Wednesday, June 7, 2017

Raj-Pallikudam

அரசு தொடக்க,நடுநிலைப் பள்ளிகளில் இந்தாண்டு 'ஸ்மார்ட்' வகுப்பு
அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் 'ஸ்மார்ட்' வகுப்பு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சில அரசு பள்ளிகளில் ஏற்கனவே 'ஸ்மார்ட்' வகுப்பு செயல்பாட்டில் உள்ளது.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான செயல்வழி கல்வி 'இன்டர்நெட்' இணைப்புடன் கூடிய 'புரஜெக்டர்' மூலம் திரையில் ஒளிபரப்பப்பட்டு கற்பிக்கப்படும்.அதேபோல் ஐந்தாம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான படைப்பாற்றல் கல்வி திரை மற்றும் 'கம்ப்யூட்டர்' மூலம் நடத்தப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்பிரிவுகளும் திரை மூலம் கற்பிக்கப்படும்.

சிறந்த ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களும் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பப்படும். இந்த முறையை இந்தாண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பயிற்சி விரைவில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' வகுப்புக்கான அறை 20 க்கு 20 அடியில் தனியாக ஏற்படுத்தப்படும்.

இந்த முறையால் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தாலும், பாடம் கற்பிப்பது பாதிக்காது. காலிப் பணியிடங்கள் ஏற்படும்போது, பிற பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் 'லைவ்' மூலம் மாணவர்களுக்கு ஒளிபரப்பப்படும். இதனால் ஆசிரியர்கள் இல்லை என்ற குறை ஏற்படாது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது, என்றார்.

No comments: