JIO இலவச சேவை மார்ச் 31 வரை நீட்டிப்பு
ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி டிசம்பர் 4 முதல் மார்ச் 31ம் தேதி வரை டேட்டா, வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இந்த வசதி ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி ஜியோவின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முகேஷ் அம்பானி பேசியதாவது: 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர் ஜியோவில் இணைந்துள்ளனர். ஒரு நாளைக்கு 6 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைகின்றனர். பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பை விட ஜியோ அதிக மக்களை கவர்ந்துள்ளது. மேலும் ஜியோவின் சலுகைகளால் சாமானிய மக்கள் அதிகம் பயன்பட்டுள்ளனர் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
மேலும் புதிதாக ஜியோவில் இணைபவர்களுக்கு டிசம்பர் 4 முதல் மார்ச் 31ம் தேதி வரை டேட்டா, வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இந்த வசதி ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் நீட்டிப்பு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வாடிக்கையாளர்கள் விரும்பினால் ஜியோ சிம் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று அம்பானி தெரிவித்தார்.
No comments:
Post a Comment