Wednesday, November 12, 2014

School noon meal

பள்ளி மாணவர் மதிய உணவு திட்டம் 15 வகை காய்கறிகளை சேர்க்க உத்தரவு
பள்ளி மாணவர் மதிய உணவுத் திட்டத்தில், மாதாந்திர உணவு பட்டியலில், 15 வகையான காய்கறிகள் சேர்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அதிக விலை: - நமது நிருபர் --மைசூரு மாவட்டத் தில், பள்ளி மாணவ, மாணவியர், 2.6 லட்சம் நபருக்கு, மதிய உணவு வழங்கப்படுகிறது. வழக்கமாக கத்தரி, முட்டை கோஸ், நூல்கோல், மங்களூரு வெள்ளரி ஆகியவற்றையே பயன் படுத்துகின்றனர்.

சில பள்ளிகளில், புடலை, பூசணி, சுரை, பீட்ரூட், முருங்கை ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். அதிக விலை என்பதால், பீன்ஸ், காரட் ஆகியவற்றை உணவில் சேர்ப்பதில்லை. இனி, வாரம் இருமுறை, பீன்ஸ், காரட் ஆகியவற்றை பயன்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கீரைகளை சுத்தம் செய்வது சிரமம் என்பதால், அவையும் மதிய உணவில் சேர்க்கப்படவில்லை. இனி, கீரைகளை சேர்ப்பதுடன், விலை குறையும் போது, அனைத்து வகை காய்கறிகளையும் சேர்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

மதிய உணவில், குறிப்பிட்ட சில காய்கறிகளே திரும்ப, திரும்ப சமைப்பதாக, மாணவர்கள் எழுப்பிய புகாரை அடுத்து, இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மதிய உணவில், 15 வகை காய்கறிகளை உணவு பட்டியலில் சேர்க்க, அதிகாரிகள் தீர்மானித்து உள்ளனர்.

சுலபமாக, மலிவாக கிடைக்கும், காய்கறிகளை தொடர்ந்து பயன்படுத்தாமல், அனைத்து ரக காய்கறிகளையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ள, அக்ஷரா தசோஹா அதிகாரிகள், காய்கறி வகைகளை, 'ருச்சி' புத்தகத்தில், குறிப்பிடக் கூறியுள்ளனர். அதிகாரிகள் ஆய்வின் போது, இந்த புத்தகத்தை பார்வையிடுவர்.

உத்தரவிட்டு உள்ளோம் : கர்நாடகா அக்ஷரா தசோஹா செயல் இயக்குனர், உதயகுமார் கூறுகையில், "மதிய உணவுத் திட்டத்தில், சத்துடன், ருசியாக இருப்பதற்காக, 15 வகை காய்கறிகளை வாங்கி, சமைக்க உத்தரவிட்டு உள்ளோம். தாவரவியல் ஆசிரியர்களும், ஒவ்வொரு காய்கறியின் சத்துக்கள் குறித்து, மாணவர்களுக்கு, விளக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளோம்,” என்றார்.

No comments: