Saturday, December 17, 2016

PallikudamNews

4 ஆப்ஸ்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்
புதுடில்லி
           உளவுத்துறை அறிக்கையை தொடர்ந்து இந்தியர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களில் வைத்திருக்கும் குறிப்பிட்ட, நான்கு ஆப்ஸ்களை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை பாகிஸ்தானை சேர்ந்த சைபர் குற்றவாளிகள் வைரஸ் நிறைந்த ஆப்ஸ்களை முக்கிய பிளே ஸ்டோர்களில் வெளியிட்டிருப்பதாகவும், இவற்றை இன்ஸ்டால் செய்திருக்கும் பட்சத்தில் ஹேக்கர்களால் பயனாளிகளின வங்கி சார்ந்த அதிமுக்கிய தகவல்களை திருட முடியும் எனவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, Top Gun, Mpjunkie, Bdjunkie மற்றும் Talking Frog உள்ளிட்ட ஆப்ஸ்களை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்திய ராணுவ நடவடிக்கைகளை கன்காணிக்க இது போன்ற ஆப்ஸ்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து கூகுள் நிறுவனம் SmeshApp எனும் ஆப்ஸ்.,ஐ உடனடியாக தடை செய்திருக்கிறது. இத்துடன் இந்திய ராணுவ வீரர்கள் இது போன்ற ஆப்ஸ்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

No comments: