Monday, December 26, 2016

Pallikudam

ஆன்டிராய்டு ஃபோனை பாதுகாக்கும் முறைகள்...
       ஃபோன் வாங்குறப்ப எந்த ஃபோன் வாங்குறோன்றதை விட முக்கியம், வாங்கிய ஃபோனை நாம எப்படி பாத்துக்குறோம் என்பது.
ஸ்மார்ட்ஃபோந்தான். ஆனா, அதுவே தன்னை பாத்துக்கிற அளவுக்கு ஸ்மார்ட் கிடையாது. நாமதான் இதமா, பதமா பாத்துக்கணும். அந்த ‘இதமா...பதமா...” என்ன என்பதுதான் இந்தக் கட்டுரை.

1) எப்பவும் சார்ஜ் இருக்கட்டும்:
மொபைல் சார்ஜ் அதிகமா இருந்தா ஃபோன் நல்லா வேலை செய்யும். கடைசி % சார்ஜ் தீரும் வரைக்கும் யூஸ் பண்ணா, மொபைலோட ஃபெர்ஃபார்மென்ஸும் குறையும். பேட்டரியோட ஆயுளும் குறையும். முழு சார்ஜும் தீர்ந்த பிறகே சார்ஜ் போடனும்னு நிச்சயம் நம்ம ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தவங்க சொல்லியிருப்பாங்க. அந்த ஐடியாவை ஓரம் தள்ளுங்க. அந்த ஃப்ரெண்டு சொன்னத ஷிஃப்ட் டெலீட் பண்ணிடுங்க.
2) ஃபோனையும், உங்களையும் கூலா வைங்க்:
பல்லு டைப் அடிக்கிற அளவுக்கு நம்ம ஆஃபீஸ்ல ஏசி போடுறாங்களே...அது நமக்குன்னா நினைச்சீங்க? எல்லாம் கம்ப்யூட்டருக்கு. ஏடிஎம் செண்டர்ல மிஷுனுக்கு போட்டு வைக்கிற மாதிரிதான். அதே லாஜிக்தான் மொபைலுக்கும். நல்ல கூலான டெம்பரேச்சர்ல இருக்கிற ஃபோனு கோஹ்லி மாதிரி நிண்ணு விளையாடும்.
3) ஆப்ஸை மூடுங்க...
4ஜிபி ரேம் இருக்கிற மொபைலே 12000த்து கிடைக்குது. அதனால, நாம யூஸ் பண்ர ஆப்ஸோட எண்ணிக்கை அஷ்வின் விக்கெட்டை விட வேகமா ஏறிட்டு இருக்கு. அதுல எந்த பிரச்னையும் இல்லை. ஆனா, ஓப்பன் பண்ண ஆப்ஸை ஒழுங்கா மூடுறோமா? இல்லை. நிறைய ஆப்ஸ் திறந்திருந்தா, சிஸ்டம் ஸ்லோ ஆகும். சார்ஜும் சீக்கிரம் தீரும். அதனால, தினமும் ஒரு தடவையாவது எல்லா ஆப்ஸையும் க்ளோஸ் பண்ணிடுங்க.
4) அந்த ஒரு ஒரே மாத்திரை...
உடம்புல இருக்கிற எல்லா வியாதிக்கும் ஒரே மாத்திரைல தீர்வுன்ற மாதிரி, ஆண்ட்ராய்டுக்கும் ஒரு வழி இருக்கு. அது தான் ரீபூட். மொபைல்ல என்ன பிரச்னைனே தெரியாம தொல்லையா இருக்கா? ஒரு தடவை ஆஃப் பண்ணி ஆன் பண்ணிடுங்க. 99% பிரச்னைகள் சரியாகிடும். ரீஸ்டார்ட் பண்றப்ப பேக்கிரவுண்ட் ரன் ஆகுற எல்லா ஆப்ஸும் க்ளோஸ் ஆயிடும். பாதில நிக்குற புராஸஸ்களும் ஸ்டாப் ஆயிடும். கிட்டத்தட்ட நாம தூங்கி எழுந்திருக்கிற மாதிரிதான் ரீபூட். ஃபோன் ஃப்ரெஷ் ஆயிடும்.
5) டெம்பர்ட் கிளாஸ்:
கீறல் விழாம பாத்துக்கிறது லட்சியம்; கீழ விழாம பாத்துக்கிறது நிச்சயம் என்பதுதான் பெரும்பாலான ஆண்ட்ராய்டு யூஸர்களின் புத்தாண்டு உறுதிமொழியா இருக்கும். அதையும் மீறி ஃபோன் விழுந்து ஸ்க்ரீன் உடையுன்றதாலதான் மேல டெம்பர்ட் கிளாஸு போட்டு வைக்கிறோம். அந்த கிளாஸு கண்ணாபின்னான்னு டேமேஜ் ஆகத்தான் செய்யும். அதுவே நமக்கு மொபைல் பிடிக்காம போக காரணம் ஆயிடும். புது ஃபோனு மாத்துறதுக்கு முன்னாடி டெம்பர்டு கிளாஸ ஒரு தடவை மாத்தி பாருங்க. ஃபோனே புதுசு மாதிரி தோணும்.
6) மெமரி க்ளியர்:
உங்கள் மொபைலில் வாட்ஸப், ஃபேஸ்புக் ஆப்ஸ்கள் மட்டும் எத்தனை எம்.பிக்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பதை பாருங்கள். ஆப் சைஸ் 80எம்.பி என்றால் அதில் நாம் சேமித்திருக்கும் டேட்டா 1 ஜிபியை கூட தாண்டலாம். மாதம் ஒருமுறை தேவையற்ற வாட்ஸப்களை மெசெஜ்களை டெலீட் செய்யுங்கள். ஃபேஸ்புக், பிரவுசர் போன்றவற்றில் cache clear செய்யுங்கள். ஐந்து நிமிடங்கள் எடுத்து நாம் செய்யும் இவை, நமக்கு மொபைல் ஹேங் ஆகாமல் வேலை செய்து பல நிமிடங்களை மிச்சப்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

No comments: