Wednesday, February 4, 2015

Pallikudam

பள்ளிக்கூடங்களில் 1 முதல் 12–ம் வகுப்பு வரை நீதிபோதனையை கட்டாய பாடமாக்க கோரி வழக்கு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
நீதிபோதனையை கட்டாய பாடமாக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, மத்திய கல்வி வாரியம் ஆகியவற்றுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த பெண் வக்கீல் சந்தோஷ் சிங் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறி இருந்தாவது:–
ஒரே குறிக்கோள் பணம்தான்
தற்போது, இந்த சமூகத்தின் நெறிமுறைகள் மீதான மதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. எப்படியாவது பணம் சம்பாதிக்கவேண்டும் என்பது மட்டுமே மனிதர்களின் ஒரே குறிக்கோளாக உள்ளது.
இது போன்ற சிந்தனைகளின் அழுத்தத்தில் சமூகம் சிக்கி சீரழிந்துவிடாமல் இருப்பதற்கும், உலகத் தர மதிப்புடன் கூடிய பிரஜைகள் நாட்டில் உருவாகவும், மாணவப் பருவத்திலேயே ஆன்மிக நெறிகளுடன் கூடிய நீதிபோதனை கல்வி மாணவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.
கட்டாய பாடமாக்கவேண்டும்
எனவே பள்ளிக்கல்வியில் 1–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை நீதிபோதனையை கட்டாய பாடமாக சேர்க்கும்படி கோர்ட்டு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

No comments: