8ம் வகுப்பு முதல் கட்டாயத் தேர்ச்சி என்று இருப்பதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் கட்டாயத் தேர்ச்சி செய்யப்பட்டு வருகின்றனர்.
இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி என மாற்றுவதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அளித்த பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த புதிய நடைமுறைக்கு ஏற்ப கல்வி உரிமைச் சட்டத்தில் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment