Thursday, January 31, 2019

Wednesday, January 2, 2019

பள்ளிக்கூடம்

*வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019*

14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை
2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்
3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்
4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி
5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்
6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்
7.18-04-2019; வியாழன்- பெரிய வியாழன்
8. 07-05-2019; செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்
9. 01-06-2019; சனி- ஷபே காதர்
10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு
11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.
12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா.
13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்
14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.
15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை
16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்
17. 12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி
18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்
19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்
20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர் ஈவ்

Wednesday, November 21, 2018

Pallikudam

வாத்தியார் குரல்
==============
வாத்தியாரு வேலதான்
வசதின்னு பேசுறாக...
உக்காந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...

பசங்க மனசெல்லாம்
பாழடைஞ்சு கெடக்குது
சொல்லிக்கொடுத்த
வாத்தி மனசோ
சுக்கு நூறாக்கெடக்குது.

காலையில பள்ளியில
கால் வெச்சு போகையில...
டிக் டிக் டிக் மணியடிக்க
திக் திக்குன்னு மனசடிக்குது.

பசங்க முடியெல்லாம்
பக்காவா இருக்கனுமாம்
பக்குவமா சொன்னாலும் மனசு
பக்கு பக்குனு அடிக்குது
பசங்க ஏதாச்சும்
பண்ணிடப் போரான்னு
துடிக்குது...

படிக்கச்சொன்னாலே
பசங்க
துடிச்சு போற காலமிது...
படிக்க வெக்கத்தான்
வாத்தியாரு வேலையிது..

கண்டிக்கவும் கூடாது
கட்டளையும் கூடாது

திட்டவும் கூடாது
குட்டவும் கூடாது

மார்க்கு மட்டும்
மலை போல
கொட்டனுமாம்..

ஆதாரு இருக்கான்னு
அக்கறையா கேக்கனுமாம்
அக்கவுண்டு நம்பரை
அட்ரசோட
வாங்கனுமாம்...

சீருடை இல்லைன்னா
சிரிச்சிக்கிட்டே
கேக்கனுமாம்...

அடிச்சி கிடிச்சு
போட்டாக்க
அம்புட்டுதான் வாழ்க்க...
கழியத்தொட்டதுக்கு
களிதானே வாழ்க்க...

பசங்க
கேலிப்பேச்சு
பேசினாலும்
கேக்கத்தான் வேணும்...
கத்தியாலக்குத்தினாலும்
வாங்கத்தான் வேணும்..

போசாக்கு இல்லாத
பையனையும்
பாசாக்க
வெக்கனுமாம்
பாவப்பட்ட ஜென்மம் அது
வாத்தியாரு பொழப்பிது..

நரக வாழ்க்கையிது
நல்லபடி
நகரா வாழ்க்கையிது...

இயல்பான
ரத்த அழுத்தம்
ரெண்டு மடங்கு ஏறுது..
துடிக்கிற இதயமோ
எப்போதான்
நிற்குமோ!?

அச்சமில்லை அச்சமில்லை
சொல்லி கொடுத்த
வாத்தியாரு
சொன்னதுமே
நடுங்குறாரு..

சாக்பீசு
தேயுமுன்னே
வாத்தியாரு
தேயுராரு...

ஒத்த இதயத்த
பிளந்தெடுக்க
எத்தனை அம்புகதான்
கிளம்பி வருமோ?

பெத்தவங்க
ஒருபக்கம்
மத்தவங்க
மறுபக்கம்.

சமூகம்
ஒருபக்கம்
சங்கடங்கள்
மறுபக்கம்

அம்புகள
தொடுத்து நின்னா
அப்பாவி வாத்தியாரு
என்னதான்
பண்ணுவாரு...

வாத்தியாரை
மதிக்கும்
வசந்த காலம் போச்சு
வாத்தியாரை
மிதிக்கும்
கலி காலம் ஆச்சு...

இப்பதெல்லாம்
நெறைய வாத்தியார்கள்
கரும்பலகையை
கையால் துடைப்பதில்லை
கண்ணீரால்
துடைக்கிறார்கள்.
சாக்பீஸ்
துகள்களால்
நுரையீரலை
அடைக்கிறார்கள்..

வாத்தியாரு வேலதான்
வசதியின்னு பேசுறாக...
உக்கந்தே காசு
பாக்கிறதா
ஊரெல்லாம் ஏசுறாக...

அவங்களிடம்
சொல்லுங்க...

" வாத்தியார் பொழப்பு
வாழ்க்கையில் இழப்பு "
என்று....
👉🏻ஆசிரியர்👈🏻

Thursday, November 15, 2018

Monday, October 22, 2018

கனவு

அப்பா அப்புஅண்ணன்
அங்க நிக்கரீங்க

இங்க
அம்மா, அண்ணன்,
நான், நிக்கறோம்.

ஐயோ!!! அப்பு அண்ணா அப்பாவை பாத்துக்கணா! நான் அண்ணன் அம்மாவை பத்திரமா பாத்துக்கிறேன்.

அப்புஅண்ணா பசிக்கிறதா
மன்னிச்சிடுணா
படையல் பத்தலேயோ!

பாவி உன்னை மறந்தேனோ
பசிக்கு சோறுவைக்காது விட்டோனா!

அப்பா பங்குலதான் பாதி வாங்கி சாப்பிட்டாயோ!
எங்கணா உனை மறந்தேன். எப்புடிணா உனை மறந்தேன்.

பெரியப்பா பெரியம்மா
பாட்டி தாத்தா எங்கணா காணோம்!
ஏதாச்சும் பிரச்சனையா!

அழுகை நிக்கலையே
அப்பாவை பாத்துக்கோ
உனக்காக வந்தவருக்கு
உண்மையா நடந்துக்கோ!

முடிஞ்சவரை பாத்துக்கோ
அம்மா அண்ணன் அக்கா பாப்பானு பல பேர பத்திரமா நான் பாக்க
அப்பாவை பாத்துக்கோ!

படையல போட்டுவேன் பசிக்காது உனக்கினி
பக்குவமா பாத்துக்கோ
உங்க பங்க உங்களுக்கு
வைச்சிடுவோம்
வந்தெடுத்துக்கே!

அப்பாவ பாத்துக்கோ
அதுபோதும் எங்களுக்கு!

நீ இருக்கும் தைரியத்தில்
நித்திரையில் கூட நானு
நினைச்சதில்லை அப்பாவ!

இப்ப ஏன் இப்பிடி வந்து
இந்நிலையில் நிக்கறீங்க!
வெளக்கு எரியலயா வீடே இருட்டியிருக்கா!

அண்ணே மன்னிச்சிடு
அப்பாகிட்ட சொல்லிவிடு
அதற்கான ஏற்பாட்டை
அவசரமா செய்திடுறேன்.

Saturday, October 6, 2018

Pallikudam

வீட்டுக் கடனை விரைவாகக் கட்டி முடிக்க என்ன வழி?
கேள்வி - பதில்
நான் பொதுத்துறை வங்கியொன்றில் 18 ஆண்டு காலத்திற்கு வீட்டுக் கடன் பெற்றுள்ளேன். தற்போது இந்தக் கால அளவை 10 ஆண்டுகளாகக் குறைக்கும்படி வங்கியில் கேட்டேன். ஆனால், அப்படிக் குறைப்பதைவிட ஒவ்வொரு மாதமும் மாதத் தவணையோடு கூடுதல் தொகை செலுத்திவந்தால் கடன் தொகையை விரைவாகக் கட்டிமுடிக்கலாம் என்கிறார்கள். அவர்கள் கூறுவது சரியா?

“அவர்கள் சொன்னது சரியே. வங்கிக் கடனைப் பொறுத்தவரை, நாம் செலுத்தும் மாதத் தவணையில், அந்த மாதத்திற்கான வட்டியும், கடன் தொகையின் (பிரின்சிபிள் அமவுன்ட்) ஒருபகுதியும் மட்டுமே கழியும். கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அளவைக் குறைத்தாலும் இதேபோலத் தான் கழிக்கும் முறை இருக்கும். இதற்குப் பதிலாக, மாதத் தவணையுடன் கூடுதலாகப் பணம் செலுத்தும் யோசனையைக் கூறியுள்ளார்கள். பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, மாதத்தவணையைவிட கூடுதலாகச் செலுத்தும் தொகை, நேரடியாகக் கடன் தொகையில் கழிக்கப்படும். எனவே, இந்த முறையால் எளிதில் கடனை அடைக்க இயலும். ஆனால், தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, கூடுதலாகப் பணம் செலுத்துவதற்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு.”

Saturday, September 29, 2018

Pallikudam

கலிபோர்னியா: 5 கோடி பேஸ்புக் கணக்குகளின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டிருக்கக் கூடும் என்ற அதிர்ச்சி தகவலை மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் எனப்படும் சமூகவலைதளம் உலகில் 223 கோடி பேரால் பயன்படுத்தப்படுகிறது. இதில் பதிவு செய்யப்படும் கருத்துகள் சில சமூகத்தில் பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்துவதாகவும் செல்பி என்ற பெயரில் சுய தம்பட்டம் அடித்து கொள்வதாகவும் இருக்கின்றன.

சுமார் 14 ஆண்டுகளாக இருந்து வரும் பேஸ்புக்கில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை அந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதுகுறித்து நிறுவன சிஇஓ மார்க் ஜூகன்பெர்க் கூறுகையில் சுமார் 5 கோடி பேரின் பேஸ்புக் கணக்கு விவரங்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.

சந்தேகம்
கடந்த செப்டம்பர் 16-ம் தேதியில் இருந்து, ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததை பொறியாளர்கள் ஆராய்ந்தனர். அப்போது பேஸ்புக்கின் பயனாளர்கள் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

எளிது
ஆக்ஸஸ்
இதில் பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளை எளிதாக அறிந்து கொள்ளலாம். இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கூறுகையில், ஹேக் செய்யப்பட்ட கணக்குகள் தானாக லாக்அவுட் (logout) ஆகியிருக்கும் என்றும் மீண்டும் அவர்கள் லாக்இன் (login) செய்ய வேண்டும். ஒருவேளை பாஸ்வேர்ட்டை மறந்துவிட்டால் ஹெல்ப் சென்டர் மூலம் நீங்கள் உங்கள் கணக்கை ஆக்ஸஸ் செய்து கொள்ளலாம்.

தெரியவில்லை
திருடப்பட்டுள்ளனவா
இந்த கணக்குகளை யாரேனும் தவறாக பயன்படுத்தியுள்ளனரா என தெரியவில்லை. கணக்கு விவரங்களை திருடுவதை தடுக்க நாங்கள் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை எடுத்துள்ளோம். தங்கள் தகவல்கள் திருடப்பட்டுள்ளனவா என மக்கள் எங்களை கேட்டு வருகின்றனர்.

உண்மை
விசாரணை
உண்மையை சொல்லபோனால் இதுபோல் தகவல்கள் ஹேக் செய்யப்படாத வகையில் புதிய டூல்ஸ்களை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். விவரங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

8 கோடி பேர்
தேர்தல்கள் கடும் பாதிப்பு
பிரிட்டிஷ் அனலிட்டிக்கா என்ற நிறுவனம் மூலம் கடந்த ஆண்டு நடந்த முறைகேட்டில் 8 கோடி பேர் தங்களது பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டனர். சில நாடுகளில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தல்களை கடுமையாக பாதித்தது குறிப்பிடத்தக்கது.

Friday, July 27, 2018

Renewal Pallikudam


வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை .
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை .
முக்கிய தகவல்  2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை அறிவித்திள்ளது.

Monday, July 9, 2018

Pallikudam

ஒரு நாளைக்கு 24 அல்ல... 25 மணி நேரமாம்!

வெ .ஜெயசுப்பிரமணியன்
``தலைக்கு மேல வேலை.. ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான்ல?" என அங்கலாய்ப்பவர்களுக்கு பதிலாக வந்திருக்கிறது புதிய ஆய்வு முடிவு ஒன்று. வருங்காலத்தில் ஒருநாளுக்கு 25 மணி நேரமாகலாம் என்கிறது அந்த ஆய்வு.

பல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் நிலவும் நேர மாறுபாட்டிற்கும் நாள்கள் நீள்வதற்கும் காரணமாக நிலவு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். நிலவுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு அதிகரிக்க அதிகரிக்கப் பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. சொல்லப்போனால் கிட்டத்தட்ட 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்போது உள்ள தொலைவில் நிலவு இருக்கவில்லை என்றும், அப்போது ஒரு நாள் என்பது 18 மணி 41 நிமிடங்களைக் கொண்டிருந்ததாகவும் கூறுகிறது ஆய்வு. மேலும், ஒருநாளுக்கு 24 மணி நேரம் என்ற மணிக்கணக்கு, வருங்காலத்தில் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் மற்றும் அவரது குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகுறித்த தகவல்கள் Proceedings of the National Academy of Sciences என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது. பொதுவாக பூமியின் சுழற்சியானது, விண்வெளியிலுள்ள பல்வேறு பொருள்களின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்படுகிறது. இதில் நிலவினைத் தவிர பிற கோள்களும் (planets) அடங்கும். இந்த அனைத்துப் பொருள்களும்தாம் பூமியின் சுழற்சி மாறுபாட்டினை நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன. சூரியக் குடும்பத்தில் காணப்படும் பல்வேறு பொருள்களின் இயக்கங்களால்தாம் கடந்த பல கோடி ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் நாளொன்றின் நேர நிர்ணயமானது பல்வேறு மாறுதலுக்குள்ளாகி இருக்கிறது. இந்த விண்வெளி பொருள்களின் இயக்கங்களில் ஏற்படும் எந்தவொரு சிறிய மாற்றமும் பூமியின் காலநேர நிர்ணயத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கும். இந்நிலையில், தற்போது நிலவு பூமியிலிருந்து வருடத்துக்கு 3.82 சென்டி மீட்டர் என்ற அளவில் விலகிச்செல்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நிறைய உண்மைகள் வெளிவந்தால், புவியியல் வரலாற்றில் மற்றுமொரு மகத்தான ஆராய்ச்சியாக இது இருக்கவும் வாய்ப்புண்டு!

Pallikudam

27ம் தேதி உள்ளூர் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
நெல்லை மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் சில்பா அறிவிப்பு
நெல்லை மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலய ஆடிதபசை முன்னிட்டு 27ம் தேதி நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Wednesday, July 4, 2018

Pallikudam

புதிய பாடத் திட்டம்: ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிப் புத்தகம்
புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த பயிற்சி புத்தகம் ஆசிரியர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் 1, 6, 9, பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கான பாடத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டத்திலான பாடநூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் மாவட்ட வாரியாக 40,000 ஆசிரியர்களுக்கு ஜூலை 9-ஆம் தேதி முதல் ஜூலை 21 ஆம் தேதிவரை பயிற்சி அளிக்கவுள்ளனர்.
இதற்கிடையே, புதிய பாடத் திட்டத்தின் படி இனி எப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சிப் புத்தகம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதில், புதிய பாடத் திட்டங்களுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது, புரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவது, பயிற்சிகளை எவ்வாறு அளிப்பது உள்ளிட்ட தீவிரமான ஆலோசனைகள், அறிவுரைகள் இருக்கும். அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கையேடு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது மாநில வழிக் கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்கள் முறைப்படி கற்பிக்க உதவியாக இருக்கும்.
பாடங்களை திட்டமிடல், வரைபடத்துடன் விளக்குதல், வகுப்புகளில் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச் செய்யும் வகையிலான தகவல்கள் இந்தப் பயிற்சி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, இயற்பியல் பாடத்தை பெயரளவுக்கு நடத்தி விட்டுச் செல்லாமல், அதை தொழில்நுட்பரீதியாக புரொஜெக்டர் மூலம் நடத்தும்போது மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும். அவ்வாறு செய்வது எப்படி என்று இதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
கல்வித் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களால் எழுதப்பட்ட கையேடு என்பதால், ஆசிரியர்கள் திறன் மிகுந்த வகையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கவும் பல்வேறு நவீன புத்தாக்க முறையில் பாடங்களை நடத்தவும் உதவியாக இருக்கும். ஆசிரியர்களுக்கான பயிற்சிப் புத்தகத்தை புதிய பாடத் திட்ட பயிற்சியின்போது வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

Monday, July 2, 2018

பள்ளிக்கூடம் செய்தி

திறன்மிகு வகுப்பறை திறப்பு விழா

   பள்ளி வளர்ச்சி பாதையில் பயணிக்க பாடுபட்டு உழைக்கும் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசியர்களுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

Monday, June 25, 2018

Pallikudam

பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : CEO க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்.
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

முதன்மை கல்வி அதிகாரிகளை கண்காணிக்கும் பணியில், இணை இயக்குனர்கள் ஈடுபடுவர்.

தமிழக பள்ளிக்கல்வியில், 40 ஆண்டுகளுக்கு பின், மேற்கொள்ளப்படும் நிர்வாக சீர்திருத்தம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக, தொடக்க கல்வி மற்றும் மெட்ரிக் இயக்குனரகத்தின் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டன.

அந்த நிர்வாகத்தில் இருந்த பள்ளிகள், பள்ளிக்கல்வி இயக்குனரத்தின் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் வந்தன.

அதிகாரம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.க்கள், கூடுதல் அதிகாரம் மிக்கவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

பணி நியமனம், பணி மாறுதலுக்கான அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

அடுத்த சீர்திருத்தமாக, சென்னையில், தலைமையகத்தில் பணியாற்றும் இணை இயக்குனர் பதவிகள், மண்டல இணை இயக்குனர் பதவியாக மாற்றப்பட உள்ளது.

இதன் படி, பள்ளிக்கல்வி தலைமையகத்தில், சில இயக்குனர்கள் மட்டும் பணியில் இருப்பர்.

மற்ற இணை இயக்குனர்கள், மண்டல வாரியாக, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலுார், தஞ்சாவூர், நாமக்கல் என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட உள்ளன.

இவற்றில், ஒவ்வொரு மண்டல தலைமையகத்திலும், அருகில் உள்ள மாவட்டங்கள் இணைக்கப்படும்.அந்த மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள், நேரடியாக, இணை இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும்.

அரசாணைஇணை இயக்குனர்களுக்கு உதவியாக, துணை இயக்குனர்களும், மண்டல அலுவலகத்தில் நிர்வாக பணிகளை மேற்கொள்வர்.

இதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சட்ட ஆய்வு நடத்தி, அமைச்சர் மற்றும் செயலரின் மேற்பார்வையில், திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

விரைவில், அரசாணை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, June 15, 2018

Pallikudam

உங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு..!

நிதி சார்ந்த கல்வியானது பள்ளி, கல்லூரிப் பருவத்தி லிருந்தே தொடங்கப்பட வேண்டும். அனுபவப்பூர்வமாக அதைக் கற்றுக்கொள்வது நமது வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்யாமல் இருக்க நிச்சயம் உதவும். இதற்குக் குழந்தைப் பருவத்திலேயே வங்கிக் கணக்கைத் தொடங்குவது, அவர்களின் பிற்கால வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இதற்கு முதல்படியாக, உங்கள் வீட்டில் 10 - 18 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கினைத் தொடங்கியிருக்கிறீர்களா என நாணயம் ட்விட்டரில் கேட்டிருந்தோம். 

இந்த சர்வேயில் பதில் சொன்னவர்களில், 35% பேர் தங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கி யிருக்கிறேன் என்று சொல்லியிருப்பது ஆரோக்கியமான விஷயமே. இன்றைக்குப் பல பொதுத் துறை வங்கிகளும் குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கத் தயாராக இருக்கும்போது, பெற்றோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

இந்த சர்வேயில் கலந்துகொண்டு பதில் சொன்னவர்களில் 37% பேர் தங்கள் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் கஷ்டப்படாமல் இருக்க, குழந்தைப் பருவத்திலேயே வங்கிக் கணக்கைத் தொடங்குவது நல்லது.

இந்த சர்வேயில் கலந்துகொண்ட வர்களில் 28% பேர், இனி தொடங்கு வேன் என்று சொல்லியிருப்பதும் ஆரோக்கியமான விஷயமே.

ஆக மொத்தத்தில், பெற்றோர்கள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் ஆகிய அனைவரும் சேர்ந்து செயல்படும் பட்சத்தில், 18 வயதுக்கும் குறைவானவர்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்கிற பெயரை நிச்சயம் பெற முடியும்.

- ஏ.ஆர்.கே

Monday, June 11, 2018

Pallikudam

ஆதார் கார்ட் address (முகவரி) எப்படி மாற்றலாம்

உங்கள் ஆதார் கார்டில் வீட்டு முகவரி மாற்ற வேண்டும் ஆனால் எப்படி செய்வது என்று தெரியவில்லையா இனி கவலையை விடுங்கள், நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆதார் கார்டில் இருக்கும் முகவரியை (address) மாற்றலாம் நீங்கள் Unique Identification Authority of India (UIDAI) யின் மூலம் எளிதாக மாற்றலாம் ஆனால் அதற்க்கு தேவை படுவது எல்லாம் ஒன்றே ஒன்று தான் உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் 12 டிஜிட் (UID)யின் நம்பர்

அதாவது நீங்கள் இதை அப்டேட் செய்ய எந்த ஆதார் அதொரைஸ்ட் (Authorised) சர்விஸ் சென்டேரையும் போக அவசியமில்லை அல்லது இதை அப்டேட் செய்ய எந்த goverment உரிமையாளரின் உதவியும் தேவை இல்லை Aadhaar holders can do the same on UIDAI's Aadhaar ஆதார் வைத்திருப்பவர்கள் UIDAI'வில் இருக்கும் செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டலில் (Self Service Update Portal) சென்று மாற்றலாம் இந்த செல்ப் சர்விஸ் அப்டேட் போர்டளில் பயனர்களின் (Address) முகவரியை மற்ற உதவுகிறது, நீங்கள் அதன் மூலம் UIDAI குறிப்பின் படி கவனித்து பின் தொடர்ந்து உங்கள் வீடு முகவரி அப்டேட் மற்றும் கரெக்சன் செய்து கொள்ளலாம்

Wednesday, June 6, 2018

Pallikudam


காக்க காக்க! - அரசு ஊழியர்களின் அற்புத விளக்கு ஜி.பி.எஃப்...
தமிழக அரசு ஊழியர்கள் பெற்றுள்ள ஓர் ஒப்பில்லா ஓய்வூதிய நிதியம், ஜி.பி.எஃப் எனப்படும் பொது வருங்கால வைப்புநிதி. 1.7.1960-ல் அமலாக்கம் பெற்று, இன்று வரை அரசு ஊழியர்களின் அற்புத விளக்காக விளங்குவது இந்த ஜி.பி.எஃப்-தான். 

ஜி.பி.எஃப் என்பது அரசு ஊழியருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் எந்்த வகையில் பாதுகாப்பானது என்று பார்ப்போம்.

இதர வைப்பு நிதிகளைப் (Deposits) போல், டெபாசிட் செய்த தொகையைத் திரும்பப் பெறும் தடைக் காலம் (Lock in Period) ஜி.பி.எஃப்-க்குக் கிடையாது.

ஒரு சேமிப்புக் கணக்கில், பற்று-வரவு செய்வதைப்போல், ஒட்டுமொத்த சம்பளத்தையேகூட டெபாசிட் செய்யவும், நியாயமான தேவைக்குப் பணத்தை எடுத்துக் கொள்ளவும் அனுமதிப்பது.

அதேசமயம், இது ஓய்வுக்காலப் பயன் பாட்டுக்கான நிதியம். எனவே, இதன் பயன்பாடு முழுமையும் ஓய்வுக்காலத்துக்குரிய தாக இருக்க வேண்டும். ஓய்வுபெறும்முன் மரணித்துவிடும் ஊழியர் குடும்பத்துக்குப் பங்கம் வராமல் பாதுகாப்பு தரவேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்த பல பாதுகாப்பு அம்சங்கள் ஜி.பி.எஃப்-ல் உள்ளன. அவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

வாரிசு நியமனப் படிவம்

ஜி.பி.எஃப் திட்டத்தில் ஒருவர் சேரும் போதே வாரிசு நியமனப் படிவம் மூன்று பிரதிகளில் பெறப்படும். மூலப்பிரதி மாநிலக் கணக்காயரிடமும், அடுத்த பிரதி ஊழியரின் பணிப் பதிவேட்டிலும் பாதுகாப்பாக இருக்க, மூன்றாம் பிரதி ஊழியரிடம் இருக்கும்.

மணமாகாத ஊழியர், மணமானபின் தனது குடும்ப உறுப்பினர்களை வாரிசுதாரர் களாக மாற்றுவது அவசியம். இதேபோல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாரிசுதாரர்களில் மாற்றமில்லையெனில், நடப்பில் உள்ள வாரிசு நியமனம் உறுதி செய்யப்பட வேண்டும். பிறப்பு, இறப்பு உண்டெனில், அவ்வப் போது சேர்க்கவும், நீக்கவும் வேண்டும்.

முன்பணமும் நிபந்தனைகளும்

ஜி.பி.எஃப் திட்டத்தில் சேர்ந்த ஒருவர், தனது சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் 50% - 75% வரை முன்பணமாகப் பெறலாம். இதில் 50% என்பது சாதாரணக் காரணங் களுக்கான முன்பணம். 75%  என்பது சிறப்புக் காரணங்களுக் கானது.
மாலைநேரப் படிப்பு,  திருமணம், ஈமச்சடங்கு மருத்துவச் செலவு, உயர் கல்விக்கான செலவு, வெளிநாட்டில் படிக்கும் பிள்ளை களுக்கான கல்விச்செலவு, போன்ற நிகழ்வுகள் முன்பணம் பெறுவதற்கான காரணங்கள். என்றாலும், விண்ணப்பித்த மாத்திரத்தில் முன்பணம் தந்துவிட வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.

முன்பணம் கோரப்படும் தொகை, கூறப்படும் காரணம், பணத்தைத் திரும்பச் செலுத்தும்  நிதி ஆதாரம் ஆகியவை குறித்து ஏற்பளிப்பு அலுவலர் (Sanction Autority) திருப்தி அடையும் பட்சத்தில் கேட்ட முன்பணம் வழங்கப்படலாம். எந்தக்  காரணத்துக்காக முன்பணம் கேட்கிறார் என ஏற்பளிப்பு அலுவலர் கேள்வி எழுப்ப வாய்ப்பு உண்டு. இதற்கு உரிய விளக்கம் தராதபட்சத்தில் முன்பணத்தைத் திரும்பச்  செலுத்த ஆணையிடலாம். எனவே, தேவையில்லாத காரணத்துக்காக ஜி.பி.எஃப்-ல் இருந்து முன்பணம் பெறுவது கூடாது.

இப்படிப் பெறும் முன்பணத்தை அடுத்த 36 மாதங்களுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும்.

பகுதிப் பணத்தைத் திரும்பப் பெறுவது

தனது வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேர்ந்துள்ள பணத்தில், அதிகபட்சமாக, 75% அல்லது ரூ.9 லட்சத்தை வாங்கிக் கொண்டு, வாங்கின தொகையைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்கிற நடைமுறையும் உண்டு.

இவ்வாறு பணம் பெறுவதைப் பகுதிப் பணம் திரும்பப் பெறுவதல் (Part final withdrawal) என்று குறிப்பிடப்படும். பகுதி இறுதி வரைவு பெறுவதற்கான முக்கியத் தகுதி, ஒருவர் 15 ஆண்டு காலம் பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதே!

டிஸ்மிஸ் ஆனால்..?

இவ்வாறு திரும்பப் பெறப்படும் பகுதிப் பணம், உரிய காரணத்துக்காக இல்லாமல் வேறு காரணத்துக்காகப் பெறப்பட்டிருந்தால்,   அந்தத் தொகையும் சேமநிதிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல, பணியிலிருந்து விலக்கப்பட்ட (Removed from service), பணியிலிருந்து நீக்கப்பட்ட (Dismissed) மற்றும் கட்டாய ஓய்வு தரப்பட்ட ஊழியர்களுக்கும்கூட வைப்பு நிதியில் உள்ள இறுதித்தொகை உடனடியாகத் தரப்பட மாட்டாது. ஏனெனில், அந்த ஊழியர்கள்     மேல்முறையீடு செய்து மீண்டும் பணிக்கு வரக்கூடும் என்பதால்தான் உடனடியாகத் தரப்படுவதில்லை. 

இதையும் மீறி நீக்கப்பட்ட, விலக்கப்பட்ட மற்றும் கட்டாய ஓய்வு தரப்பட்ட ஊழியருக்கு வைப்புத் தொகையின் இறுதித் தொகை வழங்கப்பட்ட பிறகு, அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்களேயானால், தாம் பெற்ற இறுதித் தொகையை வட்டியுடன் சேமநிதிக் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும். முறையாக ஓய்வுபெற்றபின் அந்தத் தொகை வழங்கப்படும்.

வட்டிக்குப் பாதுகாப்பு

பி.பி.எஃப் போன்ற நிதியத்தில், ஒவ்வொரு மாதத்துக்கும் செலுத்த வேண்டிய தொகையை அந்த மாதம் ஐந்தாம் தேதிக்குள் செலுத்தினால் மட்டுமே வட்டி தரப்படும். ஆனால், ஜி.பி.எஃப்-ல் வட்டியைப் பொறுத்தவரை, இரண்டு சிறப்புச் சலுகை உண்டு. அதாவது, மே 2018-க்கான சம்பளம் சில நிர்வாகக் காரணங்களால் தாமதமாகி, ஜூலை 2018-ல் தரப்பட்டால், மே மாதம் கட்ட வேண்டிய பணம் மற்றும் முன்பணமாக வாங்கியதைத் திரும்பச் செலுத்துவது ஆகிய இரண்டுமே ஜூலையில்தான் நடக்கும். ஆனாலும் அந்தத் தொகைக்கு மே மாதம் முதலே வட்டி கணக்கிடப்படும்.

இது மட்டுமல்ல, ஜி.பி.எஃப், பி.பி.எஃப் போன்ற பலவகையான சேமிப்பு இனங்களுக்கும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை நிர்ணயிக்கப் படும். அவ்வாறு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதமானது 4 சதவிகிதத்துக்கும் குறைவாக அமைய நேர்ந்தால்,  ஜி.பி.எஃப்-க்கு அளிக்கப்படும் வட்டி விகிதம் 4% மேல் இருக்கும் என்பது கூடுதல் சலுகை. ஆக, இதில் வட்டிக்குக் குறைந்தபட்ச உத்தரவாதமும் உண்டு.

முன்பணமாகப் பெறுவது கூடாது

36 தவணைகளில் செலுத்துவதாகப் பெறும் முன்பணத் தொகையில், ஆறு தவணை செலுத்தினாலே போதும்; அடுத்த முன்பணம் பெற்றுவிடலாம். இப்படி அடுத்தடுத்து முன்பணம் பெற்றால்..?

சேமித்த பணத்தைவிட, அதிலிருந்து எடுத்த செலவழித்த பணம் அதிகமாக இருக்கும்.                  ஜி.பி.எஃப்-லிருந்து முன்பணமாகப் பெற்ற பணம், ஓரளவுக்காவது திரும்பி வரக்கூடும்.

ஆனால், பகுதி அளவுக்குப் பெறும் பணத்தைத் திரும்பக் கட்ட வேண்டிய அவசியமில்லை என்பதால், அந்தப் பணம் ஜி.பி.எஃப்-க்குத் திரும்ப வராது. இதனால் இறுதியில் நமக்குக் கிடைக்கும் தொகை கணிசமாகக் குறையும். இதனால் இறுதிக்காலத்தில் பாதிக்கப்படப் போவது நாம்தான் என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியம்.

இவர் என் கணவரல்ல!

ஜி.பி.எஃப்-ல் உள்ள ஒரு சிறப்பம்சம், ஒரு ஆண் ஊழியர், தனது மனைவி சட்டப்படி தன்னை விட்டுப் பிரிந்து விட்டாலோ, சமுதாய வழக்குப்படி தனது பராமரிப்பிலிருந்து விடுபட்டுவிட்டாலோ, தனது மனைவி தனது குடும்ப உறுப்பினர் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால், ஒரு பெண் ஊழியர், தனது கணவர் இன்ன தேதி முதல் எனது குடும்ப உறுப்பினரல்ல என்று எழுத்துப்பூர்வமாக மாநிலக் கணக்காயருக்குத் தெரிவித்துவிட்டாலே போதும்; அவரது கணவர் குடும்ப உறுப்பினரல்ல என்றாகிவிடுவார்.