Sunday, November 23, 2014

Pallikudam

RTI: வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்

         வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் RTI - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்

2. Two Subjects in Same Year eligible to get Incentive -
RTI Ltr Download









Pallikudam

பள்ளிகளில் இனி யோகா கட்டாயம்? அடுத்த கல்வியாண்டில் அமலாகிறது
          அடுத்த கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், யோகாவை ஒரு பாடமாக சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் கூறியதாவது:

கடிதம்:

யோகா கலையை கற்பதன் மூலம் இளம் தலைமுறையினர், எதிர்காலத்தில் நல்ல பண்பு மற்றும் உடல் நலம் உள்ளவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக, அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் யோகாவை ஒரு பாடமாக சேர்க்கும்படி, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு, சாதகமான பதில் கிடைத்தால், வரும் ஜூன் மாதத்திற்குள், இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஆலோசனை:

பிரதமர் நரேந்திர மோடியும், இந்த திட்டத்துக்கு சம்மதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், பாபா ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரிடம் ஆலோசனை கேட்கப்படும். நம்முடைய பாரம்பரிய கலைகளையும், மருத்துவ முறைகளையும் மறந்து விட்டோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் நம்முடைய கலைகளையும், மருத்துவ முறைகளையும் பின்பற்றி, வளர்ச்சி அடைந்து விட்டன. அடுத்தகட்டமாக, அனைத்து கிராமங்களிலும் ஆயுர்வேத மையங்களையும் துவக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

சர்வதேச யோகா தினம்:

* சமீபத்தில், ஐ.நா., பொதுச் சபையில் பேசிய பிரதமர் மோடி, 'சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க வேண்டும்' என்றார்.
* மத்திய பிரதேச மாநில பா.ஜ., அரசு, ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, அனைத்து பள்ளிகளிலும் யோகாவை ஒரு பாடமாக சேர்த்து, ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
* மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப் பாடமாக சேர்க்க, சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.
*இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது யோகா குறித்த தகவல் வெளியாகியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Pallikudam

வீட்டுக் கடன் தொகை அதிகம் பெற வேண்டுமா?
             நம்மில் பெரும்பாலானோர் வீட்டுக் கடனை நம்பியே வீடு வாங்கும் திட்டத்தில் இருப்போம். என்னதான் சேமிப்பு இருந்தாலும், வீட்டுக் கடன்தான் நம் கனவு கவிழ்ந்துவிடாமல் கரை சேர்க்க உதவும். மனை வாங்கி வீடு கட்டுவதாக இருந்தாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குவதாக இருந்தாலும் நடுத்தர மக்கள் பெரும்பாலானோரின் நிலை இதுதான்.

        இன்றைய பொருளாதார சூழலில் நம் சேமிப்பை மட்டும் நம்பி நம் கனவை நனவாக்க நினைப்பது கஷ்டத்தில் கொண்டுபோய்த் தள்ளிவிடும். நம் சேமிப்பு ஆரம்பத் தொகைக்கு மட்டுமே பயன்படும். உதாரணமாகச் சிலர் மனையை மட்டும் தங்கள் சேமிப்பைக் கொண்டு வாங்குவார்கள். வீடு கட்ட வங்கிக் கடனைச் சார்ந்திருப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்க இருப்பவர்கள் ஆரம்பத் தொகைக்குச் சேமிப்பைப் பயன்படுத்துவார்கள்.

வீட்டுக் கடனைப் பொறுத்தவரை நாம் கட்டப் போகும், வாங்கப் போகும் வீட்டின் மதிப்பில் சுமார் 80 சதவிகிதத் தொகையைக் கடனாகத் தருவார்கள். மீதித் தொகைக்குத்தான் நம் சேமிப்பு பயன்படும். இந்தத் தொகை உறுதியாக உங்கள் சேமிப்பாக இருந்தால் நலம். இதற்கும் கடன் வாங்க நேரிட்டால் கடும் சிரமத்திற்கு உள்ளாகிவிடும். அவர்கள் தரும் தொகை எவ்வளவு இருக்கும் என்பது நமது திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டது. குடும்பச் செலவு போக நம் மாத வருமானம் எவ்வளவு எனக் கணக்கிட்டு நமது திருப்பிச் செலுத்தக்கூடிய தகுதியைக் கணக்கிடுகிறார்கள். இந்த இடத்தில்தான் நாம் திட்டமிட்ட தொகை கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பார்ப்போம்.

திருப்பிச் செலுத்தும் திறன்

வீட்டுக் கடன் வாங்கத் திட்டமிடும் முன் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அதற்கு முன்பு வங்கிக் கடன் வாங்குவதற்கு உண்டான வழிமுறைகளைத் தெளிவுறக் கேட்டு அறிய வேண்டும். அதன் பிறகு வேறு எதாவது கடன் வாங்கி இருந்தால் அதை அடைத்துவிட வேண்டும். கார் லோன், தனிநபர் கடன் கட்டாமல் இருந்தால், அல்லது அந்த இ.எம்.ஐ போய்க்கொண்டிருந்தால் அதை முழுமையாக அடைத்துவிட வேண்டும். தோராயமாக நம் சம்பளத்தில் ஒரு 50 சதவிகிதத் தொகையை உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனாக வங்கிகள் கணக்கிடும். இதில் உங்களுக்கு ஏற்கனவே கடன்கள் இருக்கும்பட்சத்தில் அது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகையில் இருந்து கழிக்கப்படும். அதனால் இம்மாதிரியான கடன்களை நாம் கட்டிவிட வேண்டும்.

இ.எம்.ஐ. காலத்தை நீட்டிக்கலாம்

இன்னொரு வழிமுறையில் உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம். நீங்கள் எதிர்பார்த்த வீட்டுக் கடன் கிடைக்கவில்லையென்றால், திரும்பச் செலுத்தும் வீட்டுக் கடனின் கால அளவை அதிகரிக்கலாம். அதாவது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை ரூ.10 ஆயிரம் எனில் உங்களுக்குக் குறைந்த அளவே கடன் கிடைக்கும். அப்போது இதே ரூ.10 ஆயிரம் தொகையை நீங்கள் 20 ஆண்டுகளில் செலுத்தினால் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்ப கடன் தொகையும் கூடும். எதிர்பார்க்கும் கடன் கிடைக்கும்.

இப்படி வீட்டுக் கடனைக் கட்டும் ஆண்டுகளை அதிகரிக்கும்போது, வட்டிக்குச் செல்லும் தொகை அதிகரிக்கும். இந்த வட்டிச் செலவைக் குறைக்க, வரும் ஆண்டுகளில் இடையிடையே மாத தவணை போகக் கூடுதல் தொகையை (போனஸ், இதர வரவுகளைக் கொண்டு) கட்டி, கடன் பாக்கியைக் குறைத்துக் கொள்ளலாம்.

மேலும் கடன் வாங்கும்போது திருப்பிச் செலுத்தும் தொகை நம் வருமானம் மட்டுமல்லாது மனைவி/கணவன் வருமானத்தையும் காட்டலாம். அம்மா, அப்பா ஆகியோரின் வருமானத்தையும் காட்டலாம். அப்படிக் காண்பிக்கும்போது நம் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை அதிகரிக்கும்

Pallikudam

TNPSC : உதவி புவியியலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - டிச.17 கடைசிநாள்
           தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு தொழிற் சார்நிலைப் பணியில் உள்ள உதவி புவியியலாளர் பதவியில்  ஒரு காலி பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

      புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.இப்பதவிக்கான கணினி வழித்தேர்வு பிப்ரவரி 1ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 17ம் தேதி கடைசி நாள். முக்கிய அறிவுரைகள் தொடர்பான விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Pallikudam

SBI - வங்கியின் துணை வங்கிகளில் கிளார்க் பணி.
        பாரத ஸ்டேட் வங்கியின் அசோசியேட் வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 6425 கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

        காலியிடங்கள் 6425 பணி: கிளார்க் துணை வங்கிகளின் காலியிடங்கள் விவரம்: 1. SBM - 725 2. Faso Films - 596 3. SBT - 1300 4. SBB & J - 1000 5. SBH - 2200 தகுதிகள்: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 20 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.12.1986 - 01.12.1994 தேதிகளுக்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.600. SC/ST/PWD/XS பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் செலுத்த வேண்டும். சம்பளம்: மாதம் ரூ 7200. - 19,300 விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்கள் www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2014 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.012.2014 ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 2015 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com அல்லது www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, November 21, 2014

Pallikudam

முழு நேர நியமனத்துக்கு போட்டித் தேர்வு:பகுதி நேர கலையாசிரியர்கள் கலக்கம்
                அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில், பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம், 2000 ரூபாய் உயர்த்தியுள்ளதாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், போட்டித்தேர்வு வழியாகவே முழுநேர கலை ஆசிரியர்கள் நியமனம் என்ற அறிவிப்பு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
           கடந்த, 2011 டிசம்பர் மாதம், மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பிரிவுகளில், 16 ஆயிரம் ஆசிரியர்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். வாரத்துக்கு, மூன்று நாட்கள், மூன்று மணி நேரம் பணியாற்றும் இவர்களுக்கு, தொகுப்பூதியமாக 5000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற ஒரே நம்பிக்கையில், எவ்வித சலுகையும் எதிர்பார்ககாமல் குறைந்த ஊதியத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்களுக்கு மூன்றாண்டுகள் கழிந்து, தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டாலும், போட்டித்தேர்வு கட்டாயப்படுத்தியுள்ளது, ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முழுநேர கலை ஆசிரியர்கள் பணியிடங்கள், கடந்த 2011ம் ஆண்டுக்கு பின், இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில், போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பகுதி நேர ஆசிரியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'தொகுப்பூதிய உயர்வு, கடந்த ஏப்ரல் முதல் அரியர்ஸ், இனி வரும் மாதங்களில் இ.சி.எஸ்., முறை ஊதியம், உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு அறிவித்தாலும், போட்டித்தேர்வு மூலம் முழுநேர ஆசிரியர்கள் நியமனம் என்பதால், பகுதி நேர ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது' என்றார்.

Dir news

TRB: New Director - Mrs. RajaRajeshwari.
       ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவு
        ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக திருமதி.இராஜராஜேஸ்வரி அவ்ர்களையும், அனைவருக்கும் இடை நிலைக் கல்வி திட்ட இயக்குனராக
திரு.அறிவொளி அவர்களையும் நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Loptop

அதிகரிக்கும் இலவச ‘லேப்டாப்’ விற்பனை; கண்டுகொள்ளாத கல்வித்துறை
        பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் லேப்டாப்க்கு சந்தையில் கிராக்கி அதிகரித்துள்ளது. இதற்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

       தமிழக அரசு, கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு வண்ண பென்சில், அட்லஸ், கணித உபகரணங்கள், காலணி, லேப்டாப் உட்பட, 14 வகையான நலத்திட்ட பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இலவச லேப்டாப்க்கு ஒவ்வொரு ஆண்டும், சுமார் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், தமிழக பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில், லேப்டாப் வழங்கப்படுகிறது. ஆனால், 95 சதவீத மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் அதன் பயன்பாடு குறித்த அடிப்படை பயிற்சிகள் இல்லை. பெரும்பாலான பெற்றோர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இன்மையால், குடும்ப பொருளாதார சூழல் காரணமாக விற்பனை செய்கின்றனர்.

லேப்டாப், 5000 முதல் 8000 ரூபாய் வரை சந்தையில் பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்லூரியில் பயிலும் மாணவர்கள், விலை கொடுத்து வாங்க அலைமோதி வருகின்றனர். கேரளா மாணவர்கள் இலவச லேப்டாப்களை வாங்க ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

லேப்டாப் விற்பனை செய்யப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் பல்வேறு புகார்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, ’லேப்டாப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரி களில் பாடம் கற்பிக்க வேண்டும்; மாணவர்களுக்கு லேப்டாப் பயன்படுத்தி பாடத்திட்டம் சார்ந்த பணிகள் வழங்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டது.

ஆனால், இலவச லேப்டாப் மாணவர்கள் பள்ளியை முடித்து சென்ற பிறகும், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து முடித்து சென்ற மாணவர்களையும் அழைத்து வழங்கும் அளவுக்கு கால தாமதமாக வழங்குவதால், வகுப்பறையில் லேப்டாப் பயன்படுத்த இயலாத சூழல் ஏற்படுகிறது. இதனால், தாமதமாக வழங்கப்படும் லேப்டாப் மாணவர்களுக்கு கிடைத்த சில நாட்களிலேயே, விற்பனைக்கு சந்தைக்கு வந்துவிடுகின்றது. சில கல்லூரி மாணவர்களே, லேப்டாப் விற்பனை சந்தையில் புரோக்கர்களாக செயல்படுகின்றனர்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ’லேப்டாப் உரிய நேரத்தில் கிடைக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்க முடியும். ஆனால், மிகுந்த காலதாமத்ததுடன் கிடைப்பதால், இதுகுறித்து அறிவை மாணவர்களுக்கு ஏற்படுத்த இயலவில்லை.

மேலும், பள்ளி முடித்து செல்லும் அனைத்து மாணவர்களும், தனது கல்விக்காக லேப்டாப் பயன்படுத்துகின்றனரா அல்லது விற்பனை செய்கின்றனரா என்பதை கண்காணிப்பது இயலாத காரியம். பிளஸ்2 மாணவர்களுக்கு பதிலாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கினால், தொழில்நுட்ப பயிற்சி இரண்டு ஆண்டுகள் வழங்கலாம். விற்பனை செய்வதையும் எளிதாக தவிர்க்கலாம்’

Thursday, November 20, 2014

NET

இண்டர் நெட் பயன்பாடு இந்தியா இரண்டாமிடம்

உலகளவில் இண்டெர்நெட் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தற்போது இண்டெர்நெட்டை பயன்படுத்துவோரின் எணணிக்கை 213 மில்லியனாக உள்ளது.

இது டிசம்பாத இறுதிக்குள் 303 மில்லியனாக அதகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகறிது. உலகளவில்இண்டர்நெட்டை பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் சீன மக்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதற்கு அடுத்த படியாக அமெரிக்கர்களும் மூன்றாவதாக இந்தியாவும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரி்க்காவை பின்னுக்குதள்ளி இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளது.

Iit

அரசு பள்ளிகளில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு
        அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட நிதி மூலம் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

       விருதுநகர் மாவட்டத்தில் 177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம்(ஆர்எம்எஸ்ஏ) நிதிமூலம் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமீபத்தில் 38 பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், 18 பள்ளிகளில் கழிப்பறைகள், 10 பள்ளிகளில் குடிநீர் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதி, பணிகள் நடந்துள்ள விதம், தரம் ஆகியவை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் கோவிந்த அரசன், பூபால பாலகிருஷ்ணன் நேற்றுமுன்தினம் ஆய்வை துவக்கினர்.

பத்து நாட்கள் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை அந்த அமைச்சகத்திடம் சமர்ப்பிப்பர் என, மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Ous PG

அரசாணை இரத்து செய்தல் ஆணை வெளியீடு
           பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக இளநிலைப் பட்டப்படிப்பு படிக்காமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலை பட்டப்படிப்பு பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்க்கல்வி தகுதிகாக ஊக்க உதிய உயர்வு வழங்கிட அனுமதித்து வெளியிடப்பட்ட அரசாணை எண்.307 பள்ளிக் கல்வி (இ2) துறை நாள்.15.12.2000ஐ இரத்து செய்தல் ஆணை வெளியீடு

GO.118 SCHOOL EDUCATION DEPT DATED.10.07.2013 - INCENTIVE CANCELLED FOR DIRECT PG COURSES REG ORDER

Gas

மானியம் விலை சிலிண்டர் பெற வங்கிக்கணக்கு கட்டாயம்: ஜன. 1 முதல் அமல்!
          மானியவிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் பெற வங்கிக் கணக்கு கட்டாயம் என்பதை வரும் ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.
             சிலிண்டர் பதுக்கல், கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது, உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

         இந்த திட்டத்தின்படி சிலிண்டர் வாங்குபவர்கள் மானியம் இல்லாமல் முழு விலை கொடுத்து (ரூ.950) பெற வேண்டும். அதன்பின்னர் சிலிண்டருக்கான மானியத்தொகையான ரூ. 560 அவர்களது வங்கி கணக்கில் போடப்படும்.

           இதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று முந்தைய அரசு அறிவித்தது. இந்நிலையில் மத்தியில் பா.ஜனதா அரசு பதவியேற்ற பின் ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது என்று அறிவித்தது. அதேநேரம் ஆதார் அடையாள அட்டை அல்லது வங்கி கணக்கு இருந்தால் தான் மானியம் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் 540 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஜனவரி1 ஆம் தேதி முதல் நேரடி மானிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி வங்கி கணக்கை தொடங்கி அதனை சமையல் கியாஸ் விநியோகஸ்தர்களிடம் பதிவு செய்ய வேண்டும். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 3 மாதங்கள் கருணை காலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்களை அல்லது ஆதார் எண்களை விநி யோகஸ்தரிடம் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அந்த 3 மாத காலத்தில் கியாஸ் வாங்குபவர்கள் மானியம் கழித்து வழக்கமான முறையில் ரூ.400 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு மேலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படும். அப்போது சமையல் கியாஸ் மானியம் தொகை கழிக்காமல் முழு தொகையான ரூ.950 செலுத்திதான் பெற முடியும். ஆனால் அதற்கான மானியம் பின்னர் வழங்கப்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவு செய்பவர்களுக்கு அரசின் மானியம் கிடைக்காது. முழு தொகை கொடுத்துதான் வாங்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Wednesday, November 19, 2014

Dob

பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்
          மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் , தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்-இயக்குநர் உத்தரவு
CLICK HERE-DIR-GIVE GUIDELINES TO CHANGE -NAME ,DOB , IN CERTIFICATES

Exam board

பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள் பக்கம் குறைப்பு: தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு
            பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாளை இணைத்து வழங்கப்பட்டது.

           எழுதாத பக்கங்களில், கிராஸ் கோடு போட அறிவுறுத்தப்பட்டது. விடைத்தாள்களில் எழுதாத பக்கங்கள் அதிகரித்ததை அடுத்து, தேர்வுத் துறைக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், தற்போது ஒவ்வொரு பாடத்துக்கும் உரிய விடைத்தாள்கள், குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

            தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜ், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: வரும் 2015ல், நடைபெறவுள்ள உள்ள பிளஸ் 2 மொழிப்பாடங்களுக்கு, 40 பக்கங்களுக்கு பதில், 32 பக்கங்கள் கொண்ட விடைத்தாளில், 30 பக்கங்கள் எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. விலங்கியல், தாவரவியல் பாடங்களில், 52க்கு பதில், 44; கம்ப்யூட்டர் சயின்ஸ், 40க்கு, 32; அக்கவுன்டன்சி, 54க்கு, 46; இதர பாடங்களுக்கு, 40 பக்கங்களும் வழங்கப்பட உள்ளன. இதேபோல், 10ம் வகுப்பு தேர்வில், மொழிப்பாடங்களுக்கு, 32க்கு, 24; தமிழ் இரண்டாம் தாளில் ரயில்வே முன்பதிவு, ரத்து படிவம், வங்கியில் பணம் செலுத்தும் படிவம், வங்கியில் பணம் பெறும் படிவம் ஆகிய படிவங்கள் தனித்தனியாக வழங்காமல், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில் அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. சமூக அறிவியலில், முதன்மை விடைத்தாளில் முதல் நான்கு பக்கங்களில், இரண்டு இந்திய வரைபடங்கள், ஒரு ஐரோப்பா வரைபடம், ஒரு ஆசிய வரைபடம் அச்சிடப்பட்டு சேர்த்து வழங்கப்பட்டு உள்ளது. கணிதம், அறிவியல் பாடங்கள் பழையபடியே, 30 பக்கங்கள் வழங்கப்பட்டாலும், முதல் பக்கத்தில் கேம்ப் எண், பண்டல் எண், பாக்கெட் எண் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.