Saturday, March 22, 2014

Pallikudam

அழகப்பா பல்கலை., மத்திய பல்கலையாக மாறுமா?

               காரைக்குடி அழகப்பா பல்கலையை, மத்திய பல்கலையாக மாற்ற ஆளும் அரசு முயற்சி செய்ய வேண்டும்" என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பல மாவட்டங்களில், அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி வரும் இடங்களில், நர்சிங் கல்லூரியும் சேர்ந்து இயங்கி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற ஏழை மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
 
                 சிவகங்கையில், அரசு மருத்துவ கல்லூரி அமைந்த போதும் நர்சிங் கல்லூரி அமைக்கப்படவில்லை. நோயாளிகள் பல்வேறு நேரங்களில், பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே, சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், அரசு நர்சிங் கல்லூரி அமைக்க வேண்டும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் வறட்சியாக இருந்தாலும், "வானம் பார்த்த பயிர்களான" மிளகாய், கடலை விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விவசாய கல்லூரி அமைந்தால், அது பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். செட்டிநாடு கால்நடை பண்ணைக்கு சொந்தமாக 900 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இட வசதி இருந்தும், இதற்குட்பட்ட பெரும்பாலான பகுதி, தரிசாகவே விடப்பட்டுள்ளது. எனவே, இங்கு, கால்நடை கல்லூரி அமைக்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே உள்ளது. சிவகங்கை மாவட்டம், தொன்று தொட்ட நாகரீகத்தை கொண்டது. இங்கு பல்வேறு நாட்டினரும் சுற்றுலாவாக, வந்து செல்கின்றனர். எனவே, எல்லா நாட்டு கலாசாரத்தையும் தெரிந்து கொள்ளும் வகையிலும், கற்று கொள்ளும் வகையிலும், தேசிய பண்பாட்டு மையம் அமைக்க வேண்டும். அழகப்பா பல்கலையை, அழகப்ப செட்டியார் மத்திய பல்கலைக்கழகமாக ஆக்க வேண்டும் என கனவு கண்டார். 
 
              மத்தியில் அ.தி.மு.க,வுக்கு இணக்கமான, அரசு அமையும் பட்சத்தில், சிவகங்கை மாவட்ட மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, மத்திய பல்கலை கழகமாக மாற்ற தற்போதைய ஆளும் அரசு முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், "அழகப்பா பல்கலையை இங்கு கொண்டு வந்தவரே, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,தான்." மேற்கண்ட கோரிக்கைகளை, தமிழக முதல்வர் கண்ணோக்கும் பட்சத்தில், சிவகங்கை மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி மேலும் மேம்படும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments: