Wednesday, September 30, 2026

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

_*பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது*
அனைவருக்கும் வணக்கம்:

இன்னும் சில நிமிடங்களில் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வில் கருணை மதிப்பெண் மற்றும் பொதுப் பிரிவினருக்கு 75 ஆக தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைக்க வேண்டும்

ஆகிய வழக்குகள் விசாரிக்கப்பட இருக்கின்றன. 

_*இன்று காலையிலேயே அரசு தரப்பில் இவ்விரண்டு வழக்குகளையும் முன் கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை ஏற்று நீதிமன்றம் விசாரிக்கிறது.*

கருணை மதிப்பெண் வழங்குவது குறித்த முடிவு எட்டப்படாவிட்டால், வழக்கை நிலுவையில் வைத்துக் கொண்டு அவ்வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் ஆட்சேபணை இல்லை என்பதை தெரிவிக்க இருக்கிறோம்.

எனவே சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான தடையாணை இன்றே நீக்கப்பட்டு முடிவுகள் இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கலாம்!

No comments: