கட்டாயமாக தமிழ் மொழிப் பாடம் கற்றலை 1-ஆம் வகுப்பில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனவே, 1-ஆம் வகுப்பு தமிழ் பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் சென்னை, மதுரை வட்டார அலுவலகத்தில் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன.

யார் யார் எங்கு வாங்கலாம்?: சென்னை வட்டார அலுவலகமானது, வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் சென்னை வட்டார அலுவலகத்தில் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மதுரை வட்டார அலுவலகத்தில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம். 1 ஆம் வகுப்பு தமிழ் பாடநூலின் விலை ரூ.60.

வட்டார அலுவலகங்கள் முகவரி: மதுரை: பாண்டியன் சூப்பர் மார்க்கெட், செந்தாமரை கிடங்கு, முடக்கு சாலை, தேனி சாலை, மதுரை, தொலைபேசி-0452-2381484, செல்லிடப்பேசி: 9894057786.

சென்னை: வேளச்சேரி பிரதான சாலை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அருகில், திருவான்மியூர், சென்னை, தொலைபேசி-044-22541326, செல்லிடப்பேசி: 9962478471, 9566116271.

Monday, March 23, 2015

Pallikudam

11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறை
கடினமான கணக்குகளையும் எளிதில் கண்டுபிடிக்கும் சுலபமான வழிகளில் தற்போது 11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறையை இப்போது காணலாம். இதற்காக செய்ய வேண்டியது மிகச்சிறிய நான்கு படிகள் தான்.==> முதலில் பெருக்க வேண்டிய எண்களில், முதல் எண்ணை முழுமையாகவும், இரண்டாவது எண்ணின் கடைசி எண்ணையும், கூட்டிக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக 15 * 17 ஐ எடுத்துக்கொள்வோம். இதில் முதல் எண்ணாண 15ஐ முழுமையாகவும், இரண்டாவது எண்ணான 17ல் 7ஐ மட்டும் எடுத்துக்கொண்டு கூட்டிக்கொள்வோம்.
15 + 7 = 22
==> இதன் மூலம் வரும் கூட்டல் விடையை 10 ஆல் பெருக்க வேண்டும். வரும் விடையை தனியாக எடுத்தெழுதி கொள்க.
22 * 10 = 220
==> அடுத்து, பெருக்க வேண்டிய இரண்டு எண்ணிலும் உள்ள கடைசி எண்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒன்றை ஒன்று பெருக்கிக் கொள்க.
15 * 17 = 5 7
5 * 7 = 35
==> தற்போது வந்த விடையையும், ஏற்கனவே 10ஆல் பெருக்க கிடைத்த விடையையும் கூட்டிக்கொள்ள, இறுதி பெருக்கல் விடை கிடைத்து விடும்.
220 + 35 = 255
ஃ 15* 17 = 255...
மற்றுமொரு உதாரணமாக
18 * 14 = ?
(18+4) * 10 = 220
8*4 = 32
220 + 32
------
252
------
ஃ 18 * 14 = 252....
Thomas

pallikudam

ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆண்டுவிழா 

       வல்லம் ஒன்றியம் , இராஜம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி யில் ஆண்டுவிழா நடைபெற்றது.
 பள்ளி தலைமை ஆசிரியர்  இரா.அருள்மொழி தலைமை வகித்தார் .
கிராம கல்வி குழு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் திரு.மு.ரவி முன்னிலை வகித்தார் .கணித பட்டதாரி ஆசிரியர் சங்கரநாராயணன் அனைவரையும் வரவேற்றார்.
    வல்லம் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் செல்வி இரா.உமாராணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
ஆசிரியர் நமச்சிவாயம் ஆண்டறிக்கை வாசித்தார்.
 பள்ளி மாணவர்கள் நடனம் நாடகம் பட்டிமன்றம் வில்லுபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.
 விழாவில் ஆசிரியர்கள் ஷாலினி ரேவதி சபிதா
    குறிஞ்சிபை  தலைமை ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக முத்துக்குமரன் நன்றி கூறினார்.

Pallikudam

ஏப்ரல் 19-இல் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
         மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 19-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

             அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேக்டோ) உயர்நிலைக் குழுவின் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இளங்கோவன் கூறியது:

               மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற பேரணிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆனால், அதன் பிறகும், தமிழக அரசு சார்பில் யாரையும் அழைத்துப் பேச்சு நடத்தவில்லை. இதையடுத்து, அடுத்தகட்டமாக, ஏப்ரல் 19-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
Source
Padasalai

Tuesday, March 17, 2015

Pallikudam

CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை....
CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை

PFRDA - CPS - GUIDELINES FOR WITHDRAWAL OF 25 % OF ACCUMULATED CONTRIBUTIONS BY NPS SUBSCRIBERSCLICK HERE...

PFRDA - CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15/01/2014 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது

நிபந்தனைகள்:

1) தேவைகள்

a) குழந்தைகளின் மேல் படிப்பு செலவு

b) குழந்தைகளின் திருமணம்

c) வீடு கட்டுவதற்கு (ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ளவர்கள் இது பொருந்தாது)

d) கீழ் கண்ட ஏதாவது ஒரு மருத்துவ செலவு நமக்கோ அல்லது நமது குடும்பத்தினர்க்கு (மனைவி அல்லது குழந்தை) ஏற்படும் பொழுது.

1. Cancer

2. Kidney Failure (End Stage Renal Failure)

3. Primary Pulmonary Arterial Hypertension

4. Multiple Sclerosis

5. Major Organ Transplant

6. Coronary Artery Bypass Graft

7. Aorta Graft Surgery

8. Heart Valve Surgery

9. Stroke

10. Myocardial Infarction (First Heart Attack)

11. Coma

12. Total blindness

13. Paralysis

இது போன்ற தருணங்களில் நாம் நமது CPS முதலிட்டில் இருந்து 25% வரை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் இதற்கு நாம் CPS திட்டத்தில் குறைந்தது 10 வருடம் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும் இது போன்று நாம் 3 முறை நமது CPS முதலிட்டிலிருந்து 25 % மிகாமல் பெற்றுகொள்ள முடியும்.

ஆனால் குறைந்தது 5 வருட இடைவெளியில்.

அதே வேளையில் மருத்துவ தேவைக்கு மட்டும் இந்த 5 வருட நிபந்தனை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, March 16, 2015

Pallikudam

பரிசு 30 ரூபாய்க்கு தருவதோ காசோலை; பெற்றோர், ஆசிரியர்கள் அதிருப்தி
கோவை : பள்ளிகள் அளவில், நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, 100 முதல் 30 ரூபாய் வரை வழங்கப்படும் பரிசுத்தொகை கட்டாயம் காசோலையாக மட்டுமே வழங்கவேண்டும் என்ற உத்தரவு பல்வேறு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பில், பள்ளி மாணவர்களுக்கு சுத்தம் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'முழு சுகாதார தமிழகம்' என்ற தலைப்பில், போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் அளவில், 2014 டிசம்பர் மாதமும் வட்டார அளவில் ஜனவரி மாதமும் நடந்தது. தற்போது, மாவட்ட, அளவில் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.இதில், ஓவியம், பேச்சு, கட்டுரை என மாணவர்களுக்கு பிரிவுகளின் அடிப்படையில், உடற்பயிற்சியின் அவசியம், சத்தான உணவு, கை கழுவும் தினம், தன் சுத்தம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.இதில், வெற்றி பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுத்தொகைக்கும், மாநில அளவில், 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில், பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்டம் என மூன்று கட்டங்களாக நடத்தும் போட்டிகளுக்கு, 14 லட்சத்து, 64 ஆயிரத்து 740 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.பள்ளிகள் அளவில் நடந்த போட்டிகளில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முறையே 100, 50 30 ரூபாய் என, பரிசுத்தொகையாக கொடுக்க, பள்ளி ஒன்றுக்கு 300 ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. 100, 50 30 ரூபாய்க்கான பரிசுப் பணத்தை கட்டாயம் காசோலையாகவே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இப்போட்டிகளுக்கு, மாணவர்களுக்கு பள்ளிகள் அளவில், 100 முதல் 30 ரூபாய் வரை; வட்டார அளவில், 350 முதல் 100 ரூபாய் வரை பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்படுகிறது. அதே சமயம், போட்டி நீதிபதிகளுக்கு மதிப்பூதியம் 6000 ரூபாய் வரையும், தேனீர் செலவினங்களுக்க 4000 ரூபாய் வரையும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் ஒருவர் கூறுகையில், 'என் மகன் மூன்றாவது வகுப்பு படிக்கிறான். ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றதற்காக, 30 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. 'மகனை வங்கிக்கு தனியாக அனுப்ப முடியுமா, கட்டாயம் நானும் உடன் செல்லவேண்டும். 30 ரூபாய் வாங்க, நான் 300 ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இதுபோன்று, குறைவான பரிசு தொகையை புத்தகமாகவோ, சான்றிதழ்களாகவோ வழங்கினால், மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்' என்றார்.
ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'மாணவர்களுக்கு பரிசுத்தொகை காசோலையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 50 ரூபாய்க்கும், 30௦ ரூபாய்க்கும் காசோலை வழங்குவதால், என்ன பயன்? இதில், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 'அதிகாரிகள் எதையும் சிந்திக்காமல் உத்தரவுகளை மட்டும் பிறப்பிக்கின்றனர்' என்றார்.

Pallikudam

திண்டிவனத்தில், ஆசிரியர்களின் சொந்த செலவில் ஏற்பாடு செய்த ஆங்கில உச்சரிப்பு சார்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி
அனைத்து ஆசிரியர் நண்பர்களுக்கும் பணிவான வணக்கம். எங்கோ ஒரு மூலையில், யாரோ ஒருவர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் குறைகூறும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் இதுபோன்ற ஆசிரியர்களும் பலர் உள்ளனர் என்று.

திண்டிவனம் அருகில் உள்ள ஒன்றியங்களைச் சேர்ந்த நண்பர்கள் திரு.கலைவாணன், திரு.ராஜேஷ், திரு.மூர்த்தி ஆகியோர் தங்கள் ஒன்றியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் தங்களுடைய சொந்த செலவில் 21.02.2015 சனிக்கிழமை Teaching of phonetic method ல் உள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் விதமாகவும், மற்ற ஆசிரியர்கள் பயன்படுத்திய வரும் சிறப்பு உக்திகளை பரிமாரிக்கொள்ளும் விதமாகவும் கலந்துரையாடல் கூட்டம் ராஜேஸ்வரி முருகன் மகாலில் நடைபெற்றது. இச்செய்தி அறிந்த விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு.சீதாராமன் அவர்கள் அக்கூட்டதிற்கு வந்து சிறப்புரை ஆற்றியதோடு, விடுமுறை தினம் என்றும் பாராமல் கலந்துகொண்ட ஆசிரியர்களையும், சுய ஆர்வத்துடன் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அனைத்து செலவுகளையும் செய்து வெற்றிகரமாக நடத்திய நண்பர்களின் முயற்சியையும் பாராட்டினார். நாமும் அந்த ஆசிரிய நண்பர்களை பாராட்டுவதோடு அல்லாமல் அனைவருக்கும் இதை தெரியபடுத்துவோம். ஆசிரியர் சமூகத்திற்கு மரியாதை சேர்ப்போம்.

Pallikudam

மாநில அடைவுத்திறனுக்கான ரெமுனரேஷன்....

மாவட்ட அலுவலகங்களுக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தது மாநில அடைவுத்திறனுக்கான ரெமுனரேஷன்...
தொடக்க நிலை தேர்வுகளுக்கு 2 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.125 வீதம் ரூ.250

உயர் தொடக்க நிலை(8 ஆம் வகுப்பிற்கு)- நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் 2 நாட்களுக்கு ரூ.200 ஆக மொத்தம் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 450 ஆசிரியர்களுக்கு 250.ஒன்றியத்திற்கு 8000 முதல் 9000 வரை ஒதுக்கீடு.
ஒன்றியங்கள் மாவட்ட அலுவலகத்தை உடனடியாக அனுகவும்.

Sunday, March 1, 2015

Pallikudam

ரூ.4.4 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெறுவது எப்படி?
           வருமான வரி உச்ச வரம்பில் எந்தவிதமான மாற்றமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. ஆனாலும் ரூ.4.4 லட்சம் வரி விலக்கு பெறமுடியும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி 'சலுகை' அறிவித்தது பெரும்பாலான மாத சம்பளக்காரர்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கும்.

அதற்கான விளக்கம் இதோ:
இந்த பட்ஜெட்டில் பிரிவு '80 டி' மூலமாக ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளை திரும்பப் பெறும் தொகை ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை மூத்த குடிமக்களுக்கு ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்க முடியாது என்பதால், அவர்கள் செய்யும் மருத்துவ செலவுகளை வரி செலுத்தும் வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள முடியும். இந்த தொகை 30,000 ரூபாய்.
மூன்றாவதாக, பென்ஷன் திட்டங்களில் செய்யும் முதலீடுகளில் 50,000 ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்து, மாத சம்பளக்காரர்களுக்கு போக்குவரத்து படி விலக்கு தொகை மாதத்துக்கு 1,600 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போது இந்தத் தொகை மாதத்துக்கு 800 ரூபாயாக இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் கொடுக்கப்பட்ட சலுகைகள் இவ்வளவுதான். ஏற்கெனவே இருக்கும் சலுகைகளை வைத்து 4.4 லட்ச ரூபாய்க்கு விலக்கு என்பதை அருண் ஜேட்லி அறிவித்திருக்கிறார்.
எப்படி 4.4 லட்ச ரூபாய்?
* 80 சி பிரிவு முதலீடு மூலமாக கிடைக்கும் வரிச் சலுகை ரூ. 1,50,000 (காப்பீடு, மியூச்சுவல் பண்ட், பிஎப் உள்ளிட்ட முதலீடுகள்)
* 80 சிசிடி பிரிவு மூலமாக கிடைக்கும் வரிச்சலுகை ரூ.50,000 (பென்ஷன் திட்டத்தில் முதலீடு)
* வீட்டுக்கடன் வட்டி - ரூ.2,00,000
* ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகை - ரூ.25,000
* போக்குவரத்து படி மூலம் கிடைக்கும் சலுகை - ரூ.19,200
மொத்தச் சலுகை ஆண்டுக்கு - ரூ.4,44,200.

Pallikudam

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்

         தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

அறிவிக்கை நாள் : 1.03.2015
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.
மேலும் விவரங்களுக்கு :
www.tnpsc.gov.in
இணைய தளத்தைப் பார்க்கவும். www. tnpsc.gov.in

pallikudam


-மாத ஊதியம் பெறுவோருக்கான பயண அலவன்ஸ் உச்சவரம்பு ரூ. 800ல் இருந்து ரூ. 1,600 ஆக அதகரிப்பு

-மருத்துவ காப்பீட்டு பிரீமியத்துக்கான வரி விலக்கு ரூ. 15,000ல் இருந்து 25,000 ஆக அதிகரிப்பு


-தூய்மை இந்தியா திட்டத்துக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு முழு வரிவிலக்கு


-சேவை வரி 12.34%-ல் இருந்து 14% ஆக அதிகரிப்பு

-செல்வந்த வரி விதிப்பு முறை கைவிடப்படுகிறது

-ஆண்டு வருமானம் ரூ1 கோடிக்கு அதிகம் பெறுவோர் 2% வரி செலுத்த வேண்டும்

-மாத ஊதியம் வாங்குவோரின் வருமான வரியில் மாற்றம் இல்லை

-ரூ1 லட்சத்துக்கும் அதிகமான பணபரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்

-மொத்த வரி வருவாய் ரூ. 14.49 லட்சம் கோடியாக இருக்கும்

-இந்த ஆண்டு மொத்த செலவு ரூ. 17.77 லட்சம் கோடியாக இருக்கும்

-திட்டச் செலவுகள் ரூ. 4.65 லட்சம் கோடி, திட்டம் சாரா செலவுகள் ரூ. 13.12 லட்சம் கோடி

-ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி குவிப்பதைத் தடுக்க சட்டம்

-வெளிநாட்டு முதலீடு, வங்கி முதலீடுகளை ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்

-வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இதை அவசியம் செய்ய வேண்டும்

-கருப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டு சிறை

-கருப்பு பணம் பதுக்கலை தடுக்க வரி விதிப்பில் திருத்தம்

-வெளிநாட்டு சொத்துகளை மறைத்தால் 7 ஆண்டுகள் சிறை

-வெளிநாட்டு முதலீடுகளை கணக்கில் காட்டாவிட்டால் கடும் நடவடிக்கை

-வெளிநாட்டில் கருப்புப் பணத்தை மறைத்து வைத்தால் 10 ஆண்டு சிறை

-வெளிநாட்டில் பதுக்கிய நிதியைப் போல் 300 சதவீதம் அபராதம்

-இதற்காக புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்

-தனிநபர் வருமான வரி விலக்கு சலுகை தொடரும்: அருண் ஜேட்லி

-கார்ப்பரேட் வரிக் குறைப்பு அடுத்த ஆண்டு முதல் அமலாகும்

-பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 25 சதவீதம் அதிகரிப்பு

-வர்த்தக நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைப்பு

-கார்பரேட் வரி குறைப்பு 4 ஆண்டுகள் அமலில் இருக்கும்

-பாதுகாப்புத் துறைக்கு ரூ2,46,727 கோடி ஒதுக்கீடு

-கல்வி, மதிய உணவிற்கு ரூ. 68,968 கோடி நிதி

-சுற்றுச் சூழலை பாதிக்காத மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு

-பீகார், மேற்கு வங்கத்துக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்: அருண் ஜேட்லி

-முதுகுவலி பிரச்சினை: பட்ஜெட் உரையை அமர்ந்து வாசித்தார் அருண் ஜெட்லி

-தமிழகம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல், அஸ்ஸாமில் எய்ம்எஸ் மருத்துவமனைகள்

-டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்

-பட்ஜெட் உரையை அமர்ந்து வாசிக்கிறார் நிதியமைச்சர்அருண் ஜெட்லி

-சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் கோரிக்கையை ஏற்றார்

-தேவையெனில் அமர்ந்தே பட்ஜெட் படியுங்கள் : சுமித்ரா மகாஜன்

-கடந்தமுறை பட்ஜெட் உரை வாசிக்கும் போது சிறிது ஓய்வு எடுத்தார் ஜெட்லி

-இந்திய தங்க நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் நாணய இறக்குமதி குறையும்

-அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் வெளியிடப்படும்

-தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் தங்கத்தை அடகு வைப்பது குறையும்

-மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ75 கோடி ஒதுக்கீடு

-நிர்பயா திட்டத்துக்கு கூடுதலாக ரூஆயிரம் கோடி ஒதுக்கீடு

-150 நாடுகளைச் சேர்ந்தோர் இந்தியாவுக்கு வந்து விசா பெற்றுக் கொள்ள அனுமதி

- இப்போது 43 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே இந்த வசதி உள்ளது

-100 நாள் ஊரக வேலை திட்டத்திற்கு 34,699 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

-அசோகச் சக்கரம் பொறித்த தங்க நாணயம் வெளியிடப்படும்

-தங்க பத்திரத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்

-கூடங்குளம் 2வது அணு உலையானது 2015-16ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கும்: அருண் ஜேட்லி

-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

-நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ. 340 பில்லியனாக உள்ளது

-புதிய சாப்ட்வேர் நிறுவனங்கள் தொடங்க ரூ. 1,000 கோடி நிதி

-சுயதொழில் தொடங்குவோருக்கு உதவ ரூ. 1,000 கோடி

-4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுடைய 5 பெரும் மின் திட்டங்கள்

-ரயில்வே, சாலை திட்டங்களுக்கு நிதி திரட்ட வரியில்லா பத்திரங்கள்

-பள்ளிகளில் டி.சி பெறாமல் வெளியேறும் சிறுபான்மையினர் இன இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற புதிய சான்றிதழ் அறிமுகம்

-உள்கட்டமைப்பு வசதிக்கு ரூ70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

-சிறுபான்மை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு 'நயி மன்சில்' திட்டம்

-முதியோர் பென்சன் திட்டம் அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் அமலாகும்

-இதற்கான நிதி பிஎப் கணக்குகளில் கேட்பாரற்று கிடக்கும் பணம் மூலம் பெறப்படும்

-உரிமை கோரா பி.பி.எப். தொகை ரூ3 ஆயிரம் கோடி மற்றும் ஈ.பி.எப். தொகை ரூ6 ஆயிரம் கோடி முதியோர் நலனுக்கு ஒதுக்கீடு

-நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும்

-ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில் பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்

-முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்

-தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற நடவடிக்கை

-நாடு முழுவதும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் திட்டம் அமலாக்கப்படும்

-ஆண்டுக்கு ரூ. 12 செலுத்தினால் விபத்தில் பலியானவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்

-முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்.

pallikudam

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நிகழாண்டு பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள், ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்குநரக மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது: இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நல்ல குடிநீர் வசதி செய்து கொடுத்தல், கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காகவும் ஆண்டு விழா நடத்த வேண்டும். மேலும், பள்ளி ஆண்டு விழாவின்போது, மாணவர்களுக்கு கலை தொடர்பான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், கவுன்சிலர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் கல்வியாளர்கள் பங்குபெற செய்ய வேண்டும். ஆண்டு விழா நடத்துவதற்காக, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ. 2,250, 6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 2,450 என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இத்தொகையினை தொடர்புடைய ஒன்றிய கல்வி அலுவலகத்தில் உடனடியாகப் பெற்று, பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள் ஆண்டு விழாவை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.