Friday, April 19, 2024

தேர்தல் பணி

 ஒதுக்கப்பட்ட ஊருக்குள் பேருந்து 

இறக்கிவிட்டதும்

எங்களுக்குள்

ஏறிக் கொண்டது

தேர்தல் பணி..


Zonal offficer

கொடுத்துப் போன

கோணிமூட்டையை

கொட்டியதும்

கொத்து கொத்தாய்

வந்து விழுந்தன

ஃபாரங்கள்..


EVM எந்திரங்களை

பிறந்த குழந்தை 

போல பாதுகாத்தோம்..


சின்ன 

வகுப்பறை

ஒரே ட்யூப்லைட்..

ஓரமாய் ஓடும் 

மின்விசிறி..

இப்படி கொடுத்ததற்குள்

வாழ கற்றுக் கொடுத்தது

தேர்தல் பணி..


குழாய்

இருந்தது 

தண்ணீர் இல்லை..

பாத்ரூம்

கதவு உடைந்திருந்தது..

சில இடங்களில்

பாத்ரூமே 

இல்லை என்று கேள்விபட்ட  போது மனம் தானாக

ஆறுதலடைந்தது..


புரண்டு புரண்டு படுத்தும்

இமைகளில்

தூக்கம்

அமரவில்லை..


பக்கத்தில் P3

படுத்ததும்

தூக்கம் அவரை வாரி

அணைத்துக் கொண்டது..


P1 'குபீர் குபீர்'

என்று 

எழுந்து மீண்டும்

படுத்துக் கொண்டார்..


வந்த 

தண்ணீரை

நெய் போல

ஊற்றி குளித்து

ஐந்து மணிக்கே

தயாரானோம்..


ஆறுமணிக்கு

வந்த

ஏஜெண்டுகள்..

அவர்கள் கூட

வந்த

குளிக்காத 

ஆட்கள் என்று

Mockpoll 

தொடங்கியது..


ஆயிரம்

முறை வீடியோ

பார்த்தாலும்

அங்கு ஒருமுறை

சீல் வைப்பதில்

தடுமாறி 

சரிசெய்து தொடங்கியது உண்மை 

வாக்குப்பதிவு..


ஏழு மணிக்கு

துவங்கிய 

வரிசை

ரயில் பெட்டி 

போல நீண்டது..


அடிக்கடி

Total வுடன்

17A 

ஒப்பிட்டு

ஒரே எண்ணிக்கை வர

குலதெய்வத்தை

கும்பிட்டேன்..


இட்லி 

வந்து 

வயிற்றில்

ஓட்டுப் போட மணி

பத்து ஆனது..


நடுவே ஒரு

தேநீரில்

தலைவலிக்கு

ஒத்தடம் கொடுத்தேன்..


மதிய உணவை

மறக்கும் அளவுக்கு

வாக்குப்பதிவு கூட்டம்..


கையுறை

சானிடைசர்

முகக்கவசம்

எல்லாம் மறைமுக

வேட்பாளாரான

கொரோனாவின் 

சின்னங்கள்..


ஆறு  மணிக்கு

மேல்

அடங்கத் தொடங்கியது

வெளிச்சமும்

கூட்டமும்..


ஒரு வழியாக

ஏழு மணிக்கு

Close அழுத்தியதும்

நிம்மதி Open ஆனது..


சீல் வைத்து

முடித்ததும்

ஓரிருவரை தவிர

காற்றாய்

பறந்தனர் ஏஜென்டுகள்..


Po டைரி

17C 

Declaration form

எல்லாம் 

முடித்து நிமிர்ந்த போது

முட்கள் ஒன்பதை 

முத்தமிட்டிருந்தது..


P1 P2 P3

'ஒருநாள் குடும்பம்'

போல

பழகியதால்

எங்கள் ஒற்றுமையின்

இசையில்

சின்ன சின்ன 

சலசலப்புகள்

காணாமல் போனது..


இரவு உணவுக்கு

பதில் தந்த

வாழைப்பழதத்தில்

பசி வழுக்கி

விழுந்தது

வயிற்றுக்குள்..


பத்து மணிக்கு

மேல்

பறந்து வந்த

Zonal 

மொத்தத்தையும்

கொத்திக் கொண்டு

மீண்டும் பறந்தார்..


12 மணிக்கு

மேல் 

துரத்திய நாய்களை தாண்டி வீடுவந்த போது

நாட்டுப்பணி ஆற்றிய

ஒரு ராணுவ வீரனின்

கம்பீரம் எனக்குள்..

Monday, April 1, 2024

பெரும்பூண்டி பள்ளி ஆண்டு விழா

பெரும்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா வெகு சிறப்பாக நடை பெற்றது.மாணவர்களின் நடனம் நாடகம் அனைத்தும் சிறப்பு வட்டார கல்வி அலுவலர்கள் வாழ்த்தினார்கள்.




Wednesday, March 13, 2024

அறிவின் பயன்

அறிவு…….


ஒரு தனியார் ஆஸ்பித்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் இறந்து போகிறார்கள். இது அந்த​ ஆஸ்பித்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த​ அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது. பல​ நாடுகளிலிருந்து மிக​ சிறந்த​ மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர். மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன​ தான் நடக்கிறது என்று பார்க்க​ மிக​ பெரிய​ மருத்துவ​ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த​ குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ண ஆக​ போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க​.....  திடிரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் மட்டும் பகுதி நேரமாக​ கூட்டி, பெருக்கும் வேலை செய்யும் முணியம்மா... வந்தவுடனையே நோயாளியின் ஆக்சிஜன் சப்ளை இயந்திரத்தின் PLUGகை​ பிடுங்கிவிட்டு தனது செல் போனை சார்ஜில் போட்டுவிட்டு கடமையே கண்ணாக அந்த​ அறையை பெருக்க​ ஆரம்பித்தாள்...  

Saturday, March 2, 2024

அவளும் நானும்

 அவளுக்கு என்னுடன் பயணிக்க வேண்டுமன்றல்லாம் ஆசையில்லை.


இருளில் தனியே நின்றுகொண்டிருந்த என்னை பாவம் பார்த்து கொஞ்ச தூரம் கைபிடித்து  

கூட்டிவந்தாள் அவ்வளவோ தான்!

Tuesday, February 20, 2024

உலக தாய்மொழி தினம்.

உலக தாய்மொழி தினம்

✍ ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள பல்வேறு தாய்மொழிகளையும், பன்மொழித்தன்மையையும் கொண்டாடுவதற்கான ஒரு தினமாகும்.

✍ தாய்மொழி என்பது ஒரு மனிதனின் அடையாளம், கலாச்சார வெளிப்பாடு, எண்ணம் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான கருவி, சமூக ஒற்றுமை மற்றும் அறிவு வளர்ச்சிக்கு முக்கியமானது.

வரலாறு:

✍ 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி வங்காள மொழிக்காக போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

✍ 1999ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

✍ பன்மொழித்தன்மை உலகத்தை சுவாரஸ்யமாக்குகிறது. வெவ்வேறு கலாச்சாரங்களை பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது. புதிய யோசனைகள் மற்றும் கருத்துகளை உருவாக்க உதவுகிறது. உலகளாவிய புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புக்கு வழிவகுக்கிறது.

✍ உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில், பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை கொண்டாடுவதற்கான சில வழிகள்:

✍ உங்கள் தாய்மொழியில் ஒரு புத்தகம் அல்லது கவிதையை எழுதுங்கள் அல்லது படியுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியில் ஒரு பாடலைப் பாடுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியைப் பேசும் மற்றவர்களுடன் உரையாடுங்கள்.

✍ உங்கள் தாய்மொழியின் முக்கியத்துவம் பற்றி பிறரிடம் கூறுங்கள்.

இந்த தினத்தை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு உங்கள் தாய்மொழியைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அதைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் உதவுங்கள்.

 

ஒரு ஊரில் ஒரு விவசாயி நெல் பயிரிட்டான்.

நல்ல விளைச்சல் கண்டது அந்த நிலம், ஒரு நாள் நிலத்தை சுற்றி பார்த்தவன்.

ஒரு வரப்பின் ஓரம் நின்று தனக்குள்ளே பேசி கொண்டான்.

ஆ! நல்ல விளைச்சல் நாளை ஆட்களை அழைத்து வந்து எப்படியும் அறுவடை செய்துவிட வேண்டும், என கூறினான்.

இதை அந்த விளைச்சலில் கூடு கட்டி கூட்டில் இருந்த குருவி குஞ்சுகள் கேட்டுகொண்டு இருந்தது.

அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை ஆட்களை கூட்டி வந்து அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளை அறுவடை செய்யமாட்டார் கவலை பட வேண்டாம் என கூறியது.

மறுநாள் அறுவடை நடைபெறவில்லை.

மறுநாள் வந்த விவசாயி அதே இடத்தில் நின்றுகொண்டு எப்படியாச்சும் வெளியூரில் இருந்து ஆட்களை கொண்டுவந்தாவது நாளை அறுவடை செய்துவிட வேண்டும் என் கூறினான்.

மீண்டும் அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை வெளியூரில் இருந்தாவது ஆட்களை கூட்டி வந்து அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளையும் அறுவடை செய்யமாட்டார் கவலை பட வேண்டாம் என கூறியது.

அது போலவே மறுநாளும் அறுவடை நடக்கவில்லை.

மறுநாள் வந்த விவசாயி அதே இடத்தில் நின்றுகொண்டு எப்படியாச்சும் நாளை நாமே இறங்கியாவது அறுவடை செய்துவிட வேண்டும் என் கூறினான்.

மீண்டும் அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை அவரே இறங்கி அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளையும் அறுவடை கட்டாயம் நடைபெறும்,வாருங்கள் நாம் வேறு இடத்திற்கு பத்திரமாக சென்றுவிடலாம் என கூறியது.

உடனே குஞ்சுகள் ஏன் அம்மா நாளை கட்டாயம் நடைபெறும் என்று கூறுகின்றீர்கள் என கேட்டன,

அதற்கு தாய் குருவி கூறியது

இதுநாள் வரை விவசாயி அடுத்தவர் மீது நம்பிக்கை வைத்திருந்தான்,

ஆனால் இன்றோ தன் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறான். என கூறியது.

*தன்னம்பிக்கை வெல்வது உறுதி*

என் தம்பிகளின் வெற்றி உறுதி👍👍👍

Tuesday, February 13, 2024

வலுவிழக்கும் ஜாக்டோஜியோ போராட்டம்

 *243 ரத்து கோரிக்கை இடம்பெற்றதால் வலுவை இழக்கும் 

ஜாக்டோ-ஜியோ போராட்டம்*



*CPS ஒழிப்புக்காக நாம் எப்போதும் போராட தயார்*

🩸

*நம்முடைய வாழ்வாதார கோரிக்கை பங்களிப்புத் திட்டத்தை ரத்து செய்வது & நம்முடைய பதவி உயர்வு கோரிக்கையும் புறந்தள்ளி விட முடியாது.*

 *ஆனால் ஜாக்டோ ஜியோ முரண்பாடான கோரிக்கைகளை வைக்காமல் பொது கோரிக்கைகளுக்காக போராட வேண்டும்.*

*243 ரத்து செய்ய வேண்டும் என்பதை மாற்றி திருத்தங்களை செய்ய வேண்டும்.*

*என்கிற கோரிக்கை வைத்தால்  உடன்பாடு உண்டு.* 

*இல்லையேல் நடுநிலைப்பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதில் பெரும் சிக்கல் உள்ளது.

CPS ஐ காட்டி 243 ரத்து செய்ய நினைப்பதை தடுக்கவேண்டும்.*

*ஆகவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு என்ற இரண்டு கோரிக்கைகளை வைத்து மட்டுமே போராட வேண்டும்.*

*243 ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை இடம் பெறக் கூடாது.*

Thursday, January 25, 2024

நன்றி அறிவிப்பு

 “நீதி வெல்லும்”

நடைமேடையில் ஓரமாக வாகனம் வராத இடத்தில் ஒரு குழந்தை விளையாடி கொண்டு இருந்தது. 

ஒரு 15 குழந்தைகள் அடிக்கடி வாகனம் செல்லும் சாலையில் விளையாடி கொண்டு இருந்தனர். 

அச்சாலை வழியே வேகமாக தனது பாதையில் வந்த லாரியின் ஓட்டுநர் சாலையில் 15 சிறுவர்கள் விளையாடுவதை பார்த்தார்.

அதே சமயம் நடைமேடையில் ஒரு குழந்தை மட்டும் விளையாடுவதை பார்த்தார்.

உடனே வேகமாக வந்த லாரியை நடைமேடை பக்கம் திருப்பி அக்குழந்தை மீது ஏற்றி 15 குழந்தைகளின் உயிரை காத்தார்.

கூட்டமாக செய்தால் தவறும் சரியாக கருதப்படும் மனநிலையில் பலர்.

ஆனால் 

சில நீதிமான்களால் மட்டுமே

தவறான பாதையில் செல்பரை தண்டிக்க முடியும்.

வாருங்கள்.

வெற்றி பெருவோம்!

போர்… போர்…




Thursday, January 4, 2024

இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனம்

 1500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்குதல்- ஆணை வெளியீடு.


பள்ளிக்கல்வி - ஆசிரியர் நேரடி நியமனம்- அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பிட அனுமதி வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர் 1500 பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டதில் தேர்வாகும் தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில்.. முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GO No.07 dt 04.01.2024 - Sec Gr Teachers - Addl Posts GO👇

Downlode Here

மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் - நன்மையே!

 தொடக்கக் கல்வித் துறையில் மாநில அளவில் முன்னுரிமையால் ஏற்படும் நன்மைகள்

1. அனைத்து ஆசிரியர்களும் மாநில அளவில் பணி மாறுதல் பெறலாம் குறிப்பாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்


2. அனைத்து ஆசிரியர்களுக்கும் சம நிலையில் பதவி உயர்வு. மாநிலத்தின் எந்த பகுதியில் காலி பணியிடமிருக்கோ அங்கு பதவி உயர்வு பெற்ற பிறகு மீண்டும் பணி மாறுதல் பெற்றுக் கொள்ளலாம்
3.பள்ளிக் கல்வித்துறை போன்றே தொடக்க கல்வித் துறையிலும் ஆசிரியர் வருகை பதிவேட்டில் நியமனம் /பதவி உயர்வு தேதியின் அடிப்படையில் ஆசிரியர் பெயர் எழுதப்படும்
 
4.தொடக்கக் கல்வித் துறையில் பணி மாறுதல் பெற்ற தேதியின் அடிப்படையில் ஆசிரியர் வருகை பதிவேட்டில் பெயர் எழுதுவது நீக்கப்படும்

5 இனி பள்ளிக்கல்வித்துறை போன்றே கலந்தாய்வு நடைபெற்ற பிறகே பதவி உயர்வு நடைபெறும்

6. மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் பராமரிக்கும் பொழுது நம்பகத்தன்மை உள்ளதாகவும் இருக்கும். அனைவரும் மாநில அளவில் தெரிந்து கொள்ளும்படியாகவும் இருக்கும்

பள்ளி திறந்த முதல் நாள் CL எடுக்கலாமா?

 தெரிந்து கொள்ளுவோம்!


வழக்கமாக ஒவ்வொரு விடுமுறை காலங்களில் ஏற்படும் சந்தேகம் தான் 😁

ஜனவரி 2 பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL கட்டாயம் கேட்கிறார் வழங்கலாமா?

இந்த முறை 2/1/24 அன்று CL வழங்க இயலாது.....

ஏன்? அவர் last working day 22/12/23 வந்து விட்டார்...

Either last working day or first working day வந்தால் போதும் என நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் 🤔

CL vacation/ non vacation அனைத்து பணியாளர்களுக்கும் பொதுவானது ...

CL (விடுப்பு+விடுமுறை ) 10 நாள்கள் வரை allowed..... 

11 வது நாள் பணியில் இருக்க வேண்டும் 

( எதிர்பாராத விதமாக 11 வது நாள் இயற்கை பேரிடர், தலைவர்கள் மரணம் என அரசு திடீரென விடுமுறை அறிவித்தார்கள் எனில் பிரச்சினை இல்லை, அனுமதி உண்டு)...

இந்த முறை 23 /12/23 முதல் 1/1/24 வரை 10 நாள்கள் விடுமுறை....

2/1/24 CL எனில் 10 விடுமுறை நாள்கள் + 1 விடுப்பு நாள் , என 11 நாள்கள் ஆகிறது....

(22/12/23 கடைசியாக பணிக்கு வந்த நாள் , அதற்கு பிறகு 3/1/24 எனில் 11 நாள்கள் ) எனவே இது CL விதிகளின் படி எடுக்க இயலாது ....

எனவே தான் இந்த ஆண்டு 2/1/24 பள்ளி திறக்கும் நாளில் போது ( 12 CL கைவசம் இருந்த போதிலும் 😃) CL அனுமதிக்க இயலாது ..

ஒருவேளை 22/12/23 கடைசி வேலை நாள் போது பிற்பகலில் CL அல்லது நாள் முழுவதும் CL அனுமதித்து இருந்தாலும் அதுவும் தவறு தான்...

சரி....

 2/1/24 அன்று கட்டாயம் ஒரு ஆசிரியருக்கு விடுப்பு தேவை... என்ன செய்யலாம்?

CL தான் வழங்க இயலாது....

 EL எடுக்கலாம்

அரசு விடுமுறை முன் இணைப்பு அனுமதி உண்டு ...

2/1/24 ஒரு நாள் EL எனில்...

முன்னர் உள்ள விடுமுறை காலம் முன் அனுமதி ...

(*ஒரு நாள் மட்டுமே EL) 

(22/12/23 பணிக்கு வந்து இருக்க வேண்டும்) 

22/12/23 அன்றும் வரவில்லை

2/1/24 அன்றும் வரவில்லை என்றால்

 12 நாள்கள் EL ஆக மாறிவிடும்...

இந்த பதிவின் நோக்கம்...

1) கோடை விடுமுறை எப்போதும் 10 நாள்களுக்கு மேல் என்பதால்

 ஏப்ரல் கடைசி வேலை நாள்...

அதே போல் ஜூன் பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று 

எப்போதும் CL எடுக்க இயலாது

2) காலாண்டு / அரையாண்டு விடுமுறை பொறுத்தவரை ஆண்டிற்கு ஆண்டு 

 மாறுபடும் ....

அந்த ஆண்டில் 10 நாள்களுக்குள் எனில் CL எடுக்கலாம் ...

 விடுப்பு+விடுமுறை 10 நாள்களுக்கு மேல் என்றால் எடுக்க இயலாது .

EL எடுக்கலாம்

அரசு விடுமுறை முன் இணைப்பு அனுமதி உண்டு ...

2/1/24 ஒரு நாள் EL எனில்...
முன்னர் உள்ள விடுமுறை காலம் முன் அனுமதி ...
(*ஒரு நாள் மட்டுமே EL) 

(22/12/23 பணிக்கு வந்து இருக்க வேண்டும்) 

22/12/23 அன்றும் வரவில்லை
2/1/24 அன்றும் வரவில்லை என்றால்
 12 நாள்கள் EL ஆக மாறிவிடும்...

இந்த பதிவின் நோக்கம்...

1) கோடை விடுமுறை எப்போதும் 10 நாள்களுக்கு மேல் என்பதால்
 ஏப்ரல் கடைசி வேலை நாள்...

அதே போல் ஜூன் பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று 
எப்போதும் CL எடுக்க இயலாது

2) காலாண்டு / அரையாண்டு விடுமுறை பொறுத்தவரை ஆண்டிற்கு ஆண்டு 
 மாறுபடும் ....

அந்த ஆண்டில் 10 நாள்களுக்குள் எனில் CL எடுக்கலாம் ...

 விடுப்பு+விடுமுறை 10 நாள்களுக்கு மேல் என்றால் எடுக்க இயலாது .