Thursday, June 27, 2019

Windows whatsapp

அடுத்த ஆண்டு முதல் வாட்ஸ்அப் வேலை செய்யாது!

இந்தாண்டு இறுதியில் விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வாட்ஸ்அப் வேலை செய்யாது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விண்டோஸ் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் iOS 7 இயங்குதளத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப்பின், சமீபத்திய கேள்வி பதில்கள் (FAQ) பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலமாக புதிதாக வாட்ஸ்அப் கணக்கு எதுவும் தொடங்க முடியாது. ஏற்கனவே, வாட்ஸ்அப் இருக்கும் பட்சத்தில், அதுவும் வேலை செய்யாது.
இதையும் பாருங்க: வாட்ஸ்அப் குரூப்பில் சேராமல் இருப்பது எப்படி? இப்படி..!
பயனாளர்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று, தங்களுடைய போன் எந்த வெர்ஷனில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு Settings பிரிவுக்குள் சென்று Phone>About என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், ஸ்மார்ட்போன் எந்த இயங்குதளத்தில் இயங்குகிறது என்பது காட்டப்படும். ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் இருந்தால், அந்த போனில் அடுத்த வருடம் வாட்ஸ்அப் வேலை செய்யாது.

ஆண்ட்ராய்டு 4.03 வெர்ஷன் அல்லது அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட்போனில் தான் வருங்காலத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யும். வாட்ஸ்அப்பை புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் இருந்தால், அதற்கு ஏற்றவாறு ஆண்ட்ராய்டு வெர்ஷனும் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டே அப்டேட் செய்யப்படுகிறது.
(2020 முதல் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் விளம்பரம் செய்யலாம்!)

இப்போது உள்ள காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவரிடத்திலும் வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப் இல்லாத தினசரி வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. எனவே, பயனாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அடுத்த வெர்ஷனுக்கு மாற்றுவதன் மூலம் வாட்ஸ்அப்பின் இந்த கெடுபிடியில் இருந்து தப்பிக்கலாம்.

No comments: