வித்தியாசம் என்ன? அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!?
8th Pay Commission : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 8வது ஊதியக் குழுவால் இவற்றில் என்ன மாற்றம் வரலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
DA, DR என்றால் என்ன? யாருக்கு எது கிடைக்கும்?
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்துப் பேசும்போது அகவிலைப்படி (Dearness Allowance - DA) என்ற வார்த்தையையும், ஓய்வூதியதாரர்களின் வருமானம் குறித்துப் பேசும்போது அகவிலை நிவாரணம் (Dearness Relief - DR) என்ற வார்த்தையையும் அடிக்கடி கேட்கலாம். இரண்டும் விலைவாசி உயர்வால் ஏற்படும் செலவுச் சுமையைக் குறைக்க உதவும் வகையில் வழங்கப்படுகின்றன.
ஆனால், இவை யாருக்கு வழங்கப்படுகின்றன என்பதில்தான் முக்கியமான வித்தியாசம் உள்ளது. பணியில் இருக்கும் தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு DA வழங்கப்படுகிறது. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு DR வழங்கப்படுகிறது. இரண்டுமே அடிப்படைச் சம்பளம் அல்லது அடிப்படை ஓய்வூதியத்தின் சதவீதமாகக் கணக்கிடப்படுகின்றன.