Tuesday, February 4, 2014

Pallikudam

2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமிழக அரசுக்கு கோரிக்கை.

           2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

 
         இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்கியதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் பின்பற்றப்படுவது போல் தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீத மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் பணிகளுக்கு பட்டயமும், பட்டமும் பெற்ற பிறகு இது போன்ற தேர்வுகளை நீக்குவது குறித்து முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

               தகுதி,திறமை என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்று கல்வி அமைச்சர் தொடர்ந்து கூறி வருவதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைபாடு என்ன என்றும் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்

No comments: