Sunday, September 27, 2026

ஆசிரியப் பெருமக்களுக்கான அழைப்பு.

​இது ஆசிரியப் பெருமக்களுக்கான அழைப்பு..

நம் எல்லோரது வாழ்விலும் மறக்க முடியாத ஆசிரியர் ஒருவர் இருப்பார்.

நம் வாழ்வின் ஏதாவது ஒரு திருப்பு முனைக்கு

அவர் காரணமாக இருப்பார்.

நீங்கள் 

அவருக்கு நன்றி சொல்ல விரும்பினால்,

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் 

*கனவு ஆசிரியர்* இதழ் வழியே 

அவருக்கு 

ஒரு கடிதம் எழுதுங்கள்.

உங்களது கடிதங்களில் தேர்வு செய்யபடும் கடிதங்கள், வரும் கனவு ஆசிரியர் இதழ்களில் 

வெளியிடப்படும்.

எழுதப்படும் எல்லாக் கடிதங்களுக்கும்

ஏதாவதொரு வகையில் அங்கீகரித்து, 

அவற்றைச் சிறப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களது  எழுத நினைக்கும் வார்த்தைகள்

அதிகபட்சமாக 200 க்குள் இருக்கட்டும்.

அன்புள்ள ஆசிரியருக்கு எனத் தொடங்கி….

இப்படிக்கு உங்கள் மாணவன்/ மாணவி என

உங்களது பெயர் மற்றும் பணியிட முகவரி, தொடர்பு எண்ணுடன் நிறைவடையட்டும்.

கனவு ஆசிரியர் இதழோடு

உங்கள் கனவு ஆசிரியரைக் கொண்டாடுங்கள்..

பள்ளிக் கல்வித்துறை - முக்கிய அறிவிப்பு

​*பள்ளிக் கல்வித்துறை - முக்கிய அறிவிப்பு: காலாண்டு விடுமுறை மற்றும் பள்ளி திறப்பு நாள்*:

தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கையின்படி:

 * காலாண்டுத் தேர்வு விடுமுறை: 26.09.2026 முதல் 04.10.2026 வரை.

 * பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நாள்: 05.10.2026 (திங்கட்கிழமை).

முக்கிய வழிகாட்டுதல்கள்:

 * பாடநூல்கள் வழங்கல்: பள்ளி திறக்கும் நாளன்றே (05.10.2026) 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவப் பாடநூல்கள் விநியோகிக்கப்பட வேண்டும்.

 * விடைத்தாள்கள் & மதிப்பெண் பதிவு: மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்கி, மதிப்பெண்களைப் பதிவேடுகள் மற்றும் EMIS தளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 * விஜயதசமி மாணவர் சேர்க்கை: விஜயதசமி அன்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் ஏசி, டிவி, வாஷிங்மெஷின் உள்பட அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விலையும் 8 சதவீதம் வரை அதிகரிக்கும்.

​அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் ஏசி, டிவி, வாஷிங்மெஷின் உள்பட அனைத்து வீட்டு உபயோக பொருட்களின் விலையும் 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் நம் நாட்டில் பண்டிகை காலம் தொடங்கும் நிலையில் இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துள்ளது.

நம் நாட்டில் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி வரை பண்டிகை காலமாகும். தசரா, ஆயுதபூஜை, விஜயதசமி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என்று தொடர்ந்து பண்டிகைகள் அணிவகுத்து வரும்.

இந்த பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு புதிய வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதும்,பணடிகை காலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதும் வழக்கமான ஒன்றாகும்.

ஆனால் இந்த முறை அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் வீட்டு உபயோக பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரிக்கும் என்று அறிவிக்கப்படடுள்ளது. அதன்படி எல்டிஇ டிவி, வாஷிங்மெஷின், ஏசி, ப்ரிட்ஜ் உள்பட பிற வீட்டு உபயோக பொருட்களின் விலை குறைந்தபட்சம் 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 8 சதவீதம் வரை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஏசியின் விலை 5 முதல் 8 சதவீதம் வரை கம்பெனிகளை பொறுத்து உயர உள்ளது. எல்இடி டிவி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் உள்ளிட்டவற்றின் விலை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது வரை ப்ளூ ஸ்டார், கோத்ரேஜ் அப்ளையன்ஸ், ஹையர், டெய்க்கின், சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் பொருட்களின் விலையை குறைந்தபட்சம் 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. 'பானசோனிக்' நிறுவனம் இன்னும் விலை உயர்வை அறிவிக்காத நிலையில் விரைவில் அதுபற்றி அறிவிக்க உள்ளது.

இந்த விலையேற்றத்தின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. பணவீக்கம் காரணமாக விலை உயர்ந்து வரும் காப்பர், அலுமினியம், ஸ்டீல், போர் சூழலால் உயரும் கச்சா எண்ணெய் உபபொருட்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் விலை உயர்வு, அதிகரிக்கும் சரக்கு கட்டணங்கள் உள்ளிட்டவற்றால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று தெரிவிக்கின்றனர்.

இந்த 2026ம் ஆண்டில் இதுவரை 2 முறை வீட்டு உபயோக பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்த நிலையில் தற்போது 3 வது முறையாக அதிகரிக்க உள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் பல டீலர்கள் அச்சமடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் சலுகைகள் வழங்கும்போது அதிகளவில் பொருட்கள் விற்பனையாகும். ஆனால் இந்த முறை விலை உயர்த்தப்பட்டால் தங்களின் விற்பனை பாதிக்கலாம் என்று அச்சமடைந்துள்ளனர்.