Tuesday, January 14, 2014

Pallikudam

அரசு வேலைவாய்ப்புக்கு சமமான பட்டப்படிப்புகள் அரசு அறிவிப்பு

       தமிழ்நாட்டில் அரசு வேலை வாய்ப்புக்கு சமமான பட்டப்படிப்புகளை அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. 


    இங்கு சில பட்டங்களை பெற்றவர்கள் வேலைவாய்ப்பிலும் சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்த படிப்பு மற்ற பல்கலைக்கழகத்தில் உள்ள பட்ட படிப்புக்கு சமமானதா என்ற கேள்வியும் எழுந்தது. இதனால் படித்த பட்டதாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் நலன் கருதி தமிழக உயர் கல்வித்துறை ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
          பாரதியார் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்பட்ட எம்.எஸ்சி. அப்ளைடு புவியியல் பட்டம், எம்.எஸ்சி. புவியியல் பட்டத்திற்கு சமம். திருச்சியில் உள்ள ஹோலிகிராஸ் சுயாட்சி கல்லூரியில் படித்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கிய பி.எஸ்சி. விலங்கியல் (உயிரி தொழில்நுட்பத்தில் சிறப்பு) பட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் பெற்ற பி.எஸ்சி. விலங்கியல் பட்டத்திற்கு சமமானதாகும். கோவாவில் வழங்கப்படும் எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேசன் பட்டய படிப்பு, தமிழ்நாட்டில் வழங்கப்படும் எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேசன் பட்டயப்படிப்புக்கு சமமானதாகும்.
 பி.ஏ. ஆங்கிலம்
      பாரதி தாசன் பல்கலைக்கழகம் வழங்கிய பி.ஏ. இங்கிலீசுடன் ஸ்பெஷலைசேஷன் இன் கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படிப்பு பி.ஏ. ஆங்கில படிப்புக்கு சமமானதாகும்.
           சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய எம்.ஏ. வரலாற்று கல்வி படிப்பு, எம்.ஏ. வரலாறு படிப்பு சமமானதாகும். பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பி.எஸ்சி. கணிதம் ஸ்பெஷலைசேஷன் இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற படிப்பும் பி.எஸ்சி. கணிதம் படிப்பும் சமம்.பி.ஏ. பொருளாதர படிப்புக்கு, பி.ஏ. பொருளாதாரம் மற்றும் ஸ்பெஷலைசேஷன் இன் ரூரல் மேனேஜ்மெண்ட் படிப்பு சமம்.சென்னை பல்கலைக்கழகம் வழங்கிய எம்.எஸ்சி.பிளாண்ட் சயின்ஸ் படிப்பு, எம்.எஸ்சி. தாவரவியல் படிப்புக்கு சமம்.
 விலங்கியல் படிப்பு
         மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கிய பி.எஸ்சி. அப்ளைடு விலங்கியல் படிப்பு, பி.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு சமம். பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கிய பி.எஸ்சி. பிஸிக்ஸ் வித் ஸ்பெஷலைசேஷன் இன் எலக்ட்ரானிக்ஸ் படிப்பும் பி.எஸ்சி. பிஸிக்ஸ் படிப்புக்கு சமம்.
              சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.காம் (டிரேடு அண்ட் சர்வீஸ்), எம்.காம் (பிஸினஸ் சிஸ்டம்), எம்.காம். ( டிரேடு அண்ட் டெவலப்மெண்ட்), எம்.காம் (இன்டர்நேஷனல் பிசினஸ்), எம்.காம் (இன்டர்நேஷனல் பிசினஸ் அண்ட் பைனான்ஸ்), எம்.காம் (அக்கவுண்டிங் பைனான்ஸ்) ஆகிய அனைத்து படிப்புகளும் எம்.காம். படிப்புக்கு சமம்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
            இந்த அரசாணை குறித்து சென்னை பல்கலைக்கழக வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் எஸ்.குருசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அரசாணை சென்னை பல்கலைக்கழக வணிகவியல் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு மட்டுமல்ல பல துறைகளைச்சேர்ந்த மாணவர்களுக்கும் பொங்கல் பரிசாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments: