Tuesday, April 29, 2014

HSC RESULT

மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது

 பிளஸ் 2 தேர்வு முடிவை, நான்கு இணையதளங்களில், தேர்வுத்துறை வெளியிடுகிறது; முகவரிகளை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நேற்று வெளியிட்டார்.
அதன் விவரம்: மாணவர்கள், மே 9ம் தேதி காலை 10:00 மணி முதல், www.tnresults.nic.inwww.dge2.tn.nic.in,www.dge3.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்கலாம். நான்காவதாக, www.dge1.tn.nic.in, என்ற இணையத்திலும், "ஸ்மார்ட் போன்' மூலம், முடிவைப் பார்க்கலாம்.

இணையதளத்தில் பார்க்க, தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். தேர்வு முடிவை, மதிப்பெண்களுடன், 0928223 2585 என்ற மொபைல் எண்ணிற்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி பெறலாம். இதற்கு, TNBOARD/RN/DOB என்பதற்கு ஏற்ப, TNBOARD/ மாணவரின் பதிவு எண் (RN)/ பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை பதிவு செய்து, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மே 9ம் தேதி காலை 10:00 மணிக்கு முன், எஸ்.எம்.எஸ்., அனுப்பக் கூடாது. மாவட்டங்களில் உள்ள, தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி தேர்வு முடிவை அறியலாம். மாணவர்கள், தங்களது பள்ளிகளுக்கு, நேரில் சென்றும் தேர்வு முடிவை அறியலாம்.

No comments: