Monday, December 26, 2016

Pallikudam1

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி?
டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும்
   கடந்த நவம்பர் 8 அன்று மத்திய அரசு மேற்கொண்ட பணசீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை அதிக
அளவில் மேற்கொண்டு வருகிறோம். வருங்காலத்தில் பணமில்லா பரிவர்த்தனைகள் அதிக அளவிலோ அல்லது முழுமையாகவோ மேற்கொளள வேண்டிய நிலை வரும். எனவே அது தொடர்பான விபரங்களை தெரிந்து கொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நமது பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்க்கொள்ள முடியும்.
இரண்டு வங்கி கணக்குகள் தொடங்குங்கள். பிரதான வங்கி கணக்கில் முழு பணத்தினை வைத்திருங்கள். அதற்கான டெபிட் அட்டையை எங்கும் பயன்படுத்த வேண்டாம். அடுத்த வங்கி கணக்கிற்கு அவ்வப்போது தேவையான பணத்தினை மாற்றம் செய்து அதற்கான அட்டையை எங்கும் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் பிரதான கணக்கு பணம் பத்திரமாக இருக்கும்.
முடிந்தவரை கிரெடிட் கார்டு பயன்படுத்துங்கள். உங்கள் கிரெடிட் கார்டுகள் தவறாக பயன் படுத்தும்போது வங்கி அப்பணத்தினை பயன்படுததப்பட்ட இடத்திலிருந்து திரும்பபெறும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. டெபிட் கார்டு பயன்பாட்டின்போது பொறுப்பு நம்மிடமே உள்ளது. தற்காலத்தில் ரூ 25,000 வங்கி டெபாசிட் கிரெடிட் கார்டு வாங்க போதுமானது என்பது குறிப்பிடத்தக்கத
நீங்கள் பயன்படுத]தும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் சிப் பொறுத்தபட்டவை என்றால் மிக பாதுகாப்பானது. தகவல் திருட்டு தடுக்கப்படும். உங்களிடம் இல்லா விட்டால் வங்கியை அணுகவும்.
தற்போது கையடக்க POS ( Point of sale ) கருவிகள் பயன்பாடு அதிகம் என்றால் அவற்றை உங்கள் கண்முன் மட்டுமே பயன்படுத்துங்கள.; மறைவான இடங்களுக்கு அவற்றை கொண்டு செல்ல அனுமதிக்காதீர்கள்.
PIN நம்பரை மறைத்து பழகுங்கள். ATM,POS என எங்கு உங்கள் கார்டுகளை பயன்படுத்தினாலும் ரகசிய எண்ணை கைகளால் மறைத்து பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில] PIN எண்ணை மாற்றுங்கள்.
உங்கள் வங்கி பரிவர்த்தத்தனைகளை மேற்கொள்ள தனியாக ஒருசெல்போனை பயன்படுத்துங்கள். அதில் தேவையற்ற APP என எதையும் டவுன்லோட் செய்ய வேண்டாம். APP மற்றம் சமூக ஊடகங்களை வேறு செல்போனில் பயன்படுத்தவும்.
வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் உங்கள் வீட்டு மற்றும் அலுவலக கணிணிகளில் தரமான, நேரடியாக நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் APP மட்டுமே பயன்படுத்தவும். மலிவான மற்றும் போலியான APP மற்றும் Software கள் விபரத் திருட்டுக்கு வழி வகுக்கும்.
கணிணியின் தரத்தை அவ்வப்போது update செய்து வாருங்கள்.
Amazon, Flip cart offer only for three days என வரும் செய்திகளை திறக்க வேண்டாம். உங்களுக்கு பொருள் வாங்க வேண்டும் என்றhல் அந்த தளத்திற்கு சென்று பாருங்கள். Link open செய்ய வேண்டாம்.
பணபரிவர்த்தனைகளை எக்காரணம் கொண்டும் உங்கள் செல்போன் மற்றும் கணிணி தவிர வேறு எந்த சாதனத்திலும் மேற்கொள்ள வேண்டாம்.
வங்கி பண பரிவர்த்தனைகளுக்கான பாஸ்வேர்டை 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். வங்கிக்கான பாஸ்வேர்ட்டை வேறு எங்கும் ( பேஸ்புக். ஈமெயில்) என எங்கும் பயன்படுத்த வேண்டாம். மேலும் அது பெயர் மற்றும் எண் ஆகியவற்றின் கலவையாக இருக்கட்டும்.
சினிமா தியேட்டர், மால், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என எங்கு கேட்டாலும் உங்கள் செல்போன் மற்றும் ஈ மெயில் முகவரிகளை கொடுக்க வேண்டாம். கட்டாயம் கொடுக்க நேரிட்டால் அதற்காக தனி எண், தனி முகவரி பயன்படுத்தவும்,
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் உங்களுக்கு உதவும்.

No comments: