Tuesday, January 7, 2014

Pallikudam

மூன்று நபர் ஊதியக்குழு அறிக்கை!!! SSTA EXCLUSIVE!!!

*SSTA சார்பாக திரு.மாரிதுரை மற்றும் மூன்று நபர்கள் பதிவு செய்த மதுரை உயர்நீதி மன்ற கிளை வழக்கினை WP (MD) 9218/2012 என்ற வழக்கில் நாம் கேட்ட 9300-34800+4200 என்பதனை சுட்டிக்காட்டி உள்ளார்கள்.
*சம்பளத்திலும்,நம் பலத்தினை காட்டி வீறுநடை போட்டு 
வெற்றியடைவோம்!!! 

 *மூன்றுநபர்  ஊதியகுழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏன் மத்திய அரசிற்கு இணையான ஊதியம் மறுக்கப்படுகிறது,என்பதற்கு கூறப்பட்டுள்ள காரணங்கள்.
*தமிழநாட்டை பொறுத்தமட்டில்,  இடைநிலை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு,பின்னர் இடைநிலை ஆசிரியர் பட்டய படிப்பினை முடிக்கிறோமாம்.(மூன்றுநபர் ஊதியக்குழு தயாரிக்கிறவர்களுக்கு,இடைநிலை ஆசிரியர்களின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என்று அறிந்தவர்கள்,என்பது இந்த அறிக்கையினை கொண்டு தெளிவாகிறது .இப்படி  இடைநிலை ஆசிரியரின் கல்வித்தகுதியை அறியாதவர்கள் தயாரித்த அறிக்கை என்பதும்  தெளிவாகிறது.)
*இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை 1,16.129ஆம்,ஆகவே ஊதியத்தினை உயர்த்த முடியாதாம்.
* மத்திய அரசின் தொடக்க நிலையில் பணியாற்றுபவர்கள் ஹிந்தி,கணினி, ஆங்கிலம் கற்பிப்பவர்கள் திறமையாக கற்பிக்கிறார்களாம்.(தமிழ்நாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள், தமிழ்நாட்டில் ஹிந்தி பயிற்றுவித்து தரவேண்டும் எனக்கூற வருகிறார்கள் போலும்)
*ஆகமொத்தம், தமிழ்நாட்டில்  இடைநிலை ஆசிரியர் பயிற்சி என்பது ஒரு தரமற்ற படிப்பு என்கிறார்கள்.

*இடைநிலை ஆசிரிய பேரினமே!!! இப்போது தெரிகிறதா ,நம்முடைய நிலை,இனியும்  நாம் நமக்காக சிந்திக்கவில்லையெனில்,காலம் கடந்துவிடும்.
*பாதிக்கப்பட்ட மனம் மேலும் புண்படுகிற விதத்தில்,இவ்வறிக்கை காணப்படுகிறது.நம் தகுதியை பற்றி தரம் குறைந்து விமர்சிக்கப்பட்டுள்ளோம்.
*கடுமையான கண்டனத்தினை SSTA பதிவு செய்கிறது.
*இதற்கிடையில்  பல்வேறு வதந்திகள்,அறிவிப்புகள்,தீர்ப்புகள்.
*இடைநிலை சமுதாயமே!!!  SSTA பெற்ற ஒவ்வொரு வெற்றியும்,  கடின மற்றும் நேர்மையான பாதையில்  கிடைக்கப்பெற்றது.எனவே,கண்டிப்பாக சம்பளத்திலும்,நம் பலத்தினை காட்டி வீறுநடை போட்டு வெற்றியடைவோம்!!! உண்மையை சொல்வோம்!!! உரக்க சொல்வோம்!!! வெற்றி பெறுவோம்!!!

CLICK HERE TO READ THREE MAN COMMISSION REPORT ABOUT SECONDARY GRADE TEACHER'S SALARY

No comments: