Monday, December 26, 2016

Pallikudam

அடுத்த அதிரடி.....! 
Aadhar Enabled Payment .......! 
பே டி எம் முதலான வாலெட் கம்பெனிகளுக்கும் கார்டு வழங்கும் பெரிய நிறுவனங்களுக்கும் ஆதரவான நடவடிக்கை என்று பேசினவங்க,  கார்டு இல்லாத சாதாரண மனுஷங்க என்ன செய்வாங்கன்னு பொங்கினவங்க – எல்லாருக்கும் ஆப்புதான் இது.

இது எப்படி செயல்படுகிறது?  ரொம்ப சுலபம்.
ஒவ்வொருவருக்கும் ஒரு வங்கிக் கணக்கு.  ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதார் எண். இவ்வளவுதான். உங்களது வங்கிக்கணக்கில் உங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதுதான் நீங்கள் செய்ய வேண்டியது.  செஞ்சாச்சா?  அவ்வளவுதாங்க....
கடைக்காரர்கள் செய்ய வேண்டியது என்ன?  இந்த ஜியோ சிம் வாங்கும்போது கட்டை விரலை வெச்சோமே ஒரு தம்மாத்தூண்டு மெஷின் – பயோமெட்ரிக் சென்ஸார் – விலை (500 முதல்) ரூ.2000/- ...  இதை வாங்கி வெச்சிக்க வேண்டியது...  இதன் கூட ஒரு சின்ன டெர்மினல் இருக்கும்.  இதற்கு மாத வாடகை கிடையாது...
அதுக்கப்புறம்?
நீங்க கடையிலே போய் சாமான் வாங்கறீங்க.... ரூ68/- குடுக்கணும்.  இப்போ கடைக்காரர் என்ன செய்வார்னா உங்களோட ஆதார் எண்ணைக் கேட்பார். இதனை நீங்களே கீ இன் செய்யலாம், அல்லது அட்டையைக் காட்டி கடைக்காரரையும் கீ இன் செய்யச் சொல்லலாம்.  இது தற்போதைய டெபிட் / க்ரெடிட் கார்டை ஸ்வைப் செய்வது போல.  அதுக்கப்புறம் கடைக்காரர் உங்களோடது எந்த வங்கி என்று கேட்பார்.  ஸ்க்ரீனில் தெரியும் பட்டியலில் இருந்து உங்களது வங்கியைத் தேர்ந்தெடுப்பார்.  அப்புறம் ரூ.68/- என்பதை அழுத்துவார்.  இப்போ நீங்க உங்க கட்டை விரலையோ அல்லது பத்து விரலில் வாஸ்துப்படி எந்த விரல் பிடிக்குமோ அதை வைத்து அழுத்தினால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.68/- கழிக்கப்பட்டு கடைக்காரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதில் உங்கள் ஆதார் எண்தான் உங்களது டெபிட் / க்ரெடிட் கார்டு.  டெபிட் கார்டின் பின் அல்லது க்ரெடிட் கார்டின் சிப் தான் உங்களது கை விரல்.
டெபிட் / க்ரெடிட் கார்டு போல தொலைந்து விடுமோ என்ற கவலையில்லை -  உங்கள் ஆதார் எண் தெரிந்தாலும் உங்கள் கைவிரல் இல்லாமல் அது செல்லாது.
முக்கியமாக இதில் செய்யப்படும் பணப்பரிமாற்றத்துக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது. கிடையவே கிடையாது. இதனால் விசா / மாஸ்டர் போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு நமது பணம் போவது தடுக்கப்படுகிறது.
கடைக்காரர்களுக்கு மாதாந்திரக் கட்டணமும் கிடையாது.
நன்றி  சேது ராமன்

No comments: