Saturday, November 30, 2013

PallikudamNEWS

திறந்தநிலை பட்டங்கள் நிலை: மீண்டும் தெளிவுபடுத்திய யு.ஜி.சி.,

              தொலை தூர கல்வி மற்றும் திறந்த நிலை கல்வி முறையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் கல்லூரிகளில் படித்து பெறும் பட்டங்களுக்கு சமமானது என, யு.ஜி.சி., மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.
          நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்கள், தொலை தூர கல்வி, திறந்த நிலை கல்வி முறைகளில் பட்டங்களை வழங்கி வருகின்றன. அடிப்படை கல்வி முடித்தவர்களும், இந்த முறைகளில் பயின்று பட்டதாரியாக உயர்த்துள்ளனர். இதில், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் இடம் பெற்றுள்ளனர். திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறையில் பட்டங்களை பெற்று பணியாற்றுவோர், தாங்கள் பட்டதாரிகள் என்பதால், உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
           ஆனால், இவ்வகையில் பெற்ற பட்டங்கள், ரெகுலர் முறையில் பெற்ற பட்டங்களுக்கு சமமானது அல்ல என, தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, இவ்வகை பட்டம் பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர்.
            இந்நிலையில், இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறைக்கு சமமானது என, யு.ஜி.சி., தெளிவுபடுத்திஉள்ளது. இதுகுறித்து, நாடெங்கிலும் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைகளுக்கு, யு.ஜி.சி. அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
              பல்கலைக்கழகங்கள் திறந்த நிலை மற்றும் தொலை தூர கல்வி முறைகளில் பட்டம், பட்டய படிப்புகளை நடத்தி, அதற்கான சான்றுகளை வழங்கியுள்ளன. இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறையில் பெறப்படும் பட்டங்களுக்கு சமமானவை என யு.ஜி.சி., ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
               சில இடங்களில் இது குறித்த சர்ச்சை நீடிப்பதால், இவ்வகை பட்டங்கள் ரெகுலர் முறைக்கு சமமான பட்டங்களே என, மீண்டும் அறிவிக்கப்படுகிறது. அவர்கள் பெற்ற பட்டங்களும் அங்கீகரிக்கப்படும் என, அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PallikudamNEWS

BSNL Bill Discount 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி


அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வாடகை கழிவுத்தொகை 20% லிருந்து 10% ஆக குறைப்பு, அரசு ஊழியர்கள் அதிருப்தி

Monday, November 25, 2013

PallikudamNEWS

தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

        நீதிமன்ற வழக்குகளின் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 27.11.2013 அன்று உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கூட்டம் நடத்த தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

Sunday, November 24, 2013

PallikudamHSSEMIS

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் செலவு
பள்ளிக்கல்வித் துறையில் அரசு 16 வகையான இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. இது போக மாணவர்கள் பற்றிய முழு விபரங்களை பதிவு செய்யும், தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்களின் விபரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அந்த கார்டு மூலம் மாணவர் பற்றிய முழு விபரங்களையும் எளிதாக கண்டறிய முடியும

்.தற்போது, இந்த பணிகளுக்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் விபரங்கள் 30.9.12ம் தேதி அடிப்படையில் சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய ஒரு மாணவருக்கு ரூ.15 வீதம் தலைமை ஆசிரியருக்கு செலவாகியுள்ளது. அதன்பின், மேலும் மாணவர்கள் விபரங்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு பள்ளிக்கும் குறுந்தகடு வழங்கப்பட்டு, 2 நாள் அவகாசத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான செலவையும் பள்ளி தலைமை ஆசிரியர்களே செய்தனர்.இந்நிலையில் 30.4.2013 நிலவரப்படி தகவல் தருமாறு கோரப்பட்டது.

மேலும், மாணவர்களின் புகைப்படமும், ஆதார் எண்ணும் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் ஒரு மாணவருக்கு மேலும் ரூ.20 என்ற வீதம் தலைமை ஆசிரியர்கள் செலவு செய்துள்ளனர்.இது தவிர ஆரம்பப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 5ம் வகுப்பும், நடுநிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பும் முடித்த மாணவர்கள் உயர்கல்விக்காக வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த வகை மாணவர்களின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும் சேகரிப்பதில் மிகுந்த நடைமுறை சிக்கல்களை தலைமை ஆசிரியர்கள் சந்தித்துள்ளனர். சேகரிப்பதற்கான கால அவகாசமும் வழங்கப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டதாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன், செயலாளர் சுடலைமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்த பணிகளை செய்வதற்கு கிராமப்பகுதியில் வசதி குறைவாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், புகைப்பட கலைஞர் மற்றும் கணினி படித்தவர்களை தேடி அலையும் நிலை உள்ளதால் கற்றல், கற்பித்தல் பணியும் பாதிக்கப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் புத்தகப்பை, புத்தகங்கள், காலணி, சீருடை போன்ற பெரிய இலவச திட்டங்களை கல்வித்துறை செயல்படுத்தும் போது அவற்றை பள்ளிகளுக்கு எடுத்து செல்வதற்கான வழிச் செலவினங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.

PallikudamEMIS collection

EMIS - Collections



Tutorials

How to EMIS - Photos Ready Offline with out Special Softwares -  
Click Here For Download Tutorial 5 

How to EMIS - Photos Ready with Adobe Photoshop Software 
- Click Here For Download Tutorial 4 

How to EMIS - Photos Ready within One Second via Online- 
Click Here For Download Tutorial 3
   
     Tamilnadu Department of School Education Given the new Instructions about EMIS offline Software. Herewith given the download link of the EMIS offline Tool with printing support.Below given link for How to use the Printing Tool document for the guidance. Circulated to the Schools for the effective validation of the Student records. Uninstall previous version and install the below one.

How to Use EMIS Offline Printing Tool - 

How to Install EMIS Offline Software Old Version? - Tutorial 1

New Version EMIS - Full Software
EMIS Offline Printing Software New Version -
Click Here For Download
Easy Access Codes 
EMIS Teacher Profile Easy Access Codes - 

Saturday, November 23, 2013

PallikudamTET

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்


பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்.

ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ். ஆசிரியர் தகுதித் தேர்வு, சான்றிதழ் விநியோகம் ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. 
          இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
           தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
           ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
                    இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
           2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
               ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
                தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

Pallikudamnews

அரசு பள்ளிகளில் 6,545 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவு

              எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரத்து 545 தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமித்துக் கொள்ள கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.
          தமிழக பள்ளிகளில் சுமார் 16 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பாட வாரிய நியமிக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
           இதற்கிடையில், அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு இறுதி தேர்வுக்கும் இன்னும் 4 மாதங்களே உள்ளன. இந்நிலையில், பல பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ளதால், இருக்கிற ஆசிரியர்களை வைத்து சமாளித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ், சிறுபான்மை மொழி, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், இந்திய பண்பாடு மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகிய பாடங்கள் தவிர இதர பாடங்களில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 645 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
                      இதேபோல் தமிழ் மற்றும் சமூக அறிவியல் தவிர இதர பாடங்களில் உள்ள 3 ஆயிரத்து 900 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரையோ அல்லது அதிகபட்சமாக 7 மாதங்கள் வரையோ இவர்கள் தற்காலிகமாக பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்க ஏதுவாக ரூ.20.18 கோடி ஒதுக்கீடு செய்தும் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாவட்ட வாரியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முதன்மை கல்வி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

PallikudamNEWS.

ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம்


              இனிமேல் ஆரம்ப பள்ளிகளில், ஒரே ஆசிரியரே, பல பாடங்களை எடுக்க வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி ஆசிரியரை நியமிக்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில்தான் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

              முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போதைய நிலையில், மாநிலத்தில் 25% பள்ளிகளில், ஒவ்வொரு பாடத்திற்கும் தனி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் பிற பள்ளிகளில், ஒரே ஆசிரியர் பல பாடங்களை நடத்தும் நிலைமைதான் உள்ளது.

               ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம், மாநில வாரியத்தில் சேராத அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. ஒரு ஆசிரியர் ஒரே பாடத்தில் கவனம் செலுத்தி அதை நடத்துவதன் மூலம், அவருக்கு பணிச்சுமை குறைவதோடு, பாடத்தையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Wednesday, November 20, 2013

PallikudamNEWS

தமிழக பொது தேர்வுகள் மார்ச் 3ம் தேதியில் இருந்து நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


            சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1ம் தேதியில் இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பொது தேர்வுகள், மார்ச் 3ம் தேதியில் இருந்து நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

             பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் உட்பட அனைத்து வகுப்பிற்கும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து அரையாண்டு தேர்வு துவங்குகிறது. இதையடுத்து, பொது தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்வுதுறை தீவிரமாக செய்து வருகின்றன.

                    கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வை 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை 8 லட்சம் பேரும் எழுதினர். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை 11.50 லட்சமாகவும், பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை 8.50 லட்சமாகவும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சரியான புள்ளி விவரம் டிசம்பர் 15ம் தேதிக்குள் தெரிந்துவிடும். 

                 மாவட்ட வாரியாக பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரங்களை பெறுவதற்காக, 11 வகையான தகவல்கள் அடங்கிய படிவம் பள்ளிகளுக்கு ஏற்கனவே வினியாகம் செய்யப்பட்டன. இதில் கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து மாணவ, மாணவியர், ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டனர்.
 
             இதைத்தொடர்ந்து, இந்த விவரங்கள் அனைத்தும் தேர்வுதுறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யும் பணி ஓரிரு நாளில் துவங்கும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பொது தேர்வுகள், மார்ச் 3ம் தேதியில் (திங்கள் கிழமை) இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

                       வழக்கமாக, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் தனித்தனியே நடைபெறும். வரும் ஆண்டில் இரு தேர்வுகளையும் ஒன்றாக நடத்துவது குறித்து தேர்வுதுறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மார்ச் 3ம் வாரத்திற்குள், இரு தேர்வுகளையும் நடத்தி முடிக்க தேர்வு துறை திட்டமிட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

PallikudamNEWS

பள்ளிக்கல்வி - 01.11.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு

        பள்ளிக்கல்வி - 01.11.2013 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் / ஆசிரியரல்லாதோர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு 

           (பின் குறிப்பு- ஒவ்வொரு முறையும் பணி நியமன கலந்தாய்வுக்கு முன்னர் அனைத்து பள்ளிகளிலும் காலி பணியிட பட்டியல் விவரம் கோரப்படுவது நடைமுறை. தற்போதும் இயக்குனரகத்தில் இருந்து காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிக்கப்படுவதால், பட்டியல் தயாரானதும் விரைவில் முதுகலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.)

Tuesday, November 19, 2013

PallikudamEMIS

EMIS offline Software Tool with printing support Tutorial

      Tamilnadu Department of School Education Given the new Instructions about EMIS offline Software. Herewith given the download link of the EMIS offline Tool with printing support.Below given link for How to use the Printing Tool document for the guidance. Circulated to the Schools for the effective validation of theStudent recordsUninstall previous version and install the below one.


EMIS Offline Printing Tool - Tutorial - 

EMIS Offline Printing Software New Version -

EMIS Teacher Profile Easy Access Codes - 

PallikudamNEWS

அரசு பள்ளிக்கூடங்களில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திடீர் ஆய்வு!

               மதுரை: தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேசுவரமுருகன் நேற்று மதுரையில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் நூலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
         அப்போது, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும் பாடங்கள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை மேற்பார்வை செய்தார். 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆலோசனை கூறினார்.
                    மதுரை மாவட்டத்தில் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்து விட்டதாகவும், 8-வது இடத்தில் உள்ள மதுரை மாவட்டத்தை5-வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்காக மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க உத்தரவிட்டார். மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியாவது தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
                      பள்ளிகல்வித்துறை தொடர்பாக மதுரை மாவட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து முடிக்கவும், டி.இ.டி(ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் பெயிலானதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பட்டியலையும் கேட்டு பெற்றுக்கொண்டார். இந்தத் தேர்வினால் தமிழகம் முழுவதும் சுமார்490 பேர் ஆசிரியர் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
                இறுதியாக மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஆய்வறிக்கை கேட்டுப்பெற்றுக்கொண்டார். இயக்குனரின் திடீர் ஆய்வால் கல்வித்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்

PallikudamNEWS

Monday, November 18, 2013

PallikudamNEWS

ஸ்மார்ட் கார்டு பணிக்கு பள்ளி மாணவர்களிடம் கட்டாய வசூல்

          துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிக்கு, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், மாணவர்களிடம் பணம் வசூலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
        தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, கடந்த மாதத்தில், மாணவர்களின் ரத்த வகை, பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன.
              தற்போது, அனைத்து மாணவர்களின் போட்டோவும், சிடியில் பதிவு செய்து, வழங்க வேண்டும் என தொடக்கக்கல்வித் துறை உத்தர வால், தலைமை ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
            ஸ்மார்ட் கார்டு தயாரிக்க, ஆன் - லைனில் பதிவேற்றம் செய்யும் வகையில், படிவங்கள் பூர்த்தி செய்ய உத்தரவிட்டனர். இதை, தனியார் பிரவுசிங் சென்டர் மூலமாகவே செய்து முடித்தோம். இதற்கு, ஒரு மாணவருக்கு, ? ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. அப்போது, போட்டோ குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.
       படிவங்களை பூர்த்தி செய்து, அனுப்பி வைத்த நிலையில், அனைத்து மாணவர்களின் போட்டோவும், சிடியில் பதிவு செய்து அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளனர். ஒரு மாணவனுக்கு, போட்டோ எடுத்து சிடியில் பதிவு செய்ய, 10 ரூபாய் வரை செலவாகிறது. இவை எதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
               அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை பொறுத்தவரை, பெற்றோர் ஆசிரியர் கழகத்திலும், எவ்வித நிதியும் இருப்பதில்லை. இதனால், தலைமை ஆசிரியர்கள், சொந்த பணத்தில் இருந்து, இந்த செலவுகளை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
                   இதை தவிர்க்க, பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களிடம் வசூல் செய்ய துவங்கி விட்டனர். இதனால், தமிழக அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி விடும் சூழல் உள்ளது. இதை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Sunday, November 17, 2013

PallikudamNEWS

மழையர் பள்ளி ஆசிரியர் பணி மகத்தானது

                உலகில் பல்வேறு துறைகள் இருந்தாலும், ஆசிரியருக்கும், மருத்துவருக்கும் தனி கவுரவம் இருந்து வருகிறது. கற்பித்தல் பணியை செய்பவருக்கும், நோயைத் தடுத்து உயிரைக் காப்பவருக்கும் இருக்கும் மரியாதை அளப்பரியது. அந்த வகையில் ஆசிரியர் பணியில் மிகவும் மகத்தானது மழையர் பள்ளி ஆசிரியர் பணி.
                    ஒரு குழந்தை வளர்ந்து, படித்து, பட்டங்கள் பல பெற்றாலும், அதற்கு அடித்தளம் இடப்படுவது மழையர் பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் தான். இதிலும், ஆரம்பப் பள்ளிக்கு முன்பாக பல குழந்தைகள் மழலையர் பள்ளியில் தான் தங்களின் கல்வியை துவக்குகின்றன. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மழையர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிவது என்பது எத்தனை மகத்தானது.
                     குழந்தைகள் வளர வளர சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு கல்வி கற்கத் துவங்குவர். ஆனால், மழலையாக இருக்கும் குழந்தைகள், பள்ளிக்கூடம் என்றால் என்னவென்றே அறியாத வயதில், மழையர் பள்ளிகளில் கால் வைக்கும் போது, அந்தக் குழந்தையை பள்ளிக்கூடம் வர வழைக்க வேண்டிய விருப்பத்தை ஏற்படுத்த வேண்டியதும், பள்ளியிலேயே வீட்டுச் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டியதும், மழலையர் பள்ளி ஆசிரியரின் முதன்மையான பணியாகும்.
                     அதன் பின்னர் அந்தக் குழந்தையின் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் அளித்து, எழுத்துக்களின், உச்சரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அந்தக் குழந்தையை ஆரம்பப் பள்ளிக்கு அனுப்பும் வரை, மழலையர் பள்ளி ஆசிரியரின் பங்களிப்பு தொடர்கிறது.
                    வீட்டில் இருக்கும் போது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மட்டுமே பேசிப் பழகிய குழந்தைகள், மழலையர் பள்ளியில் தான், சக குழந்தைகளுடன் கலந்துரையாடலைத் தொடங்கும். அப்போது, அதற்கு தேவையான உரையாடல் பயிற்சியை சிறந்த முறையில் அளிக்க வேண்டியதும், மொழியை புரிய வைப்பதும் மழலையர் பள்ளி ஆசிரியரின் பிரதான கடமையாகும்
                    இத்தனை நுட்பமான பணியை செய்ய வேண்டிய மழலையர் பள்ளி ஆசிரியருக்கு, வளமான வேலைவாய்ப்பும் இருக்கிறது. அதுமட்டுமின்றி மழலைகளை வளர்த்து மாணவர்களாக உருவாக்கும் மன நிம்மதியும் கிடைக்கும். இந்தப் பணிக்கு மழலையர் ஆசிரியராக பயிற்சி பெறுவதுடன், மழலைகளை நேசிக்கவும், அவர்களை அனுசரித்துச் செல்லத் தேவையான பொறுமையும் இருக்க வேண்டியது முக்கிய அம்சம்.
                         இதேபோல், மழலையர் பள்ளி ஆசிரியருக்கு தேவைப்படும் மற்றொரு திறன், ஒவ்வொரு குழந்தையையும், தனித் தனியாக கவனித்துக் கொள்ளக் கூடிய திறமை. ஏனெனில், மழலைகள் ஒவ்வொன்றும், அவர்களுக்கென தனி உலகில் சஞ்சரிப்பவை. அவர்கள் அனைவரையும் ஒரே விதத்தில் நடத்தவோ, செயல்படவோ வைக்க முடியாது.
                    மழலையர் பள்ளி ஆசிரியராக விரும்புவர்கள், nursery teacher training படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கலாம் அல்லது IGNOU வழங்கும் Early Childhood and Care Education (ECCE) படிப்பையும் தேர்வு செய்யலாம்...
                                டெல்லியில் உள்ள National Academy of Teacher’s Training, Ramakrishna Teacher Training Institute மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மழலையர் பயிற்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

PallikudamNEWS

PallikudamTRN NEWS

தொடக்க, உயர்நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி

      தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 20ம் தேதி பயிற்சி ஆரம்பமாகிறது. இதுகுறித்து அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
       தமிழகத்தில் தொடக்க, உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து பணியிடை பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
                தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் டிசம்பர் மாதம் 7ம் தேதி சமூக சமநில நேர்மறை எண்ணங்களை வளர்த்தெடுத்தல் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி சென்னையில் வரும் 20ம் தேதி நடக்கிணறது. இதில் ஒரு மாவட்டத்திற்கு 2 ஆசிரிய பயிற்றுனர்களும், 2 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன 2 விரிவுரையாளர்களும் கலந்து கொள்கின்றனர்.
            மாவட்ட அளவில் அனைத்து ஆசிரிய பயிற்றுனர்கள், ஆசிரிய கருத்தாளர்களுக்கு வரும் 27ம் தேதி மற்றும் 28ம் தேதி நடக்கிறது. குறு வள மைய அளவில் தொடக்க மற்றும் உயர்நிலை ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி பயிற்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PallikudamEMIS

EMIS New Offline Software with Printing Tool & Tutorial

    
            ஸ்மார்ட் கார்ட் திட்டத்துக்காக பள்ளி மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் EMIS Offline Software New Version எளிதாக பிரிண்ட் எடுக்கும் வசதியுடன் தரப்பட்டு உள்ளது. மேலும் எவ்வாறு பிரிண்ட் எடுப்பது என  விளக்கமும் தரப்பட்டு உள்ளது.

Friday, November 15, 2013

PallikudamNEWS

16,624 ஆசிரியர்கள் விரைவில் நியமனம், பள்ளிக்கல்விச் செயலர்

                அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
           விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார். சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா இன்று (14.11.2013 வியாழக்கிழமை) நடைபெற்றது.
இந்த விழாவில் அவர் பேசியது:
            தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளது.மேலும் 1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
              அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தால்மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவரும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக ரூ. 1.40 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் 4,500 மாணவர்கள் பயனடைவர்.
             குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் இப்போது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு 54 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
            இந்த 100 பள்ளிகளுக்காக 900 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 100தலைமையாசிரியர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் சபிதா. கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கான விருதுகள், சிறந்த நூலகர்களுக்கான எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, அதிக உறுப்பினர்களைச் சேர்ந்த நூலகங்களுக்கான விருதுகள் உள்ளிட்டவற்றை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.
             அதிக உறுப்பினர்களைச் சேர்த்ததற்காக திருப்பூர் மாவட்ட மைய நூலகத்துக்கும்,அதிக புரவலர்களை சேர்த்ததற்காக திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்துக்கும் விருது வழங்கப்பட்டது.  முன்னதாக, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
                     அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஏ.சங்கர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Thursday, November 14, 2013

PallikudamNEWS

PallikudamNEWS

பிளஸ் 2 மாதிரி வினா புத்தகங்கள்: நவ.20 முதல் விற்பனை!

  புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் மாவட்ட மையங்களின் விவரம்:

      பிளஸ் 2 மாணவர்களுக்கான மாதிரி வினா புத்தகங்கள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் ஆகியவை நவம்பர் 20-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.


      தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாதிரி வினா புத்தகங்கள் மற்றும் தீர்வுப் புத்தகங்கள் ஆகியவை அச்சிடப்பட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

          இந்த ஆண்டும் மாணவர்களுக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன. இந்தப் புத்தகங்களுக்கு ரூ.25 முதல் ரூ.95 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் மாவட்ட மையங்களின் விவரம்:
****************************************************

1. சென்னை - அரசு மேல்நிலைப் பள்ளி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, இ.எல்.எம். ஃபேப்ரிசியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம், எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு, ஜெய்கோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூளைமேடு.

2. காஞ்சிபுரம் - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை.

3. திருவள்ளூர் - ஆர்.எம். ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.

PallikudamNEWS

அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி

               அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: மாணவர்களிடம் வரவேற்பு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள ஆலோசனை பெட்டிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.


              மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2013-14ம் கல்வி ஆண்டில் ஆலோசனை பெட்டி வைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 113 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் 89 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டது.


           இது குறித்து சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியது: "பள்ளிகல்வித்துறையின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆலோசனை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, ஆலோசனை பெட்டிகளில் உள்ள கடிதங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுத்து படித்து வருகின்றனர்.

                  இதில், மாணவர்களுக்கு எந்த பாடத்தில் ஆசிரியர்கள் கூடுதல் அக்கரை செலுத்த வேண்டும். பள்ளிக்கு வந்து செல்லும் வழியில் தங்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து எழுதிய அனைத்து கடிதங்களுக்கும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், மாணவர்கள் மத்தியில் ஆலோசனை பெட்டிக்கு நல்ல வேற்பு ஏற்பட்டுள்ளது.
                   இதன் மூலம் மாவட்டத்தில் இந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் ஏதேனும் மாணவிகளுக்கு குழந்தை திருமண முயற்சி நடந்தால் அதை தடுக்க தேவையான ஆலோசனைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
                     கல்வி வளர்ச்சி நாளில் மாவட்டத்தில் சிறந்த துவக்கப்பள்ளியாக பென்னாகரம் தாலுகா ஏர்பட்டி அரசு துவக்கபள்ளியும், சிறந்த அரசு நடுநிலைப் பள்ளியாக பாலக்கோடு தாலுகா நல்லாம்பட்டி நடுநிலைப்பள்ளியும், சிறந்த உயர்ந்த நிலைப்பள்ளியாக தர்மபுரி தாலுகா இலக்கியம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியும், சிறந்த மேல்நிலைப்பள்ளியாக பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மூக்காரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை கலெக்டர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.
                       இதில் சிறந்த துவக்கப்பள்ளிக்கு 25 ஆயிரம் ரூபாய், நடுநிலைப்பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய், உயர்நிலைப்பள்ளிக்கு 75 ஆயிரம் ரூபாய், மேல்நிலைப்பள்ளிக்கு தர்மபுரியில் வரும் 16ம் தேதி நடக்கவுள்ள அறிவியல் கண்காட்சியில் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. இத்தொகையை பள்ளி வளர்ச்சி பணிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்." இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, November 13, 2013

PallikudamNEWS

டிட்டோஜாக் இன்றைய நிகழ்வுகள்

1.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.மோசஸ்
2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.காமராஜ்.
3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - திரு.ரக்‌ஷித்.
4.தமிழக ஆசிரியர் கூட்டணி- திரு.வின்சென்ட் பால்ராஜ்.
5.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் - திரு.ஜியாடோ ராபின்சன்.
6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.தாஸ்.
7.தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் - திரு.சேகர் 
ஆகியோர் இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 ஆக மாற்றுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முறையாகத் தெரிவிக்கும் விதமாக
* முதலமைச்சர் அலுவலக முதன்மைச் செயலாளர்,
* கல்வி அமைச்சர் PA.
* நிதியமைச்சர் PA,
* தொடக்கக்கல்வி இயக்குனர்,
* பள்ளிக்கல்விதுறை செயலாளர்,
* தலைமைச் செயலாளர் PA. ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
              அவர்கள் அதை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்தனர். இது தொடர்பாக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து டிட்டோஜாக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை நவம்பர் 20-ல் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

PallikudamNEWS

நவம்பர் 14 குழந்தைகள் தினம்!

                                             
           நேரு அவருடைய வாழ்நாளில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அனைவராலும் அவருடைய நல்ல நெறிகளுக்காகவும்உயர்ந்த மனித பண்புக்காகவும் புகழப்பட்டார்.

               அவரின் பிறந்தநாள்,14 நவம்பர் இந்தியா முழுவதும்" குழந்தைகள் தினமாக " கொண்டாடப்படுகிறது.அவர் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம்கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.


          இந்தியக் குழந்தைகள் அவரை "சாச்சா நேரு ' (மாமா நேரு)என்றே இன்று வரை நினைவு வைத்துள்ளன

PallikudamNEWS

EMIS பணிகளை 15 ம் தேதிக்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறல்


          மாணவமாணவிகளுக்கு ஆதார் எண்ணுடன் பல் நோக்கு பயன்மிக்க
ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 
         இந்த கார்டுகளை வரும் 15 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறி வருகிறார்கள்.

               திருவள்ளூர் மாவட்டத்தில் 1397 தொடக்கப்பள்ளிகள், 264நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 3.18 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். இந்த மாணவமாணவியரின் தகவல் அடங்கிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணி 11 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. எல்லா பள்ளிகளிலும் இணையதள வசதி இல்லை.

            அதனால் மாவட்ட கல்வி நிர்வாகம் பொன்னேரி மற்றும் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரிகளில் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி 158கணினிஆசிரியர்கள்  மூலம் தகவல் பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி  முழுமை அடையவில்லை.அதில் உள்ள பிழைகளை அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனல் கணினி வசதி இல்லாத பள்ளிகள் பிழைகளை திருத்தம் செய்ய முடியாமல் உள்ளனர்.
 
           தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணினி வசதி கிடையாது. அதனால் தனியார் மையங்களில் பணிகளை முடிக்க முயன்றுள்ளனர். இந்த  நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் தேதி அன்று மாணவர்களின் அடையாள அட்டை எண்ணையும் ஸ்மார்ட் கார்டில் சேர்க்க  உத்தரவிடப்பட்டது. இப்பணியை முழுமையாய் முடிக்க முடியாமல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திணறி வருகிறார்கள்.

PallikudamNEWS

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 16.11.2013 அன்றைய குறுவள மையப்பயிற்சிக்கான பயிற்சிக்கட்டகம் மற்றும் powerpoint slides

Tuesday, November 12, 2013

PallikudamNEWS

13,500 மக்கள் நலப்பணியாளர்களின் டிஸ்மிஸ் ஆர்டர் ரத்து

               மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரை பணி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. 
           உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்ததுடன், வழக்கை மீண்டும் விசாரித்து, ஆறு மாதத்தில் தீர்ப்பளிக்கும் படியும் அதிரடி உத்தரவு போட்டுள்ளது. வழக்கில் இரு தரப்பினரும் வாய்தா கேட்டு காலதாமதம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.  
           தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை நீதிபதி சுகுணா விசாரித்து, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார். 
           அதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் விசாரித்தது. விசாரணைக்கு பின்னர், மக்கள் நலப்பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத்தை நிவாரணமாக அளித்து, அவர்களை பணி நீக்கம் செய்யலாம் என்று தீர்ப்பு அளித்தது. பணி வழங்கக் கோரிய மக்கள் நலப்பணியாளர்களின்வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மக்கள்நலப் பணியாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் மதிவாணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயின், மதன்லோக் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, ‘கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் பணியில் சேர்ந்த 13 ஆயிரத்து 500 மக்கள்நல பணியாளர்கள், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
              இதுபோல 3 முறை இப்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நியமிப்பதும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நீக்குவதுமாக தொடர்ந்து நடந்துள்ளது. அவர்களை கால்பந்து என்று கருதி அரசு விளையாடியிருக்கிறது. எனவே மக்கள்நல பணியாளர்கள் 13 ஆயிரத்து 500  பேர் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இந்த  வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய  டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். 6 மாதத்தில் விசாரணையை முடித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்தனர். 
                மேலும், அவர்கள் கூறுகையில், ‘மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பழனியப்பன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவர் 5 மாதம் சம்பளம் கொடுத்தால் போதும் என்று கூறியதை ஏற்று உத்தரவிடப்பட்டுள்ளது சரியான நடைமுறையாகாது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை டிவிஷன் பெஞ்ச் ஏற்க மறுத்ததும் தவறானது. பல ஆண்டுகளாக பணியாற்றிய மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் வாழ்க்கையை அரசு விளையாட்டாக கருதியுள்ளது என்றும் தெரிவித்தனர். எனவே, ஐகோர்ட்டில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். 6 மாத விசாரணைக் காலத்தில் அரசுத் தரப்பும், மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பிலும் வாய்தா கோரி வழக்கில் காலதாமதத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
முக்கிய திருப்பங்கள்... * மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் 1989ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். *அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் அனைவருக்கும் பணி நிறுத்தம் செய்யப்பட்டது.  *3 முறை இப்படி அவர்கள் நியமிக்கப்படுவதும், நீக்கப்படுவதும் நிகழ்ந்தது.  *உயர் நீதிமன்ற தனி நீதிபதி பெஞ்ச் விசாரித்து, மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது.  *ஆனால், டிவிஷன் பெஞ்ச் விசாரணையில் அப்பீல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  *5 மாத சம்பளம் நிவாரணமாக அளித்து டிஸ்மிஸ் செய்யலாம் என்று கூறி தீர்ப்பு வந்தது.  *இதை எதிர்த்த அப்பீல் மனு மீது தான் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு போட்டுள்ளது.  *மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கில் முக்கிய திருப்பம் இது.  *இவர்கள் பணி நீக்க வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணை துவங்கும்.  *6 மாதத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

PallikudamNEWS

தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்

           தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் இன்று மாற்றம் செய்யப்பட்டன. இதன்படி நிதி அமைச்சர் ஓ.பி. பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் பொறுப்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசனம் வழங்கப்பட்டுள்ளது. 
             அமைச்சர் வீரமணியிடம் இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர்நலம் அமைச்சர் கே.வி., ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வீரமணி பள்ளிக்கல்வி துறை அமைச்சராக நீடிப்பார்.

PallikudamTET

ஆசிரியர் தகுதித் தேர்வு: உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

           சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்காததால் ஆசிரியர் பணி நியமனம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கும்படி, உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
          பட்டதாரி ஆசிரியர் பணி காஞ்சிபுரம் மாவட்டம், முட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, எம்.யுவராஜ் என்பவர், தாக்கல் செய்த மனு:
                     நான் பி.எஸ்சி., பி.எட்., பட்டம் பெற்றுள்ளேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். கடந்த, ஆகஸ்ட்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்து கொண்டேன். இம்மாதம் 5ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. எனக்கு 89 மதிப்பெண் கிடைத்தது. தகுதி தேர்வில், "கட்-ஆப்" மதிப்பெண் 90 என்பதால், நான் தேர்ச்சி பெறவில்லை. "கீ" விடைத்தாளை பார்க்கும் போது அதில், சில விடைகள் தவறாக இருந்தன.
                           இது குறித்து 6ம் தேதி விரிவான மனுவை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன். மூன்று கேள்விகளுக்கு தவறான விடைகள் "கீ" விடைத்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மூன்று கேள்விகளுக்கும், எனக்கு மூன்று மதிப்பெண் அளித்திருந்தால் 92 மதிப்பெண் பெற்றிருப்பேன். ஆசிரியர் பணியும் கண்டிப்பாக கிடைக்கும்.
                            தேர்வு வாரியம் செய்த தவறுக்கு எங்களை தண்டிக்கக் கூடாது. எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு என்னை அனுமதிக்க வேண்டும். அல்லது, பட்டதாரி கணித ஆசிரியர் பணியிடத்தில், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும். மூன்று மதிப்பெண் அளித்து எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
நிபுணர்கள் தயாரிப்பு
                    இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் ஆஜரானார். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, "தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு இன்னும் யாரும் அழைக்கப்படவில்லை. நிபுணர்களை கொண்டு தான் விடைத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது," என்றார்.
               இதையடுத்து, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இம்மாதம் 20ம் தேதிக்கு நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.
                 "&'சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் போது, மனுதாரரையும் அனுமதிக்க வேண்டும்; மனு மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து அது அமையும்," என்றும், நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.