Thursday, December 12, 2013

PallikudamNEWS

தேர்வு பணியில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்.

              பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. 
           பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை. 
           ஒரே தகுதி உடைய பட்டதாரி ஆசிரியரில், பள்ளி கல்வி துறையைச் சேர்ந்தவர்களை, தேர்வு பணியில் ஈடுபடுத்துவதும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியரை, கண்டுகொள்ளாத நிலையும், இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறது."இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றசங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: