Thursday, November 14, 2013

PallikudamNEWS

அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி

               அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: மாணவர்களிடம் வரவேற்பு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள ஆலோசனை பெட்டிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.


              மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2013-14ம் கல்வி ஆண்டில் ஆலோசனை பெட்டி வைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 113 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் 89 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டது.


           இது குறித்து சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியது: "பள்ளிகல்வித்துறையின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆலோசனை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, ஆலோசனை பெட்டிகளில் உள்ள கடிதங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுத்து படித்து வருகின்றனர்.

                  இதில், மாணவர்களுக்கு எந்த பாடத்தில் ஆசிரியர்கள் கூடுதல் அக்கரை செலுத்த வேண்டும். பள்ளிக்கு வந்து செல்லும் வழியில் தங்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து எழுதிய அனைத்து கடிதங்களுக்கும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், மாணவர்கள் மத்தியில் ஆலோசனை பெட்டிக்கு நல்ல வேற்பு ஏற்பட்டுள்ளது.
                   இதன் மூலம் மாவட்டத்தில் இந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் ஏதேனும் மாணவிகளுக்கு குழந்தை திருமண முயற்சி நடந்தால் அதை தடுக்க தேவையான ஆலோசனைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
                     கல்வி வளர்ச்சி நாளில் மாவட்டத்தில் சிறந்த துவக்கப்பள்ளியாக பென்னாகரம் தாலுகா ஏர்பட்டி அரசு துவக்கபள்ளியும், சிறந்த அரசு நடுநிலைப் பள்ளியாக பாலக்கோடு தாலுகா நல்லாம்பட்டி நடுநிலைப்பள்ளியும், சிறந்த உயர்ந்த நிலைப்பள்ளியாக தர்மபுரி தாலுகா இலக்கியம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியும், சிறந்த மேல்நிலைப்பள்ளியாக பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மூக்காரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை கலெக்டர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.
                       இதில் சிறந்த துவக்கப்பள்ளிக்கு 25 ஆயிரம் ரூபாய், நடுநிலைப்பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய், உயர்நிலைப்பள்ளிக்கு 75 ஆயிரம் ரூபாய், மேல்நிலைப்பள்ளிக்கு தர்மபுரியில் வரும் 16ம் தேதி நடக்கவுள்ள அறிவியல் கண்காட்சியில் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. இத்தொகையை பள்ளி வளர்ச்சி பணிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்." இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, November 13, 2013

PallikudamNEWS

டிட்டோஜாக் இன்றைய நிகழ்வுகள்

1.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.மோசஸ்
2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.காமராஜ்.
3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி - திரு.ரக்‌ஷித்.
4.தமிழக ஆசிரியர் கூட்டணி- திரு.வின்சென்ட் பால்ராஜ்.
5.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் - திரு.ஜியாடோ ராபின்சன்.
6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - திரு.தாஸ்.
7.தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் - திரு.சேகர் 
ஆகியோர் இடைநிலை ஆசிரியர்களின் தர ஊதியத்தை 4200 ஆக மாற்றுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்தல் ஆகிய இரண்டு கோரிக்கைகளையும் அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் முறையாகத் தெரிவிக்கும் விதமாக
* முதலமைச்சர் அலுவலக முதன்மைச் செயலாளர்,
* கல்வி அமைச்சர் PA.
* நிதியமைச்சர் PA,
* தொடக்கக்கல்வி இயக்குனர்,
* பள்ளிக்கல்விதுறை செயலாளர்,
* தலைமைச் செயலாளர் PA. ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
              அவர்கள் அதை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக உறுதியளித்தனர். இது தொடர்பாக அரசின் நடவடிக்கையைப் பொறுத்து டிட்டோஜாக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை நவம்பர் 20-ல் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

PallikudamNEWS

நவம்பர் 14 குழந்தைகள் தினம்!

                                             
           நேரு அவருடைய வாழ்நாளில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அனைவராலும் அவருடைய நல்ல நெறிகளுக்காகவும், உயர்ந்த மனித பண்புக்காகவும் புகழப்பட்டார்.

               அவரின் பிறந்தநாள்,14 நவம்பர் இந்தியா முழுவதும்" குழந்தைகள் தினமாக " கொண்டாடப்படுகிறது.அவர் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.


          இந்தியக் குழந்தைகள் அவரை "சாச்சா நேரு ' (மாமா நேரு)என்றே இன்று வரை நினைவு வைத்துள்ளன

PallikudamNEWS

EMIS பணிகளை 15 ம் தேதிக்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறல்


          மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண்ணுடன் பல் நோக்கு பயன்மிக்க
ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 
         இந்த கார்டுகளை வரும் 15 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க ஆசிரியர்கள் திணறி வருகிறார்கள்.

               திருவள்ளூர் மாவட்டத்தில் 1397 தொடக்கப்பள்ளிகள், 264நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 3.18 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். இந்த மாணவ, மாணவியரின் தகவல் அடங்கிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றும் பணி 11 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. எல்லா பள்ளிகளிலும் இணையதள வசதி இல்லை.

            அதனால் மாவட்ட கல்வி நிர்வாகம் பொன்னேரி மற்றும் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரிகளில் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி 158கணினிஆசிரியர்கள்  மூலம் தகவல் பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி  முழுமை அடையவில்லை.அதில் உள்ள பிழைகளை அந்தந்த பள்ளிகளே மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனல் கணினி வசதி இல்லாத பள்ளிகள் பிழைகளை திருத்தம் செய்ய முடியாமல் உள்ளனர்.
 
           தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணினி வசதி கிடையாது. அதனால் தனியார் மையங்களில் பணிகளை முடிக்க முயன்றுள்ளனர். இந்த  நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் தேதி அன்று மாணவர்களின் அடையாள அட்டை எண்ணையும் ஸ்மார்ட் கார்டில் சேர்க்க  உத்தரவிடப்பட்டது. இப்பணியை முழுமையாய் முடிக்க முடியாமல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திணறி வருகிறார்கள்.

PallikudamNEWS

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 16.11.2013 அன்றைய குறுவள மையப்பயிற்சிக்கான பயிற்சிக்கட்டகம் மற்றும் powerpoint slides

Tuesday, November 12, 2013

PallikudamNEWS

13,500 மக்கள் நலப்பணியாளர்களின் டிஸ்மிஸ் ஆர்டர் ரத்து

               மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரை பணி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. 
           உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்ததுடன், வழக்கை மீண்டும் விசாரித்து, ஆறு மாதத்தில் தீர்ப்பளிக்கும் படியும் அதிரடி உத்தரவு போட்டுள்ளது. வழக்கில் இரு தரப்பினரும் வாய்தா கேட்டு காலதாமதம் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.  
           தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை நீதிபதி சுகுணா விசாரித்து, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார். 
           அதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் விசாரித்தது. விசாரணைக்கு பின்னர், மக்கள் நலப்பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத்தை நிவாரணமாக அளித்து, அவர்களை பணி நீக்கம் செய்யலாம் என்று தீர்ப்பு அளித்தது. பணி வழங்கக் கோரிய மக்கள் நலப்பணியாளர்களின்வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மக்கள்நலப் பணியாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் மதிவாணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயின், மதன்லோக் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, ‘கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் பணியில் சேர்ந்த 13 ஆயிரத்து 500 மக்கள்நல பணியாளர்கள், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
              இதுபோல 3 முறை இப்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நியமிப்பதும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களை நீக்குவதுமாக தொடர்ந்து நடந்துள்ளது. அவர்களை கால்பந்து என்று கருதி அரசு விளையாடியிருக்கிறது. எனவே மக்கள்நல பணியாளர்கள் 13 ஆயிரத்து 500  பேர் பணி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இந்த  வழக்கு கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில்தவே, தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய  டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ‘மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்த உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். 6 மாதத்தில் விசாரணையை முடித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்தனர். 
                மேலும், அவர்கள் கூறுகையில், ‘மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பழனியப்பன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அவர் 5 மாதம் சம்பளம் கொடுத்தால் போதும் என்று கூறியதை ஏற்று உத்தரவிடப்பட்டுள்ளது சரியான நடைமுறையாகாது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை டிவிஷன் பெஞ்ச் ஏற்க மறுத்ததும் தவறானது. பல ஆண்டுகளாக பணியாற்றிய மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு பணி நீக்கம் செய்தது தவறானது. அவர்கள் வாழ்க்கையை அரசு விளையாட்டாக கருதியுள்ளது என்றும் தெரிவித்தனர். எனவே, ஐகோர்ட்டில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். 6 மாத விசாரணைக் காலத்தில் அரசுத் தரப்பும், மக்கள் நலப் பணியாளர்கள் தரப்பிலும் வாய்தா கோரி வழக்கில் காலதாமதத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
முக்கிய திருப்பங்கள்... * மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் 1989ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். *அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் அனைவருக்கும் பணி நிறுத்தம் செய்யப்பட்டது.  *3 முறை இப்படி அவர்கள் நியமிக்கப்படுவதும், நீக்கப்படுவதும் நிகழ்ந்தது.  *உயர் நீதிமன்ற தனி நீதிபதி பெஞ்ச் விசாரித்து, மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது.  *ஆனால், டிவிஷன் பெஞ்ச் விசாரணையில் அப்பீல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.  *5 மாத சம்பளம் நிவாரணமாக அளித்து டிஸ்மிஸ் செய்யலாம் என்று கூறி தீர்ப்பு வந்தது.  *இதை எதிர்த்த அப்பீல் மனு மீது தான் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு போட்டுள்ளது.  *மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கில் முக்கிய திருப்பம் இது.  *இவர்கள் பணி நீக்க வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணை துவங்கும்.  *6 மாதத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

PallikudamNEWS

தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்

           தமிழக அமைச்சர்கள் இலாகாக்கள் இன்று மாற்றம் செய்யப்பட்டன. இதன்படி நிதி அமைச்சர் ஓ.பி. பன்னீர்செல்வத்திற்கு கூடுதல் பொறுப்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசனம் வழங்கப்பட்டுள்ளது. 
             அமைச்சர் வீரமணியிடம் இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர்நலம் அமைச்சர் கே.வி., ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வீரமணி பள்ளிக்கல்வி துறை அமைச்சராக நீடிப்பார்.

PallikudamTET

ஆசிரியர் தகுதித் தேர்வு: உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

           சரியான விடைக்கு மதிப்பெண் அளிக்காததால் ஆசிரியர் பணி நியமனம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கும்படி, உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
          பட்டதாரி ஆசிரியர் பணி காஞ்சிபுரம் மாவட்டம், முட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, எம்.யுவராஜ் என்பவர், தாக்கல் செய்த மனு:
                     நான் பி.எஸ்சி., பி.எட்., பட்டம் பெற்றுள்ளேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். கடந்த, ஆகஸ்ட்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்து கொண்டேன். இம்மாதம் 5ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. எனக்கு 89 மதிப்பெண் கிடைத்தது. தகுதி தேர்வில், "கட்-ஆப்" மதிப்பெண் 90 என்பதால், நான் தேர்ச்சி பெறவில்லை. "கீ" விடைத்தாளை பார்க்கும் போது அதில், சில விடைகள் தவறாக இருந்தன.
                           இது குறித்து 6ம் தேதி விரிவான மனுவை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன். மூன்று கேள்விகளுக்கு தவறான விடைகள் "கீ" விடைத்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மூன்று கேள்விகளுக்கும், எனக்கு மூன்று மதிப்பெண் அளித்திருந்தால் 92 மதிப்பெண் பெற்றிருப்பேன். ஆசிரியர் பணியும் கண்டிப்பாக கிடைக்கும்.
                            தேர்வு வாரியம் செய்த தவறுக்கு எங்களை தண்டிக்கக் கூடாது. எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு என்னை அனுமதிக்க வேண்டும். அல்லது, பட்டதாரி கணித ஆசிரியர் பணியிடத்தில், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும். மூன்று மதிப்பெண் அளித்து எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
நிபுணர்கள் தயாரிப்பு
                    இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன் ஆஜரானார். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, "தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு இன்னும் யாரும் அழைக்கப்படவில்லை. நிபுணர்களை கொண்டு தான் விடைத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது," என்றார்.
               இதையடுத்து, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இம்மாதம் 20ம் தேதிக்கு நீதிபதி கிருபாகரன் தள்ளிவைத்தார்.
                 "&'சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் போது, மனுதாரரையும் அனுமதிக்க வேண்டும்; மனு மீதான இறுதி உத்தரவைப் பொறுத்து அது அமையும்," என்றும், நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

PallikudamNEWS

மாணவர்களிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அஞ்சலக சேமிப்பு சேர்க்க ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர தொடக்கக்கல்வி இயக்ககம்உத்தரவு

PallikudamNEWS

தொடக்கக்கல்வி நாட்காட்டி (2013-14)

           தொடக்கக்கல்வி 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி , மாதிரி கால அட்டவணை மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கான கால அளவு வழிக்காட்டு அட்டவணையினை தொடக்கக்கல்வி இயக்ககம் வெளியீடு | Elementary Dept 2013 -14 calendar



Saturday, November 9, 2013

PallikudamNEWS

ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்

            ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும் முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது.
           உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலப் பதிவு மூப்புக்குப் பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாமா என அரசு பரிசீலித்து வருகிறது.
                ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர்.
             இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மட்டுமே மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
                இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
            இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் 14,496 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளில் 12,596 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
            இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆயிரம் காலிப்பணியிடங்களும் உள்ளன.
           கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் காலிப்பணியிடங்களை விட குறைவான ஆசிரியர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால் நியமன முறை அதிக முக்கியத்துவம் பெறவில்லை.
              என்ன வழக்கு? இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
                அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு இரண்டிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
                 இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
               அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
               மனுவை ஏற்று இந்த வழக்கை முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு காலாவதியாகியுள்ளது.
                   எனவே, இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வெயிட்டேஜ் மதிப்பெண் முறை (அரசாணை எண் 252) மூலம் நியமனம் செய்யலாமா அல்லது மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யலாமா என தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
                            ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

PallaikudamNEWS

PallikudamNEWS

EMIS - மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு

              பள்ளிக்கல்வி- EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துவகை மேலாண்மையின் கீழ் செயல்படும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படும் எடுக்க உத்தரவு 

Friday, November 8, 2013

PallikudamNEWS

ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!


             "கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.


           அவரது அறிக்கை: முதல்வர் உத்தரவுப்படி, பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்களின் வருகை பதிவை அதிகாரிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டம் கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதலில் திருச்சி மாவட்டத்தில் செப்., 5ல் முதல்வர் துவக்கி வைத்தார்.

           இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 56,573 பள்ளிகள், 5.63 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரம், இணையதளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து விவரமும் ஒருங்கிணைக்கப்பட்ட பின், எஸ்.எம்.எஸ்., திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

Thursday, November 7, 2013

PallikudamNEWS

அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை கல்வித்துறை தீவிரம்
         அரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.       தர்மபுரி மாவட்டத்தில் ஊர்ப்புற நூலகங்கள்பகுதி நேர நூலகங்கள், என மொத்தம் 117 நூலகங்கள் உள்ளன. இவற்றில் 1.21 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நூலகங்களில் 20 லட்சத்து 66 ஆயிரத்து587 நூல்கள் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 16 லட்சத்து 41 ஆயிரத்து 879வாசகர்கள் இந்த நூலகங்களை பயன்படுத்தி படித்து சென்றுள்ளனர். நடப்பாண்டில் 20 ஆயிரம் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் மாணவ, மாணவிகளை புதிய உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1,750புரவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.         தர்மபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் இதர கட்ட நூலகங்களில் குடிமை பணிகளுக்கான பயிற்சி மையம் செயல்படுகிறது. இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. தினசரி500க்கும் மேற்பட்ட வாசகர்கள் மாவட்ட மைய நூலகத்திற்கு வந்து படித்து செல்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட நூலகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.           இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தினசரி நாளிதழ், புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பள்ளிகளில் நூலகம் அமைக்க கல்விதுறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.               கடந்த வாரம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய நூலகம் திறக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான நூல்கள் நூலகத்தில் வைக்கப்பட்டது. தினசரி நாளிதழ்கள், மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான பொதுஅறிவு புத்தகம், அப்துல்கலாம் புத்தகம், தலைவர்களின் வரலாறு புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவரும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நாளிதழ், புத்தகம் படிக்க வேண்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல காரிமங்கலம் மாதிரி பள்ளியிலும் நூலகம் திறக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:            பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நூலகங்கள் மூலம் அறிவை வளர்த்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.                 அனைத்து பள்ளிகளிலும், மாணவ, மாணவிகளுக்கு நூலகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூலகம் தொடர்பான வாசகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில்89 மேல்நிலைப் பள்ளி, 114 உயர்நிலைப் பள்ளிகளில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. நூலகம் இல்லாத பள்ளிகளில் நூலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

PallikudamNEWS

ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் பட்டியல் வெளியீடு


முதல் தாள் (இடைநிலை ஆசிரியர் தேர்வு)
1. சி. இராஜம்மாள் - ஈரோடு மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்

2. பி. சத்யா - திண்டுக்கல் மாவட்டம் - 122 மதிப்பெண் - இரண்டாவது
இடம்
ஆர்.இராமசந்திரன் - விழுப்புரம் மாவட்டம் - 122 மதிப்பெண்
(ஒரே மதிப்பெண் இருந்தால், பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்)
இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர் தேர்வு)
1. ஆர். வினுஷா - தூத்துக்குடி மாவட்டம் - 126 மதிப்பெண் - முதல் இடம்

2. பி. இராஜகாளீஸ்வரி - இராமநாதபுரம் மாவட்டம் - 123 மதிப்பெண் - இரண்டாவது இடம்

3. வி. மேகலா - காஞ்சிபுரம் மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்

சி. குருமூர்த்தி - ஈரோடு மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்

பி. அன்பரசி - திருவண்ணாமலை மாவட்டம் - 122 மதிப்பெண் - மூன்றாவது இடம்

PallikudamNEWS

போலீஸ் சோதனையில் பேப்பர் இல்லையா? இன்சூரன்ஸ் தகவலை எஸ்எம்எஸ்சில் பெறலாம்
                 மேலும், விபத்து சமயங்களில் சம்பந்தப்பட்ட வண்டியின் எண் மட்டும் தெரிந்திருந்தால் போதும், அதன் மூலம் அதன் உரிமையாளர் பெயர், விவரம் ஆகியவற்றை இதே எஸ்எம்எஸ் மூலம் தெரியவரும். போலீசாருக்கும் இத்திட்டம் மிக உதவியாக இருக்கும். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது என்றார்.

             போலீசில் ஆவணம் இன்றி சிக்கும்போது எஸ்எம்எஸ் மூலம் இனி இன்சூரன்ஸ் பற்றிய முழு தகவலையும் பெறலாம். எல்லா வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் மிக அவசியம். சில சமயங்களில் சர்வீஸ் விடும்போது, வண்டியை கழுவும்போது, ஜெராக்ஸ் எடுக்க மறந்துவிடும்போது வாகனங்களில் இன்சூரன்ஸ் பேப்பரை மீண்டும் எடுத்து வைக்க மறந்துவிடுகிறோம். இதுபோன்ற சமயங்களில் சாலைகளில் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால், தர்மசங்கடமான நிலை ஏற்படும்.


              இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து அதன் வாகனங்கள் காப்பீடு பிரிவு உறுப்பினர் ராம்பிரசாத் கூறியதாவது:


                வாகனத்துக்கு காப்பீடு செய்துள்ளவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம், வாகன எண்ணுடன் எங்களின் குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால், அதன் காப்பீடு பற்றிய விவரம் முழுமையாக அனுப்பி வைக்கப்படும். இது சட்டப்பூர்வமானது என்பதால், போலீசாரிடம் அதை காண்பிக்க முடியும்.

PallikudamNEWS

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே  70வது பிறந்தநாளை கொண்டாடினார்.


1.பீலே மொத்தம் 1,283 கோல்களை அடித்துள்ளார்.இதில் 92 கோல்கள் பிரேசிலுக்காக அடித்தது.

2.மூன்று முறை உலக கோப்பையை வென்றுள்ளார்.

3.அமெரிக்க விஞ்சானி தாமஸ் ஆல்வா எடிசனை நினைவாகவே எட்சன் அரான்டஸ் டி நாசிமென்டே என்ற இயற்பெயர்  அவருக்கு சூட்டப்பட்டது.

4.பீலேவை 15 வயதில் பிரபல பிரேசில் அணியான சான்டோஸ் ஒப்பந்தம் செய்தது.

5.1956ம் ஆண்டு செப்டம்பர் 7ந் தேதி கொரிந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீலே களம் இறங்கினார்.இந்த போட்டியில் 4 கோல்களை அடித்து பிரமிக்க வைத்தார்.

6.17 வயதில் பீலே உலக கோப்பையை வென்று சாதனை படைத்தார்.இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.இறுதி போட்டியில் சுவீடனுக்கு எதிராக இரு கோல்களும் அடித்தார்.

7.கடந்த 1995ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை பிரேசில் விளையாட்டுத்துறை அமைச்சராக பீலே இருந்தார்.

8.1999ம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் 20ம் நுற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரராக பீலேவை அறிவித்தது.

9.1969ம் ஆண்டு நவம்பர் 19ந் தேதி சான்டோஸ் அணிக்காக பீலே ஆயிரமாவது கோலை அடித்தார்.10 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்து பீலேவை தலையில் வைத்து கொண்டாடினார்கள்.

10.ஒவ்வொரு நவம்பர் 19ந் தேதியையும் சாபாலோ நகரத்தில் பீலே தினமான கொண்டாடப்படுகிறது.

11.உலக கோப்பையில் பீலே 12 கோல்களை அடித்துள்ளார்.உலக கோப்பை போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களில் பீலேவுக்கு 5வது இடம்.

12.உலக கோப்பையில் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்களில் பீலேவுக்கு 2வது இடம்.ரொனால்டோவுக்கு முதலிடம்.

13.நைஜீரியாவில் அரசு படைகளுக்கும் தீவிரவாத கும்பலுக்கும் இடையே போர் நடந்த சமயத்தில் பீலே ஒரு கண்காட்சி போட்டியில் விளையாட நைஜீரியா வந்தார்.அவரது ஆட்டத்தை காண்பதற்காக 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்யப்பட்டது.

14.நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பீலே விளையாடிய போது,ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகும் பீலேவிடம் ஜெர்சியை மாற்றிக் கொள்ள எதிர் அணி வீரர்கள் முண்டியடிப்பார்கள்.(கால்பந்தில் போட்டி முடிந்தவுடன் எதிர் அணி வீரர்களிடம் இருந்து ஜெர்சியை பரஸ்பரம் மாற்றிக் கொள்வது வழக்கம்)பீலே விளையாடும் ஒவ்வொரு போட்டியின் போதும் 30 பீலேவின் ஜெர்சிகளை நியூயார்க் காஸ்மோஸ் வைத்திருக்கும்.

15.ஆயிரக்கணக்கான அறக்கட்டளை அமைப்புகள் நிதி திரட்டுவதற்காக பீலேவை விளையாட அழைத்துள்ளன.அவரும் சளைக்காமல் சென்று வருவார்.

16.2001ம் ஆண்டு பீலே நியூயார்க் காஸ்மோசின் கவுரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

17.பீலேவும் மரடோனாவும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்''மரடோனா குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடல் இல்லை'' என்று பீலே சொன்னால் மரடோனா,''பீலே மியூசியத்தில் இருக்க வேண்டியவர்''என்று பதிலளிப்பார்.

18.1966ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பாபி மூர்,''பீலேவை போன்ற ஒரு கால்பந்தாட்டக்காரரை தன் வாழ்நாளில் கண்டது இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

18.அவரது குடும்பத்தினர் பீலேவுக்கு வைத்த இன்னொரு பெயர் டீகோ. பின்னர் அவரது பள்ளி பருவத் தோழர்கள் வாஸ்கோடகாமா அணியின் கோல்கீப்பர் பெலேவின் பெயரை சூட்டினர்.அதுவே பின்னர் பீலே என்று மாறியது.

19.பீலேவின் தந்தையும் ஒரு கால்பந்து வீரர்தான்.ஒரே போட்டியில் ஐந்து கோல்களை தலையால் முட்டி அவர் அடித்துள்ளார்.ஆனால் பீலேவால் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.அதிக பட்சமாக ஒரு போட்டியில் 4 கோல்களை பீலே தலையால் முட்டி அடித்துள்ளார்.

20.1970ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பிரேசிலுக்கான 100வது உலக கோப்பை கோலையும் பீலே அடித்தார்.

21.1958ம் ஆண்டு உலக கோப்பை கால் இறுதி ஆட்டத்தில் வேல்ஸ் அணிக்கு எதிராக பீலே முதல் கோல் அடித்தார்.

22.1994ம் ஆண்டு மனதத்துவ நிபுணரும் பாடகியுமான அசிரியா லீமோசை 2வது திருமணம் செய்தார்.

23.கால்பந்து விளையாடும் ஒவ்வொரு குழந்தையும் என்னைப் போல வர முயற்சி செய்கின்றன.அந்த குழந்தைகள் என்னை போல் ஆவதை விட நல்ல மனிதர்களாக உலகத்தில் வலம் வரவே நான் விரும்புகிறேன் என்று பீலே ஒரு முறை சொன்னார்.

24. வெற்றி பெறுவதற்கு பீலே கொடுத்துள்ள விளக்கம் ''சக்சஸ் தற்செயலாக நிகழ்வது இல்லை,கடின உழைப்பு,கற்றுக் கொள்வது,கற்றுக் கொடுப்பது,தியாகம் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் விரும்புவதை நேசிப்பதில் நமது வெற்றி அடங்கியிருக்கிறது'' 

25.20ம் நுற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரராக குத்துச்சண்டை வீரர் முகமது அலியையும் பீலேவையும் கடந்த 2000ம் ஆண்டு பி.பி.சி தேர்வு செய்தது-

26.இத்தாலியின் புகழ்பெற்ற தடுப்பாட்டக்காரரான டாஸ்சிரியோ பர்ஸ்கிச்,1970ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது பீலே பற்றி குறிப்பிட்டதாவது'' எல்லாரையும் போலத்தானே அவரும் சதையாலும் எழும்புகளாலும் படைக்கப்பட்டுள்ளார் என்று நினைத்தேன்.ஆனால் எனது கணிப்பு தவறு என்பது பின்பு எனக்கு புரிந்தது''


27.பெரும்பாலான பிரேசிலியர்கள் பீலேவை 'பெரோலா நெக்ரா' என்றே கூறுகின்றனர்.இதற்கு அர்த்தம் 'கருப்பு முத்து'

27. பெரும்பாலான நாடுகள் பீலேவை தங்கள் நாட்டு குடிமகனாக்க முயற்சி செய்தன.இதனை தடுக்க 1961ம் ஆண்டு பிரேசில் பீலேவை தேசிய சொத்தாக அறிவித்தது.

28.1975ம் ஆண்டு நியூயார்க் காஸ்மோஸ் பீலோவை ஒப்பந்தம் செய்ய விரும்பியது.அப்போது அந்த அணியின் பொது மேலாளர் கிளைவ் டோயே,''இத்தாலிக்கு போக வேண்டாம் ஸ்பெயினுக்கு போக வேண்டாம்.அங்கே சென்றால் கோப்பைகளையும் பதக்கங்களையும் வெல்லலாம்.ஆனால் அமெரிக்காவுக்கு வந்தால் ஒரு நாட்டையே வெல்லலாம்'' என்று பீலேவிடம் கூறினார்.

29.இளமை பருவத்தில் பீலேவும் அவரது நண்பர்களும் ஒரு கால்பந்து அணி வைத்திருந்தனர்.அந்த அணியின் பெயர் 'காலணி இல்லாதவர்கள்'
30.கோகோ&கோலா நிறுவனம் பிரேசிலில் பீலேவை பற்றிய ஒரு கண்காட்சி வாகனத்தை உருவாக்கியுள்ளது.இந்த கண்காட்சி வாகனம் பிரேசில் நாட்டை சுற்றிக் கொண்டே வருகிறது.

31.கிறிஸ்டியானோ ரொனால்டோ பீலே பற்றி சொன்னது'' பீலே ஒரு முறைதான் பிறக்க முடியும்''

32. மூன்று முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்த ஒரே வீரர் பீலேதான்.

33.இளமை பருவத்தில் கால்பந்து வாங்க பணம் இல்லாத பீலே,''துணி,சாக்ஸ்,பேப்பர்கள் ஆகியவற்றை அடைத்து பந்து செய்து பயிற்சி எடுப்பார்.

34.ரெயில் நிலையங்களில் ஷ§க்களுக்கு பாலீஸ் போடும் பணியையும் பீலே செய்துள்ளார்.

35.''முதலிடத்தில் இருக்க வேண்டும்.இரண்டாவது இடத்தில் இருந்தால் அது வேஸ்ட்'' வெற்றி குறித்து பீலே சொன்னது.

36.பீலே ஐ.நா.அமைப்பு,யுனிசெப் அமைப்புகளின் நிரந்தர அம்பாசடர்.

37. பிரேசிலில் கால்பந்தில் இருக்கும் லஞ்ச ஊழல்களை தடுக்க பீலே ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

38.1964 நவம்பர் 24ந் தேதி பொடபாகோ அணிக்கு எதிராக சான்டோஸ் வீரரான பீலே 8 கோல்களை அடித்தார்.இந்த ஆட்டத்தில் சான்டோஸ் 11-0 என்று வெற்றி பெற்றது.

39.ஒரு முறை 8 கோல்களையும், 6 முறை 5 கோல்களையும் பீலே அடித்துள்ளார்.

40. 31 முறை 4 கோல்களும் 92 ஹாட்ரிக் கோல்களும் பீலேவின் கோல் கணக்கில் அடக்கம்.

41. 1971ம் ஆண்டு ஜுலை 18ந் தேதி யூகோஸ்லோவாகியா அணிக்கு எதிராக கடைசி சர்வதேச ஆட்டத்தில் பீலே விளையாடினார்.இந்த போட்டி 2-2 என்று டிராவில் முடிந்தது.

42.கிளப் போட்டியில் கடைசி ஆட்டம் பிளமிங்கோ அணிக்கு எதிரானது.இந்த போட்டியில் சான்டோஸ் 2&0 என்று வெற்றி பெற்றது.இது 1976 அக்டோபர் 6ந் தேதி நடைபெற்றது.

43.1977ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி பீலே விளையாடிய சான்டோஸ் மற்றும் நியூயார்க் காஸ்மோஸ் அணிகள் ஒரு கண்காட்சி போட்டியில் நியூயார்க்கில் மோதின.இந்த போட்டியில் முதல் பாதியில் சான்டோஸ் அணிக்காகவும் இரண்டாவது பாதியில் நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காகவும் பீலே விளையாடினார்.

44.மறக்கப்பட்ட மாவீரன் கரிஞ்சாவும் பீலேவும் இணைந்து விளையாடிய எந்த போட்டியிலும் பிரேசில் தோற்றது இல்லை.

45.பிரேசில்  அணிக்காக 92 கோல்கள் அடித்துள்ளார்.இந்த சாதனை எந்த பிரேசில் வீரரும் இன்னும் வரை முறியடிக்கவில்லை.

46.உலக கோப்பையில் பிரேசிலின் 100வது கோலை பீலே தலையால் முட்டி அடித்தார்.

47.1980ல் பீலேவின் கால்பந்தாட்டதை வைத்து வீடியோ கேம் வந்தது.அதன் பெயர் 'பீலேஸ் சாக்கர்'

48.கராத்தே வீரர் ஜோஸ் லேன்டி ஜேனுக்கும் பீலே என்ற நிக்நேம் உண்டு.

49.புகழ் பெற்ற நெதர்லாந்து நாட்டு ஓவியர் டிக் பிரினிஸ்டன் பீலேவை ஓவியமாக வரைந்து பரிசளித்துள்ளார்.

50.1975ம் ஆண்டு பீலே நியூயார்க் காஸ்மோசில் இணைந்தார்.நியூயார்க்கில் பீலே ஆடி வந்த காலத்தில்தான் கால்பந்து அமெரிக்காவில் பிரபலமாகத் தொடங்கியது.பீலே ஆடிய போட்டியை காண சராசரியாக 13 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர்.அமெரிக்காவில் அப்போது இது ஒரு சாதனை ஆகும்.

51. 1956 ஜுன் 9ந் தேதி லேவ்ராஸ் அணிக்கு எதிரான சான்டோஸ் வீரர் பீலே முதல் ஹாட்ரிக் கோல் அடித்தார்.

52.1975ம் ஆண்டு ஜுன் 5ந் தேதி நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக பீலே டல்லாஸ் டொர்னாடோஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்கினார்.இதில் கோலும் அடித்தார்.இந்த ஆட்டம் 2-2 என்று டிரா ஆனது.

53.பீலே நடித்த 'எஸ்கேப் டு விக்டரி' என்ற ஆங்கிலப் படம் உலக மக்களை வெகுவாக கவர்ந்தது.

54.2005ம் ஆண்டு வயகராவை பயன்படுத்த வேண்டாம் என்று பீலே ஒரு விளம்பர படத்தில் நடித்தார்.

55.1970ம் ஆண்டு மெக்சிகோ உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டம் துவங்க இருந்தது.காலணி லேஸ் அவிழ்ந்து விட்டது வெயிட் என்று நடுவரிடம் பீலே கையை காட்டினார்.ஏதோச்சையாக கேமரா பீலே லேசை கட்டுவதை காட்டியது.அப்போது அவர் 'பூமா' காலணியை பயன்படுத்தி வந்தார்.அந்த ஒரே நாளில் மட்டும் லட்சக்கணக்கான பூமா காலணிக்கள் விற்று தீர்ந்தன.

56.பீலே 129 முறை 3 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார்.

57.பீலேவின் 1000வது கோல் பெனால்டி முறையில் அமைந்தது.இதே போல் ஆயிரம் கோல் அடித்துள்ள இன்னொரு வீரர் ரொமாரியோ.இவரும் பெனால்டி மூலம்தான் 1000வது கோலை அடித்தார்.

58.பீலே பிறந்த நகரம் சாபாலோ.

59.பீலேவின் உயரம் 5 அடி 8 அங்குலம்.

60.பீலே இரண்டு கிளப் அணிகளுக்கு மட்டுமே விளையாடியுள்ளார்.1956 முதல் 74 வரை சான்டோஸ்காக விளையாடி 1087 கோல்களை அடித்துள்ளார்.1975 முதல் 77 வரை நியூயார்க் காஸ்மோஸ் அணிக்காக விளையாடி 67 கோல்களை அடித்துள்ளார்.

61.பீலேவின் தந்தை பெயர் டோன்டினோ.இவர் பிளமினெஸ் அணி வீரர்.

62.பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து மைதானமான மரக்கானாவில் பீலேவின் காலடித்தடம் பதிக்கப்பட்ட நினைவு சின்னம் உள்ளது.

63.பீலேவுக்கு 1966ம் ஆண்டு திருமணம் நடந்தது.ரோஸ்மேரி என்பவரை அவர் மணந்தார்.இவர்களுக்கு இரண்டு மகள்கள்.மூத்தவர் பெயர் கெல்லி கிறிஸ்டியானா,இளையவர் ஜெனிபர்.மகன் பெயர் எடின்கோ.1978ம் ஆண்டு இந்த தம்பதிகள் விவாகரத்து செய்தனர்.

64.1994ம் ஆண்டு பீலே இரண்டாவது திருமணம் செய்தார்.இதன் மூலம் பீலேவுக்கு இரட்டை குழந்தைகள் உண்டு.பெயர் ஜோசுவா,செலாஸ்டே

65.டைம் இதழ் 20ம் நுற்றாண்டின் 20 முக்கிய மனிதர்களில் ஒருவராக பீலேவை தேர்வு செய்தது.

66.கடந்த 2000ம் ஆண்டு 'பிபா' இணையம் மூலம் 20ம் நுற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் யார்?என்று ஓட்டெடுப்பு நடத்தியது.இதில் மரடோனா முதலிடம் 
பிடித்தார்.இளைய தலைமுறையின் ஆதரவு மரடோனாவுக்கு அதிகமாக இருந்தது.ஏனென்றால் அவர்கள் பீலேவின் விளையாட்டை பார்த்தது இல்லை.இதனால் வேறு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி சிறந்த வீரராக இருவரையும் தேர்வு செய்தது.

67.உலகின் மிகப் பழமையான அணியான 'ஷெட்பீல்டு' துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதையட்டி கடந்த 2007ம் ஆண்டு இன்டர்மிலானுடன் ஒரு நட்பு போட்டியில் மோதியது.இந்த போட்டியை துவக்கி வைக்கும் பெருமை பீலேவுக்கு வழங்கப்பட்டது.

68.திரைப்படம்,குறும்படம்,டி.வி.தொடர்கள் என 13 படங்கள் பீலேவைப் பற்றி வெளி வந்துள்ளன.

69.1989ம் ஆண்டு வடகொரியா பீலேவுக்கு தபால் தலை வெளியிட்டது.