வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —
உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்....
எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடியோக்களை Download செய்வது எப்படி.?
கூகுளே கொண்டாடும் மனிதப் பெண் கணினிக்கு இன்று பிறந்தநாள் (Photos, Video)
பகிர்வதற்கு :
அந்த குட்டிப்பெண்ணின் அப்பா கொஞ்சம் வித்தியாசமானவர் .அவரின் முன்னோர்கள் எல்லாரும் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவருக்கு அது வெறுத்திருந்தது. சர்க்கஸ் பக்கம் போனார் எண்ணற்ற வித்தைகள் செய்வார். சிங்கத்தை அடக்குவார், கயிறு மீது நடப்பார் இன்னும் பலபல ஜாலியான மேஜிக்குகள் கூட காட்டுவார். அந்த சுட்டிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது, “அப்பா எனக்கும் எதாச்சும் சொல்லித்தா !” என கேட்டதும் கார்டுகளை வைத்து மேஜிக் செய்வதை சொல்லித்தர ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் தான் எல்லா கார்டுகளையும் மனப்பாடமாக ஒப்பிக்க ஆரம்பித்தாள். அப்பா அசந்து போனார் -காரணம் அந்த சுட்டிக்கு வயது மூன்று.
இனிமேல் சர்க்கஸ் வேண்டாம் என முடிவு செய்து கொண்டு அந்த தேவி பாப்பாவை தெருத்தெருவாக கூட்டிப்போய் அவளின் அதிவேக கணக்கு போடும் ஆற்றலை உலகுக்கு காட்டினார்.
“சின்னப்பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு செக் பண்ணிடலாம் ” என பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தார்கள். போன இடத்தில் எல்லாம் அந்த பெண் பின்னி எடுத்தாள். மைசூர் அண்ணாமலை என கல்விக்கூடங்களில் இருந்து கேள்வி வருவதற்கு முன் பதில் வந்து விழ ஆரம்பித்தது.
வகுப்புகளுக்கு போகவே முடியவில்லை; வீட்டின் வறுமையை போக்க ஊர் ஊராக இதற்காக சுற்ற ஆரம்பித்து அதுவே வாழ்க்கை ஆகிப்போனது. அப்பொழுது தான் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு.
சுட்டிக்கு இப்பொழுது வயது நாற்பத்தி ஆறு. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா-தெரியவில்லை
சகுந்தலா தேவி எனும் மனிதக்கணினி கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி காலமாகி விட்டார். சிக்கல் பெரிது தான் 91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305 620821016129132845564805780158806771. என்கிற இந்த 201 இலக்க எண்ணின் இருபத்தி மூன்றாவது வர்க்க மூலத்தை கேட்டார்கள்.
கணினி 13000 கட்டளைகளுக்கு அப்புறம் ஒரு நிமிடத்தில் பதிலை சொல்ல தயாரான பொழுது அந்த பெண் 546372891 என பத்து நொடிகள் முன்னமே சொல்லி விட்டாள்! அரங்கம் எழுந்து நின்று கைதட்டியது
7,686,369,774,870 x 2,465,099,745,779 என இரு எண்களை பெருக்க சொல்லி லண்டனில் கொடுத்தார்கள். இருபத்தி எட்டு நொடிகள் -விடை வந்து விழுந்தது. கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார் அந்த தேவி என அறியப்பட்ட சகுந்தலா தேவி .
ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்குக்கான விடையை சகுந்தலா தேவி மிகச் சில நொடிகளில் ஐன்ஸ்டீன் முன்னிலையிலேயே தீர்த்தார். அசந்து போய் அவரைப்பாரட்டினார் ஐன்ஸ்டீன்
தான் பள்ளிக்கல்வி பெறா விட்டாலும் பல சுவையான நூல்களை பிள்ளைகளுக்காக கணிதத்தை எளிமையாக கதை வடிவில் சொல்லும் வகையில் அமைத்தார். கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை.
நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், ஆடுகிற் விளையாட்டு, பார்க்கிற விஷயங்கள் என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதை சுட்டிகளுக்கு சொல்லித்தர வேண்டும். கதையாக ஆக்க வேண்டும். அவர்கள் ரசிப்பார்கள் என்றவர் அவர்.
அவரிடம் ஒரு நூற்றாண்டின் ஒரு தேதியை நீங்கள் சொன்னால் உடனே அது எந்த கிழமை என பதில் வந்து விழும்.
வேதநூல்களில் உள்ள கணிதத்தை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்கிற ஆசையில் நூறு ஏக்கர் பரப்பளவில் அவர் துவங்க இருந்த வேத கணித பல்கலைக்கழகம் கடைசியில் அவரோடு காற்றில் கரைந்து விட்டது. அவருக்கு இன்று பிறந்தநாள். உலகின் அதிவேக மனிதக்கணினியை அன்போடு நினைவு கூர்வோம்..
நன்றி: பூ.கொ. சரவணன்
அந்த குட்டிப்பெண்ணின் அப்பா கொஞ்சம் வித்தியாசமானவர் .அவரின் முன்னோர்கள் எல்லாரும் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவருக்கு அது வெறுத்திருந்தது. சர்க்கஸ் பக்கம் போனார் எண்ணற்ற வித்தைகள் செய்வார். சிங்கத்தை அடக்குவார், கயிறு மீது நடப்பார் இன்னும் பலபல ஜாலியான மேஜிக்குகள் கூட காட்டுவார். அந்த சுட்டிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது, “அப்பா எனக்கும் எதாச்சும் சொல்லித்தா !” என கேட்டதும் கார்டுகளை வைத்து மேஜிக் செய்வதை சொல்லித்தர ஆரம்பித்தார்.
கொஞ்ச நேரம் தான் எல்லா கார்டுகளையும் மனப்பாடமாக ஒப்பிக்க ஆரம்பித்தாள். அப்பா அசந்து போனார் -காரணம் அந்த சுட்டிக்கு வயது மூன்று.
இனிமேல் சர்க்கஸ் வேண்டாம் என முடிவு செய்து கொண்டு அந்த தேவி பாப்பாவை தெருத்தெருவாக கூட்டிப்போய் அவளின் அதிவேக கணக்கு போடும் ஆற்றலை உலகுக்கு காட்டினார்.
“சின்னப்பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு செக் பண்ணிடலாம் ” என பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தார்கள். போன இடத்தில் எல்லாம் அந்த பெண் பின்னி எடுத்தாள். மைசூர் அண்ணாமலை என கல்விக்கூடங்களில் இருந்து கேள்வி வருவதற்கு முன் பதில் வந்து விழ ஆரம்பித்தது.
வகுப்புகளுக்கு போகவே முடியவில்லை; வீட்டின் வறுமையை போக்க ஊர் ஊராக இதற்காக சுற்ற ஆரம்பித்து அதுவே வாழ்க்கை ஆகிப்போனது. அப்பொழுது தான் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு.
சுட்டிக்கு இப்பொழுது வயது நாற்பத்தி ஆறு. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா-தெரியவில்லை
சகுந்தலா தேவி எனும் மனிதக்கணினி கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி காலமாகி விட்டார். சிக்கல் பெரிது தான் 91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305 620821016129132845564805780158806771. என்கிற இந்த 201 இலக்க எண்ணின் இருபத்தி மூன்றாவது வர்க்க மூலத்தை கேட்டார்கள்.
சகுந்தலா தேவி எனும் மனிதக்கணினி கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி காலமாகி விட்டார். சிக்கல் பெரிது தான் 91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305 620821016129132845564805780158806771. என்கிற இந்த 201 இலக்க எண்ணின் இருபத்தி மூன்றாவது வர்க்க மூலத்தை கேட்டார்கள்.
கணினி 13000 கட்டளைகளுக்கு அப்புறம் ஒரு நிமிடத்தில் பதிலை சொல்ல தயாரான பொழுது அந்த பெண் 546372891 என பத்து நொடிகள் முன்னமே சொல்லி விட்டாள்! அரங்கம் எழுந்து நின்று கைதட்டியது
7,686,369,774,870 x 2,465,099,745,779 என இரு எண்களை பெருக்க சொல்லி லண்டனில் கொடுத்தார்கள். இருபத்தி எட்டு நொடிகள் -விடை வந்து விழுந்தது. கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார் அந்த தேவி என அறியப்பட்ட சகுந்தலா தேவி .
ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்குக்கான விடையை சகுந்தலா தேவி மிகச் சில நொடிகளில் ஐன்ஸ்டீன் முன்னிலையிலேயே தீர்த்தார். அசந்து போய் அவரைப்பாரட்டினார் ஐன்ஸ்டீன்
தான் பள்ளிக்கல்வி பெறா விட்டாலும் பல சுவையான நூல்களை பிள்ளைகளுக்காக கணிதத்தை எளிமையாக கதை வடிவில் சொல்லும் வகையில் அமைத்தார். கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை.
நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், ஆடுகிற் விளையாட்டு, பார்க்கிற விஷயங்கள் என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதை சுட்டிகளுக்கு சொல்லித்தர வேண்டும். கதையாக ஆக்க வேண்டும். அவர்கள் ரசிப்பார்கள் என்றவர் அவர்.
அவரிடம் ஒரு நூற்றாண்டின் ஒரு தேதியை நீங்கள் சொன்னால் உடனே அது எந்த கிழமை என பதில் வந்து விழும்.
வேதநூல்களில் உள்ள கணிதத்தை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்கிற ஆசையில் நூறு ஏக்கர் பரப்பளவில் அவர் துவங்க இருந்த வேத கணித பல்கலைக்கழகம் கடைசியில் அவரோடு காற்றில் கரைந்து விட்டது. அவருக்கு இன்று பிறந்தநாள். உலகின் அதிவேக மனிதக்கணினியை அன்போடு நினைவு கூர்வோம்..
நன்றி: பூ.கொ. சரவணன்
பகிர்வதற்கு :
Blue Screen Error (Blue Screen of Death -BSOD) பிரச்சனைகளும், தீர்வும்
Windows has been shut down to prevent damage to your computer என்ற செய்தியுடன் நீலத்திரைப் பிழை (Blue Screen Error, Blue Screen of Death-BSOD) சில சமயம் கருந்திரையாகவும் (Black Screen) வருவதுண்டு. இது பல காரணங்களால் வருகிறது. விண்டோஸ் கணினிகளில் ஏற்படும் இப்படியான தவறுகள் லீனக்ஸ் கணினிகளில் வருவதில்லை. அதைப் பற்றி இன்று பார்ப்போம்.
Page Fault error எனப்படும் 0×00000050 என்பது Blue Screen of Death (BSOD) எனவும் சில சமயங்களில் சொல்லப்படுகிறது. Hard Disk, ட்ரைவர்(Device Driver), சில மென்பொருள் காரணமாக, இயங்கிக் கொண்டிருக்கும் கணினியில், தரவுகள்(data) அழியாமலும், கணினியைக் காப்பதற்காகவும் கணினி நீல நிறத் தவறு (Blue Screen Error ) எனக் காட்டி கணினி இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.
Hard Diskல் ஏற்பட்ட பிழைகள் மற்றும் இணைக்கப்பட்ட வன்பொருள் பழுதடைந்த அல்லது சரியாக இயங்காத அல்லது நிரம்பியுள்ள நிலையில் உள்ள RAM நினைவகம், அதைத் தொடர்ந்து CPU என்ற செயலகம் செயலில் ஈடுபட தேவையான நினைவக இடம் இல்லாத நிலையிலும் (RAM memory, L2 RAM cache, video RAM), NTFS போர்மட்டில் ஏற்பட்ட தவறும், ஆன்டிவைரஸ் மென்பொருள் காரணமாகவும், சிஸ்டத்தில் ஏற்பட்ட தவறும் எனப் பல காரணங்களால் கணினி BSOD ஐக் காட்டி நின்று விடுகிறது. பொதுவாக மென்பொருளை விட, Hard Diskலும், RAM நினைவகத்திலும் ஏற்படும் தவறுகளே அதிகமாக BSOD தவறுகளுக்கு காரணமாகி விடுகிறது.
இதை சரி செய்ய சில வழிகள்:
- எந்த காரணமாக இருந்தாலும் முதலில் கணினியை Restart செய்து விடலாம். இதன் மூலம் முன் இருந்த நிலைக்கு செல்லலாம்.
- கடைசியாக இன்ஸ்டால் ஆன மென்பொருளை அப்டேட் செய்யலாம் அல்லது நீக்கலாம்.
- Hard Diskல் ஏற்படும் தவறுகளை Run சென்று “Chkdsk /f /r” என்று கொடுத்து சரி செய்து கொள்ளலாம்.
- Safe mode இல் தொடக்கி, சில startup program களை நீக்கி சரி செய்யலாம். தற்காலிக நினைவகத்தை (RAM+Page File) அதிகரிக்கலாம்.
- RAM ஐக் கழற்றி சுத்தம் செய்து திரும்ப இணைக்கலாம்.
- Device பாதை (IRQ) வேறொரு பாதையில் மாறி, conflict ஏற்பட்டால் Device manager சென்று மஞ்சள் குறியீடு உள்ளதா எனப் பார்த்து update அல்லது திரும்ப இன்ஸ்டால்(uninstall / install ) செய்து கொள்ளலாம்.
System Drive களில் தவறுகள் என சந்தேகப்பட்டால் Safe mode போகும் போது உள்ள ஆப்சனில் Last Known Good Configuration என்பதில் சென்று சரி செய்யலாம். System Service களில் தவறு என்றால், Control Panel -Administrative Tools- Services இல் சந்தேகத்திற்குரியதை நிறுத்தி(disable) வைக்கலாம். sfc scanம் செய்யலாம். Startup Repair செய்யலாம். இந்த BSOD தவறை சரிசெய்ய சிலர் பல சமயங்களில் முற்றாக புதிதாக இயங்குதளத்தை நிறுவியும் இருக்கின்றனர்.
கடைசியாக கணினியில் என்ன செய்தீர்கள் என்பதை ஞாபகப்படுத்தினாலே, கணினியில் ஏற்படும் பல தவறுகளை சரி செய்து விடலாம். BSOD பிழைகளின் போது stop code திரையில் வரும்.அதை வைத்தும் பிழைகள் என்ன என்பதைக் கண்டறிய முடியும்.
[இதைவிட நமக்கு வேண்டாதவர்கள் பக்கத்தில் இருந்து தொண தொண என்று பேசிக் கொண்டு நம் கணினியில் நுழைந்து எரிச்சலை ஏற்படுத்தினால் தற்காலிகமாக ஒரு Blue Screen ஐ உருவாக்கி, கணினி பழுது என்று சொல்லித் தப்பித்தும் விடலாம்!!]
இந்த நிலையில் RAM-நினைவகம் மற்றும் Hard Diskல் உள்ள Page File-Virtual memory பற்றி சிறிதாவது தெரிந்து கொள்வது சிறந்ததாகும். கண்டது கற்றது பண்டிதன் ஆவான்.
RAM இல் ஏற்படும் பிழைகள் பொதுவாக page file ற்கும் nonpaged area விற்கும் இடையில் ஏற்படும் தொடர்பின்மை காரணமாக ஏற்படுகிறது. RAM இல் உள்ள nonpaged area வில் அந்தச் சமயம் இயங்கிக் கொண்டிருக்கும் எல்லா செயல்களையும் RAM தயார் நிலையில் வைத்திருக்கும். அதே சமயம் Page File-memory இல், இயங்கத் தேவையான பக்கங்களின் விபரங்களையும், தகவல்களையும் RAM சேமித்து தயார் நிலையில் வைத்திருக்கிறது. nonpaged area-memory இல் தயாராக இருக்கும் செயல் ஒன்றை செயல்படுத்த RAM என்ற நினைவகம் Page File இல் உள்ள பக்க விபரங்கள், தகவல்களை பெறும் நோக்குடன் அதன் உதவியை நாடுகிறது. அப்போது Page File-memory ஆல் கொடுக்க முடியாது என்றால், CPU மேற்கொண்டு செயலாற்ற (Process) முடியாத நிலையில், கணினியை காப்பாற்றவும், தரவுகளை அழிந்து போகாமல் தடுக்கவும் CPU-செயலகம் கணினியை நிறுத்தி விடுவதால் இந்த Blue Screen Error வருகிறது. இதற்கு RAM -physical memory யும் Page File -Virtual memory யும் போதாமை அல்லது தொடர்பின்மை காரணமாக இருக்கிறது.
RAM இரண்டு விதமாக செயல்படுகிறது. ஒன்று கணினியின் Motherboardல் இணைக்கப்பட்ட RAM-Physical Memory, இன்னொன்று Hard Diskல் உள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் Virtual memory (Page File) ஆகும்.
Hard Diskல் வைத்து வேலை பார்ப்பதைவிட, RAM நினைவகத்தில் வைத்து வேலை பார்ப்பது சுலபமானதும், வேகமானதும் ஆகும். உதாரணமாக பிரவுசர் மூலம் கற்போம் தளத்தை படிக்க அல்லது YouTube வீடியோவைப் பார்க்க செல்வோமானால், முதலில் அவை RAM நினைவகத்தில் தரவிறக்கப்பட்டு சேமித்து பின்னர் நமது பார்வைக்குத் தருகிறது. முடிந்ததும் அடுத்து வரும் வேலைகளைத் தொடருவதற்காக இவற்றை அழித்து விடுகிறது. Cookie என்ற ஒரு சிறிய file மட்டும் அடுத்த முறை இணையத்தில் இலகுவாகவும் விரைவாகவும் குறிப்பிட்ட பக்கத்திற்கு செல்வதற்காக, பிரவுசரில் சேமிக்கப்படுகிறது.
இப்படி தரவுகளோ வீடியோக்களோ,படங்களோ தரவிறக்கப்பட்டு RAM நிரம்பிவிடும் போது, சிலவற்றை Hard Diskல் உள்ள Page File (virtual memory) இல் சேமிக்கப்படுறது. ஒரு ப்ரொகிராம் சிறிதாக்கப்படும்(minimize) போது அல்லது அதிக நேரம் பயன்படுத்தப்படாதபோது, page file இல் இருப்பவை RAM ற்கு மாற்றப்படுகிறது. மீண்டும் பெரிதாக்கும் (maximize ) போது மீண்டும் அவை page file ற்கு செல்கிறது. இந்த செயலை நாம் கணினியில் உள்ள பச்சை நிற led-light விட்டு விட்டு எரிவதில் இருந்து காண முடியும்.
அதே போல் பெரிய ப்ரொகிராம் ஒன்று வேலை செய்யும் போது, Hard Diskல் உள்ள page file ஐ கணினி பயன்படுத்துவதால் சிறிது வேகம் குறைகிறது. இதைத் தவிர்க்க தேவையற்ற ஒரு செயல் backgroundல் இயங்குமானால் (Taskbar manager இல் பார்க்க முடியும்), அதை முற்றாக நிறுத்தி விடுவதால் கணினியை வேகமாக்க முடியும். RAM ஐ upgrade செய்வதாலும் வேகத்தை அதிகரிக்க முடியும். சிலர் Page File ஐ நீக்கி(disable) விடுவதால், வேகம், performance அதிகரிக்கும் என்று சொல்வது தவறான விளக்கமாகும். இது தவிர இரண்டு Hard Disk இருக்கும் கணினிகளில் page file இரண்டாவது Hard Diskற்கு மாற்றினால், இரண்டு Hard Diskகள் ஒரே சமயத்தில் வேலை செய்வதால் வேகம் குறையும். ஒரே Hard Diskல் வேறு பிரிவில் (partition) page file வைத்திருந்தால் எந்த மாற்றமும் ஏற்படாது.
கணினியைத் தொடக்கவும், தொடர்ந்து கணினியில் உள்ள செயலிகள் மற்றும் அனைத்தும் முறையாக இயங்கவும், P-RAM (Physical- Random Access Memory ) என்ற தற்காலிக நினைவகம் தேவைப்படுகிறது. இந்த P-RAM ற்கு உதவும் நோக்குடன், கணினியின் Hard Diskல் உள்ள வெற்றிடத்தில் (free space ) இருந்து உருவாக்கப்பட்ட Page File (V-RAM -Virtual memory ) பயன்படுத்தப்படுகிறது. கணினி செயல்கள் அதிகரித்து செயல்படாமல் அல்லது வேகம் குறையும் போது RAM ல் உள்ள தரவுகளை, விபரங்களை Hard Diskல் உருவாக்கப்பட்ட நினைவக சேமிப்பில் (Page File) தற்காலிகமாக சேமித்து பின் திரும்பப் பெறுகிறது. Hard Diskல் உருவாக்கப்படும் நினைவகத்தை (Virtual Memory -Page File), விண்டோஸ் தானியங்கியாக அமைத்துக் கொண்டாலும் கூட, நாம் நமக்கு வேண்டிய வகையில், நமது Hard Diskல் காலியாக இருக்கும் இடத்தை பொறுத்து மாற்றி அமைக்க முடியும். மாற்றி அமைப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.
Start – Control Panel – System and Maintenance -System - Advanced system settings -Advanced tab- Performance -Settings -
Advanced – Virtual memory – Change- Automatically manage paging file size for all drives -Maximum size (நமக்கு வேண்டியபடி)- OK
இந்த அளவு RAM அளவின் 1.5 மடங்கு (குறைந்த அளவு) ஆகும். கணினி Hard Diskன் காலி இடத்தைப் பொறுத்து மூன்று -நான்கு மடங்கு வரை அளவை (maximum) அதிகரிக்கலாம்.
உதாரணமாக. RAM=512MB; Virtual Memory 512 x 1.5 = 768 MB ல் இருந்து 512 x 4 = 2048 வரை (Hard Disk ல் போதுமானfree space இருந்தால்) அதிகரிக்கலாம். இருப்பினும் 1GB க்குக் குறைந்த RAM ஆக இருந்தால், குறைந்த அளவு 1.5மடங்கும், அதிக அளவு 3 மடங்கும் சிறந்ததாகும். 1 GB க்கு மேலாயின் குறைந்த அளவு 1 மடங்காகவும்,அதிக அளவு 3மடங்காகவும் இருப்பது சிறந்ததாகும்.
(Virtual Memory = Swap File = Page File ).
இந்த RAM Memory ஐ USB மூலமும் அதிகரிக்கலாம். இதைப் பற்றிய பதிவு - பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க
உங்கள் கணினிக்கு தேவையான 300 இலவச மென்பொருள்
Office
OpenOffice - office suiteMs office 2010-office suite
PC Suite 602 - office suite
AbiWord - text editor
Atlantis Nova - text editor
Microsoft PowerPoint Viewer - power point files viewer
Adobe Reader - pdf reader
Foxit PDF Reader - pdf reader
PDFCreator - create pdf documents
Doc Convertor - document convertor
Convert - unit convertor
Converber - unit convertor
Sunbird - calendar/organizer
EssentialPIM Free - calendar/organizer
PhraseExpress - speed up your writing
ATnotes - create notes on the desktop
Archive managers
7-Zip - compression programWINRAR-compression program
IZArc - compression program
TugZIP - compression program
CabPack - compression program
Universal Extractor - extract files from any type of archive
Internet
Firefox - web browserGoogle Chrome-web browser
Internet Explorer - web browser
Maxthon - web browser
Opera - web browser
Avant Browser - web browser
Thunderbird - email client
PopTray - check for emails
Free Download Manager - download manager
FlashGet - download manager
WellGet - download manager
Download Master - download manager
WGET - commandline download manager
HTTrack - offline browser
WebReaper - offline browser
Yeah Reader - RSS reader
GreatNews - RSS reader
RSSOwl - RSS reader
P2P
µTorrent - torrent clientAzureus - torrent client
BitComet - torrent client
ABC - torrent client
BitTornado - torrent client
eMule - p2p client
SoulSeek - p2p client
Shareaza - p2p client
DC++ - Direct Connect network client
PeerGuardian - IP blocker
Chat
Miranda - chat clientMSN Messenger - chat client
Yahoo Messenger - chat client
QIP - chat client
Gaim - chat client
JAJC - chat client
HydraIRC - IRC client
Talkative IRC - IRC client
IceChat - IRC client
Skype - VOIP client
Google Talk - VOIP client
VoipStunt - VOIP client
Gizmo - VOIP client
Wengo - VOIP client
Security
AVG Free - antivirusAvast Home Free - antivirus
AntiVir PersonalEdition - antivirus
BitDefender Free - antivirus
ClamWin - antivirus
CyberDifender - Internet Security Suite
Ad-aware - anti-spyware
Spybot: Search & Destroy - anti-spyware
Windows Defender - anti-spyware
SpywareBlaster - anti-spyware
Spyware Terminator - anti-spyware
Tootkit Reveaker - rootkit detection utility
Winpooch - system protection
HiJack Free - system protection
HighJackThis - hijackers detector and remover
Kerio Personal Firewall - firewall
Sygate Personal Firewall - firewall
ZoneAlarm - firewall
AxCrypt - file encryption
Simple File Shredder - securely delete files
PuTTy - SSH client
KeePass - password manager
LockNote - password manager
nPassword - password manager
Microsoft Baseline Security Analyzer - identify security misconfigurations
Network
Hamachi - VPN clientRealVNC - remote control
UltraVNC - remote control
Ethereal - local area network administration
The Dude - network administration
Wireshark - network administration
Angry IP Scanner - IP scanner
IP-Tools - IP scanner
Free Port Scanner - IP scanner
NetMeter - network bandwidth monitoring
Servers
FileZilla - FTP clientFileZilla Server - FTP server
EFTP - FTP client/server
XAMPP - integrated server package of Apache, mySQL, PHP and Perl
WAMP - Apache, PHP5 and MySQL server
Audio
Foobar2000 - audio playerWinAmp - audio player
1by1 - audio player
JetAudio - audio player
XMPlay - audio player
Xion - audio player
Apollo - audio player
MediaMonkey - music organizer
The GodFather - music organizer
dBpowerAMP - audio converter
Audacity - audio converter
WavePad - audio converter
Kristal Audio Engine - audio editor
Exact Audio Copy - CD ripper
Audiograbber - CD ripper
CDex - CD ripper
Mp3 Tag Tools - tag editor
Mp3tag - tag editor
Taggin’ MP3 - tag editor
Monkey’s Audio - APE compressor/decompressor
mpTrim - mp3 editor
WavTrim - wave editor
EncSpot Basic - analyse mp3 files
Video
Windows Media Player - audio/video playerVLC - video player
Media Player Classic - video player
MV2Player - video player
CrystalPlayer 1.95 - video player
Zoom Player - video player
GOM Player - video player
viPlay - video player
DSPlayer - video player
VirtualDub - video editor
CamStudio - video screen recording
AviSplit - Avi splitter
Video mp3 Extractor - rip audio from video files
Free iPod Converter - convert all popular video formats to iPod video
MediaPortal - turning your PCinto a Media Center
The FilmMachine
Image
Gimp - image editorPhotoFiltre - image editor
Paint.net - image editor
ArtRage - image editor
Artweaver - image editor
IrfanView - image viewer
Picasa - image viewer
XnView - image viewer
FastStone Image Viewer - image viewer
FuturixImager - image viewer
Easy Thumbnails - create thumbnails from images
JoJoThumb - create thumbnails from images
iWebAlbum - create web photo albums
JAlbum - create web photo albums
3D Box Shot Maker - design quality box shot
FastStone Capture - screen capture
WinSnap - screen capture
3D
Blender3D - 3D renderer3Delight Free - 3D renderer
SketchUp - 3D modeling
Maya Learning Edition - 3D modeling
Developers
AutoIt - task automationSciTE4AutoIt3 - text editor for AutoIt
AutoHotkey - task automation
PHP Designer - PHP editor
Notepad++ - text editor
ConTEXT Editor - text editor
PSPad - text editor
FoxEditor - text editor
Crimson Editor - source code editor
Elfima Notepad - text editor
Notepad2 - text editor
Nvu - HTML editor
Alleycode - HTML editor
BlockNote - web page editor
Weaverslave - web page editor
CD/DVD
DeepBurner - CD/DVD burnerCDBurner XP Pro - CD/DVD burner
BurnAtOnce - CD/DVD burner
Express Burn - CD/DVD burner
Zilla CD-DVD Rip’n’Burn - CD/DVD burner
ImgBurn - ISO, BIN burner
Daemon tools - virtual CD/DVD
DVD Decrypter - DVD ripper
DVD Shrink - DVD ripper
Nero CD-DVD Speed - CD/DVD info and quality test
Codecs
GSpot - codec informationAC3Filter - audio codec
Xvid - video codec
QuickTime Alternative - video codec
Real Alternative - video codec
K-Lite Codec Pack - all codecs
System Ulilities
CCleaner - system cleanerxp-AntiSpy - OS setup
jv16 Powertools - system utilities
XP SysPad - system monitoring utility
What’s Running - process guard
Registrar Lite - registry editor
WinIPConfig - replacement for “ipconfig.exe” and “route.exe”
Unlocker - file eraser
Eraser - secure file eraser
Undelete Plus - file recovery
freeCommander - file manager
ExplorerXP - file manager
Duplicate File Finder - find all duplicate files
Ant Renamer - file renaming
ReNamer - file renaming
Icons From File - icos extractor
Chaos MD5 - MD5 generator
HashTab - MD5, SHA1 and CRC-32 file hashes
Rainlendar Lite - desktop calendar
Weather Watcher - weather firecast
Subtitle Workshop - subtitles editor
Ant Movie Catalog - movie organizer
Disclib - CD organizer
Dexpot - virtual desktops
DriveImage XML - create partition images
MozBackup - backup and restore bookmarks, etc.
SyncBack - system backup
Atomic Cock Sync - syncronize your clock
Citrus Alarm Clock - alarm clock
TaskSwitchXP - Alt-Tab replacement
Launchy - application launcher
allSnap - make all windows snap
Sysinternals Tools - various system tools
StrokeIt - mouse gestures
Net Profiles - create profiles of your network settings
ResourceHacker - view, modify, rename, add, delete
Java Runtime Environment - java for Windows
UI Enhancements
RocketDock - application launcherAveDesk - desktop enhancer
IconPhile - customize windows’s system icons
CursorXP Free - change mouse cursors
MacSound - volume control
LClock - Windows Longhorn clock
Y’z Dock - application launcher
Y’z Shadow - shadow effect to the windows
Y’z Toolbar - change the toolbar icons in Explorer and Internet Explorer
Taskbar Shuffle - rearrange the programs on the taskbar by dragging
Visual Task Tips - thumbnail preview image for each task in the taskbar
Badges - put badges on any folder or file
Folderico - change icons of the folders
Folder Marker - mark your folders
Folder2MyPC - add favourite locations to My Computer
Microsoft TweakUI - system settings
BricoPacks - shell packs
ShellPacks - shell packs
Tango Shell Patcher - shell patcher
XPize - GUI enhancer
Vista Transformation Pack - complete visual style
Vista Sound Scheme - Windows Vista sound scheme
Royale Theme - visual style
Hardware monitoring/Benchmarking
CPU-Z - cpu informationCrystalCPUID - cpu information
Central Brain Identifier - cpu information
Everest - system information
SiSoft Sandra - system information
SpeedFan - hardware monitor
Memtest86 - memory test
PowerMax - HDD test
3Dmark 06 - 3D game performance benchmark
Aquamark - performance benchmark
rthdribl - 3D benchmark
Fraps - 3D benchmark, fps viewer and screen recorder
Prime 95 - cpu benchmarking
SuperPI - cpu benchmarking
CPU Rightmark - cpu overclock
Core Temp - cpu temperature
ATiTool - video overclock
ATI Tray Tools - Radeon tweaker
aTuner - GeForce and Radeontweaker
RivaTuner - video overclock
Nokia Monitor Test - monitor adjustmets
UDPixel - fix dead pixels
Games
123 Free Solitaire - solitaire games collectionArcade Pack - classic arcade games
Live For Speed - online racing simulator
Enigma - puzzle game
Freeciv - multiplayer strategy game
Tux Racer - race down steep, snow-covered mountains
Education
SpeQ Mathematics - mathematics programDia - diagram creation program
Google Earth - explore the world
NASA World Wind - 3D virtual globe
Celestia - explore the space
Stellarium - planetarium
Miscellaneous
nLite - Build your own custom Windows disk.VirtualPC - create virtual machines
grabMotion - webcam capture
iDailyDiary - simple page-for-a-day diary
Pivot Stickfigure Animator - create stick-figure animations
Wink - create presentations
Scribus - professional page layout
FreeMind - midn mapping software
Windows Live Writer - WYSIWYG blog authoring
Wallpapers
Michael Swanson - 1920 x 1200; 1600 x 1200; amazing wallpapersMikhail Arkhipov - 1920 x 1200; 1600 x 1200; amazing wallpapers
2 comments:
Wirple is a mostly HTML5 application that measures browser performance in Canvas3D and WebGL, with a strong emphasis on 3D performance. There are no surprises here as the Surface Pro and Pixel come out on top, with the Acer C720 providing the best bang for the buck with its impressive performance for the price of $250. In comparison, the ARM-based and older Sandy Bridge-based Celeron C710 performs horribly in 3D.
avast cleanup premium crack
driver easy pro crack
norton antivirus crack
rekordbox dj full crack
keyscape crack
good sync enterprise crack
program4pc dj music mixer crack
avira system speedup pro crack
originpro crack
avs video editor crack
Howdy! I could have sworn I've visited your blog before but after looking at some of the articles I realized it's new to me. Anyways, I'm certainly happy I found it and I'll be book-marking it and checking back often!
Punjabi Songs Lyrics
Kikli Lyrics
Ghana Kasoota Song Lyrics
Post a Comment