Wednesday, January 1, 2014

Pallikudam

தமிழகத்தில் 'ஆதார்' எண் பணி ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில், ஆதார் எண் உருவாக்கும் பணி, 50 சதவீதத்துக்கும் கீழ் இருப்பதால், ஜனவரி இறுதி வரை, இப்பணி நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை, இம்முடிவை எடுத்துள்ளது.

ஆதார் அட்டை உருவாக்கும் பணி, நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆதார் அட்டை தயாரிப்பதற்கு முன், ஒவ்வொரு குடிமகனுக்கும், தனி எண் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, புகைப்படம் எடுத்தல், கைவிரல் ரேகை பதிவு, விழிரேகை பதிவு ஆகியவை, தமிழகத்தில், 2011 ஜனவரியில் துவங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் இப்பணி நடக்காமல், சில மாவட்டங்களைத் தேர்வு செய்து முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இப்பணி நீட்டிக்கப்பட்டு, நடந்து வருகிறது.
ஆதார் எண் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில், 70 சதவீதம் பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டிருந்தால், அம்மாவட்டத்தில் ஆதார் எண் உருவாக்கும் பணி நிறுத்தப்படுகிறது.
இதன்பின், நிரந்தர ஆதார் மையங்கள் துவங்கப்பட்டு, விடுபட்டவர்களுக்கு ஆதார் எண் உருவாக்கும் பணி நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.
சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் இறுதி கட்டத்தில், ஆதார் எண் உருவாக்கும் பணி துவங்கப்பட்டது.
இதில், சென்னை மாவட்டத்தில், 42 சதவீதம் பேருக்கே, ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக துவங்கப்பட்ட மாவட்டங்கள் எதிலும், 70 சதவீதம் என்ற இலக்கு எட்டப்படவில்லை.இந்நிலையில், டிச., 31ம் தேதியுடன், ஆதார் எண் உருவாக்கும் பணி முடிக்கப்படும். இனிமேல், நிரந்தர மையங்கள் துவங்கி, ஆதார் எண் உருவாக்கும் பணி நடக்கும் என, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை அறிவித்திருந்தது.
தமிழகத்தில், இறுதியாகத் துவங்கிய மாவட்டங்களில், 70 சதவீத இலக்கு எட்டப்படாத நிலையில், ஆதார் எண் உருவாக்கும் பணியை, மேலும் நீட்டிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜனவரி, 31ம் தேதி வரை, ஆதார் எண் உருவாக்கும் பணியை நீட்டிக்க, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், அரியலுார், நாகபட்டினம் மாவட்டங்களில், ஆதார் எண் உருவாக்கம், 80 சதவீதத்தை கடந்துள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆதார் எண்ணை நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு அடிப்படையாக மற்றும் ஏற்க வசதியாக, ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர்களில் ஏற்படும் தவறுகளை திருத்தவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தில், 42 சதவீதம் பேருக்கே, ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக துவங்கப்பட்ட மாவட்டங்கள் எதிலும், 70 சதவீதம் என்ற இலக்கு எட்டப்படவில்லை

No comments: