Wednesday, January 1, 2014

Pallikudam

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1.58 கோடி பாட புத்தகங்கள்

           'அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவத்திற்காக, 1.58 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன" என பாடநூல் கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
         அவரது அறிவிப்பு: ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 89 லட்சம் மாணவர்களுக்கு, 1.58 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டன. இந்த புத்தகங்கள், பள்ளிகளுக்கு, வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. 
        தனியார் பள்ளிகளில் பயிலும், 46 லட்சம் மாணவ, மாணவியருக்காக, 81.53 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள, 22 பாடநூல் கழக குடோன்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. கடந்த, 26ம் தேதியில் இருந்து, தனியார் பள்ளிகளுக்கு, புத்தகங்கள் விற்பனையாகி வருகின்றன.
          புத்தக விற்பனை குறித்து, ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால், mdtntbc07@hotmail.com என்ற, இ - மெயில் முகவரி யில் தெரிவிக்கலாம். இவ்வாறு, மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.




No comments: