குறைந்தபட்சம் 500 முதல் 770 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்த முடிவு
திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்!
உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா?
யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார். 'நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு' என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு"
என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம்
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் படி மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டி அறிக்கை:
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட) ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தங்கள் இருப்பிடங்களுக்கு அருகே இருக்கும் பள்ளிகளில் இந்த மாணவர்கள் சேருவதற்கு தகுதி உடையவர். தொடக்கப்பள்ளி என்றால் ஒரு கிலோ மீட்டர், நடுநிலைப்பள்ளி என்றால் 3 கிலோ மீட்டர் என்ற தூர எல்லை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சமர்ப்பித்த வழிகாட்டி நெறிமுறைகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வழிகாட்டி நெறிமுறைகள் வருமாறு:
வழிகாட்டி நெறிமுறைகள்
- தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தயாரிக்க வேண்டும்.
- 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்? என்பதை அன்றைய தினமே கணக்கிட்டு பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.
- மாணவர் சேர்க்கையின் விண்ணப்ப படிவங்கள் ஒரே வடிவில் இருக்க வேண்டும். விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பை மே மாதம் 2-ந் தேதி வரை வெளியிட வேண்டும்.
- மே மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கபட வேண்டும்.
தேர்வு பட்டியல் வெளியீடு
- பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே மாதம் 9-ந் தேதி மாலை வரை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டதிற்கு பெற்றோருக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட வேண்டும்.
- மே மாதம் 11-ந் தேதி தகுதியான விண்ணப்பங்களுக்கு உரிய நபர்களின் பெயர்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நபர்களின் விவரங்களையும் அதற்கான காரணத்தையும் இதே போன்று வெளியிட வேண்டும்.
- தகுதியான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கு மேல் இருந்தால் ரேண்டம் முறையில் விண்ணப்பங்களை தேர்வு செய்ய வேண்டும். ரேண்டம் முறையை மே மாதம் 14-ந் தேதி செய்து, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை அன்றைய தினமே வெளியிட வேண்டும்.
கல்வி அதிகாரிக்கு தகவல்
- மேலும், கூடுதலாக 10 சதவீத காத்திருப்போர் பட்டியல் ஒன்றும் வெளியிடப்பட வேண்டும்.
- மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களை மாவட்ட கல்வி அதிகாரிக்கு மே மாதம் 20-ந் தேதி தெரிவிக்க வேண்டும்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது விதை2விருட்சம் இணையம் மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள்
ஆங்கிலம் (இங்கிலிஷ் – English) – 2 மாதிரி வினாத்தாள்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது பள்ளிக்கூடம், மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள்
திறந்தநிலை பல்கலையில் படித்தால் சிக்கலா?
"தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்து, அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், 107வது அரசாணையை நீக்குமாறு, முதல்வரிடம் வலியுறுத்துவேன்" என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் புதிய துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி: தற்போது, திறந்தநிலை பல்கலையில்,110 வகையான கல்வி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இவை இல்லாமல், காலத்திற்கு ஏற்றவாறும், தொழில்துறையினரின் தேவையை கருத்தில் கொண்டும், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும், தலா ஒரு சமுதாய கல்லூரியை துவக்கி, ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, பல்வேறு வகையான வேலைவாய்ப்பு பயிற்சிகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில், சமுதாய கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
"வீடியோ கான்பரன்சிங்" வழியில், மாணவர்களுக்கு பாடங்களை நடத்தவும், நடவடிக்கை எடுக்கப்படும். திறந்தநிலை பல்கலையில் படித்தால், அரசு வேலைவாய்ப்புகளுக்கு தகுதியில்லை என்று கூறவில்லை. எனினும், 107வது அரசாணை, ஏற்கனவே படித்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த அரசாணையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வரிடம் வலியுறுத்துவேன்.
எம்.எட்., படிப்பை மீண்டும் துவங்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சந்திரகாந்தா கூறினார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, மூன்று ஆண்டு பட்டப்படிப்பு, பின், இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு என்ற வரிசைக்கு மாறாக, பள்ளிப் படிப்பை படிக்காமல், நேரடியாக பட்டப்படிப்பில் சேர்ந்து, பட்டங்களை பெற்ற பலர், அரசுப் பணிகளில் உள்ளனர்.
அதேபோல், படித்த பலர், அரசு வேலையை எதிர்பார்த்தும் இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பான ஒரு வழக்கில், முறையான வரிசையில் படிக்காமல், நேரடியாக பட்டப்படிப்பு படித்தால், அது, அரசு பணிக்கு தகுதியானதாக கருதக் கூடாது என, தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது. இதை பின்பற்றி, 107வது அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை அமல்படுத்தினால், பல ஆயிரம் பேருக்கு பாதிப்புகள் வரும். தற்போது, இந்த அரசாணையை, திரும்பப் பெறுவது தொடர்பாக, முதல்வரிடம் வலியுறுத்துவேன் என, திறந்தவெளி பல்கலையின் புதிய துணைவேந்தர் சந்திரகாந்தா கூறியுள்ளார்.