Saturday, November 15, 2014

25%

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு: 1.39 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு: பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா

நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில்25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 லட்சத்து 39ஆயிரத்து 805 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என மாநில பள்ளி கல்வித்துறைச் செயலர் சபிதா கூறினார். பள்ளி கல்வித் துறை சார்பில்
குழந்தைகள் தின விழா, டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதுவழங்கும்
விழா வெள்ளிக்கிழமை (நவ.14) கொண்டாடப்பட்டது.
இதில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி பங்கேற்றுகட்டுரை, பேச்சுப் போட்டி, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில்வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும்சான்றிதழ்களையும் வழங்கியதோடு, சிறந்த 30 நூலகர்களுக்கு டாக்டர்எஸ்.ஆர். அரங்கநாதன் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா பேசியது:
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளி கல்வித் துறைமேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ. 64 ஆயிரத்து 485 கோடி நிதிஒதுக்கியுள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் 14வகை நலத் திட்டங்களுக்காக மட்டும் ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டிருக்கிறது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்க வழிசெய்யும் வகையில் காலியாக இருந்த 76,338 ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டு, இதுவரை 72,557 ஆசிரியர்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, ஆசிரியர் அல்லாத 15,820 பணியிடங்களை நிரப்பதமிழக அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இதுவரை 8,881பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நலிவுற்ற, வாய்ப்புமறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் கல்லூரிகளில் 25 சதவீதஇடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முழுமையாகஅமல்படுத்துவதில் தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டியது.
அதன் காரணமாக, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு2013-14 கல்வியாண்டில் 49,864 மாணவ, மாணவிகள், 2014-15கல்வியாண்டில் 89,941 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து39 ஆயிரத்து 805 நலிவுற்ற மாணவர்கள் இந்த சட்டத்தின் கீழ் தனியார்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்காக மத்திய அரசின் சார்பில் தமிழகத்துக்கு பாராட்டும்தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.


விழாவில் முன்னதாக, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

No comments: