*பள்ளிக் கல்வித்துறை - முக்கிய அறிவிப்பு: காலாண்டு விடுமுறை மற்றும் பள்ளி திறப்பு நாள்*:
தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கையின்படி:
* காலாண்டுத் தேர்வு விடுமுறை: 26.09.2026 முதல் 04.10.2026 வரை.
* பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நாள்: 05.10.2026 (திங்கட்கிழமை).
முக்கிய வழிகாட்டுதல்கள்:
* பாடநூல்கள் வழங்கல்: பள்ளி திறக்கும் நாளன்றே (05.10.2026) 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவப் பாடநூல்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.
* விடைத்தாள்கள் & மதிப்பெண் பதிவு: மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்கி, மதிப்பெண்களைப் பதிவேடுகள் மற்றும் EMIS தளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* விஜயதசமி மாணவர் சேர்க்கை: விஜயதசமி அன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment