Thursday, December 1, 2016

Pallikudamnews

ஜியோ இலவச சேவை மார்ச் 31 வரை நீட்டிப்பு: அறிக 10 தகவல்கள்
       ஜியோ சிம் இலவச சேவைகள் மார்ச் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

அதன்படி ஜியோ சிம் பயனர்கள் கட்டணம் எதுவும் இல்லாமல் அழைப்பு, இணையம் மற்றும் வீடியோ போன்ற வசதிகளை மார்ச் 31, 2017 வரை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனை 'ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர்' என அழைப்போம் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ தொடர்பான சில தகவல்களையும், அறிவிப்புகளையும் வியாழக்கிழமை மும்பையில் வெளியிட்டார்.
அதில் சில முக்கியத் தகவல்கள்
1. முதல் மூன்று மாதங்களிலேயே பேஸ்புக், வாட்ஸ் அப்பை விட அதிக வளர்ச்சியை ஜியோ பெற்றுள்ளது.
2. ஜியோ தொடங்கப்பட்டு 90 நாட்களுக்கும் குறைவான நேரத்திலேயே, 5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை 4G சேவையில் இணைத்துள்ளது.
3. ஈகேஒய்சி (e-KYC - மின்னணு முறையில் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள்) மூலம் ஜியோ சிம்கள் வீடு தேடி டெலிவரி செய்யப்படும். அவ்வாறு பெறப்படும் சிம்களை வெறும் 5 நிமிடத்தில் ஆக்டிவேட் செய்து பயன்படுத்தலாம்.
4. ஜியோவில் வாய்ஸ் காலிங் வசதி எப்போதுமே இலவசம்.
5. ஜியோ சிம்மில் தற்போது மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து ஜியோவுக்கு மாறிக்கொள்ளும் வசதியும் உள்ளது.
6. கடந்த சில மாதங்களில் அழைப்பு துண்டிக்கப்படும் விகிதம், 90%-ல் இருந்து சுமார் 20% ஆக குறைந்திருக்கிறது.
7. கடந்த மூன்று மாதங்களில், ஒவ்வொரு நாளும் 6 லட்சம் புது வாடிக்கையாளர்கள் ஜியோவைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்.
8. டிசம்பர் 4-ல் இருந்து, ஒவ்வொரு புது ஜியோ பயனரும் அழைப்பு, இணையம் மற்றும் வீடியோ உள்ளிட்ட அனைத்து ஜியோ வசதிகளையும் மார்ச் 31, 2017 வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்
9. ஏற்கெனவே உள்ள ஜியோ சிம் பயனர்களுக்கும் இந்த வசதி மார்ச் 31, 2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
10. ஜியோ மணி சேவை பாக்கெட் ஏடிஎம் போல் செயல்படும். சிறுவணிகர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஜியோ சாத்தியமாக்கும்.
* டிஜிட்டல் புரட்சியில் கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவும், ஜியோவும் பல மைல்கல்களை கடந்துள்ளது.

No comments: