Thursday, October 30, 2014

கேடயம்

தமிழக அரசு முதன் முதலில் மாவட்டம் தோறும் நல்ல பள்ளிகளை  தேர்வு செய்து கேடயம் வழங்கி வருகிறது.

எங்கள் பள்ளி 2006 ல் நல்ல பள்ளிக்கான கேடயம் பெற்ற போது எடுத்த படம்


4 th

CCE 4th Std Study Material

CCE Powerpoint Study Material:
  • 4th Standard - English - Mother Theresa (Term 2) - English Medium
Thanks to Mr. Thomas Antony my sweet friend

new post

TET Paper 2: Next List will Publish Soon.

         TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது. - TRB -   Based On TRB Ltr.Dt: 23.10.2014


TET தேர்ச்சி பெற்ற நண்பர்களே முதலைமைச்சர் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல் படி 2011முதல்2013 வரை உள்ள ஆசிரியர் பணியிடங்களில் மீதம் உள்ள பணியிடங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தேர்வர்களை கொண்டு மட்டுமே நிரப்பப்படும் இவை விரைவில் நிரப்பட உள்ளது என முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு TRB அளித்துள்ள தகவல் கூறுகிறது.

Tuesday, October 28, 2014

cps

CPS ஒப்புகை சீட்டு (A/C SLIP) தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுவிட்டதா??

              தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் (CPS) 01.04.2003 பின்  நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும்) அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு          (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது, இதனை மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் கவனத்திற்கு 10.09.2014 அன்று நேரில் SSTA மாநில பொறுப்பாளர்கள் கொண்டு சென்றனர். இயக்குனர் அவர்கள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014 உத்தரவிட்டார்.
 
          SSTAவின்  சீரான முயற்சிகள் மூலம்  பல ஆண்டுகளாக வழங்கப்படமால் இருந்த ஒப்புகைசீட்டு கிடைக்க வழிமேற்கொள்ளப்பட்டது .இதன் மூலம் அனைத்து கருவுலம் வழியாக உதவி தொடக்க கல்வி அலுலகங்களுக்கு ஒப்புகைசீட்டு குறுந்தகடு (CD) மூலம் அனுப்பப்பட்டது ,இது கிடைக்கப்பெற்று 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவுகள் ஏதேனும் இருப்பின் அல்லது சில நபர்கள் மொத்தமாக பதிவுகள் இல்லை என்றாலும்  உடனே கருவூலம் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.அக்காலக்கெடு வரும் டிசம்பர் -10 ம் தேதி முடிவடைகிறது அதன் பின் இப்போது உள்ள பதிவுகள் சரியாக உள்ளது என்று அரசால் ஏற்றுக்கொள்ள படும் .தற்போது சில ஒன்றியங்களில் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது,பல ஒன்றியங்களில் இதுகுறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டாமல் உள்ளன, தங்களின் ஒன்றியத்தில் வழங்கப்படாமல்  இருப்பின் உடனடியாக எங்களுக்கு தகவல் அளியுங்கள் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு A/C SLIP வழங்க நடவடிக்கை மேற்கொள்கிறோம் தாமதம் வேண்டாம்,இன்னும் ஒருமாதம் மட்டுமே உள்ளது.தொடர்புக்கான தொலைபேசி எண்-9843156296 இராபர்ட் ,மாநில பொது செயலாளர் SSTA.                                        என்றும் ஆசிரியர்களுக்கான SSTA

Saturday, October 25, 2014

ஏஇஇஓ

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் கல்வி அதிகாரிகளாக உயர்வு
               அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 67 பேர், நேற்று, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு, சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில், நேற்று காலை நடந்தது.

                         காலியாக உள்ள, 67 இடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில், 160 தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில், 67 பேர், பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 67 பேருக்கும், பதவி உயர்வுக்கான உத்தரவுகளை, தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் வழங்கினார். பதவி உயர்வினால் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடம், விரைவில் நிரப்பப்படும் என,
இயக்குனர் தெரிவித்தார்.

10+2+3

பிளஸ் 2 படிக்காத ஆசிரியருக்கு பதவி உயர்வு : பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு
              பிளஸ் 2 படிக்காமல், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியரை,  பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்காமல் தடை போட்ட தமிழக அரசு, தற்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 'இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி, பிளஸ் 2 படிப்பிற்கு நிகரானது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.

                 இதனால், பிளஸ் 2 படிக்காத இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக, பதவி உயர்வு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 1987 வரை, இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு தேர்ச்சி இருந்தது. 1988 முதல், ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான கல்வி தகுதியாக, பிளஸ் 2 நிர்ணயிக்கப்பட்டது.
ஆசிரியர் பயிற்சி படிப்பு : பிளஸ் 2 கல்வித்தகுதி நிர்ணயிப்பதற்கு முன், பிளஸ் 2 படிக்காமல், 10ம் வகுப்பு, பின், ஆசிரியர் பயிற்சி படிப்பு, அதன்பின், திறந்தவெளி பல்கலையில் பட்டம், முதுகலை பட்டம் பெற்று, பள்ளி கல்வித்துறையில், ஆசிரியராக ஏராளமானோர், பணியில் சேர்ந்தனர். இத்தகைய ஆசிரியர்கள், பிளஸ் 2 முடிக்காததால், பதவி உயர்வு வழங்க முடியாது என, 2011ல், கல்வித்துறை, திட்டவட்டமாக தெரிவித்தது. 2011க்குப் பின் நடந்த பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில், மேற்கண்ட ஆசிரியரை, சேர்க்கவில்லை. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல ஆசிரியர்கள், வழக்கு தொடர்ந்தனர். இதில், ஆசிரியர்களுக்கு, சாதகமாக, சமீபத்தில், உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:
நீதிமன்றம் உத்தரவு :
'பத்தாம் வகுப்பிற்குப் பின் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையாக கருதி, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையாக கருதி, உரிய ஆணை வழங்கிட, பள்ளிக்கல்வி இயக்குனர்
கேட்டுள்ளார். அதன்படி, 1987ம் ஆண்டுக்கு முன் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையானது என, அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு, அரசாணையில், செயலர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின் காரணமாக, பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையில், இடைநிலை ஆசிரியராக பணி புரியும் பலர், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

Rain

மழை கால நடவடிக்கைகள் : தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு கல்வித் துறை உத்தரவு

           மழை காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
                     இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு...
மழை காலங்களில் மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, அனைத்து அரசு, ஊராட்சி, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அந்தந்த பகுதி உதவி தொடக்க கல்வி அதிகாரி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் பின்வரும் அறிவுரைகளை வழங்க வேண்டும்.
* மழை காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி மாணவர்களுக்கு இடையூறாக இருந்தால், அம்மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் அகற்றுவதற்கான துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
* நீர் பிடிப்பு பகுதிகளான ஆறு, ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் முதலிய பகுதிகளில் நீர் நிரம்ப வாய்ப்பு இருப்பதால், இத்தகைய நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிப்பதுடன், நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் செல்வதனால் ஏற்படும் அபாயத்தை விளக்க வேண்டும்.
* பள்ளி நேரம் முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்கும் வகையில் மனித உயிரின் மதிப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், அந்தந்த பகுதியை சேர்ந்த, பொறுப்பும் தலைமை பண்பும் உள்ள ஒரு மாணவரை பொறுப்பேற்று வழிநடத்தி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
மின் கசிவு, விழிப்புணர்வு
* பள்ளி வளாகங்களில் மின் கசிவு ஏற்படாத வகையில், மின்சாதனங்களையும், மின் கம்பிகளையும் மிகுந்த எச்சரிக்கையுடன் பராமரிப்பதுடன், மின்சாரம் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
* மேல் நீர் தொட்டி, கழிவறை கழிவு நீர் தொட்டி ஆகியவற்றிற்கு அருகில் குழந்தைகளை அனுமதித்தல் கூடாது.
* மழை காலங்களில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மாணவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும்.
மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதால்...
* மாணவர்கள் மழையில் நனையாமலும், இடி, மின்னல் போன்ற தாக்குதலுக்கு உட்படாமலும் பாதுகாப்பாக இருப்பதற்கு அறிவுரை வழங்குதல் வேண்டும். மழைக்காலங்களில் மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதால் ஏற்படும் அபாயத்தை மாணவர்களுக்கு விளக்கி கூற வேண்டும்.
* தற்போது பெய்து வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளதால் சனிக்கிழமை(நேற்று) மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் மற்றும் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் தத்தம் தலைமை இடத்தில் தங்கி இருந்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, October 23, 2014

group 4

5 ஆயிரம் பணியிடங்களுக்கு ஒருவாரத்தில்

 3 லட்சம் விண்ணப்பம்!!!

              தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள 4,963 குரூப் 4  நிலையிலான வேலைக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்தில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். 

                   மொத்தம் 12 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் உட்பட 4,963 இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை கடந்த 14ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அன்றைய தேதியில் இருந்தே  www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியதாக துறை வட்டாரம் தெரிவிக்கிறது. விண்ணப்பிக்க நவ., 12ம் தேதி கடைசி நாள். அதற்குள், மேலும் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டித் தேர்வு டிச., 21ம் தேதி நடக்கிறது. 10ம் வகுப்பு கல்வித்தகுதி நிலையில் நடத்தப்படும் தேர்வு என்பதால் ஒவ்வொரு முறையும், அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். சராசரியாக, 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். தேர்வில், 8 லட்சம் முதல் 9 லட்சம் பேர் வரை பங்கேற்கின்றனர். இந்த முறையும் மொத்தமாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, October 13, 2014

SASTA

KIT TRI

MATHS SLM KIT TRAINING MODULE

B.ED BD UNIVER

TNPSC 4

TNPSC: Group IV Services : Notification Published.


Current Notification
Advt. No./ 
Notification No.
Name of the Post (s) with Code No.
Date of Notification
Date of Closing
Date of Exam
Status






18/2014
Group IV Services
14.10.2014
12.11.2014
21.12.2014
Apply OnlineApply Online
Application EditApplication Edit
Challan ReprintChallan Reprint
Application ReprintApplication Reprint

Friday, October 10, 2014

DA

தமிழகஅரசு ஊழியர்கள் -ஆசிரியர்களுக்கு 7 சதவிகித அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7 சதவிகித அகவிலைப்படி உயர்த்தபட்டுள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.மேலும் அகவிலைப்படி உயர்வு படி மூலம் ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனைடவார்கள் என்றும் அகவிலைப்படி உயர்வினால் மொத்தம் 18 இலட்சம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.