Tuesday, November 19, 2013

PallikudamNEWS

அரசு பள்ளிக்கூடங்களில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திடீர் ஆய்வு!

               மதுரை: தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேசுவரமுருகன் நேற்று மதுரையில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் நூலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
         அப்போது, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும் பாடங்கள், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை மேற்பார்வை செய்தார். 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆலோசனை கூறினார்.
                    மதுரை மாவட்டத்தில் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்து விட்டதாகவும், 8-வது இடத்தில் உள்ள மதுரை மாவட்டத்தை5-வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்காக மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க உத்தரவிட்டார். மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தியாவது தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
                      பள்ளிகல்வித்துறை தொடர்பாக மதுரை மாவட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து முடிக்கவும், டி.இ.டி(ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில் பெயிலானதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பட்டியலையும் கேட்டு பெற்றுக்கொண்டார். இந்தத் தேர்வினால் தமிழகம் முழுவதும் சுமார்490 பேர் ஆசிரியர் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
                இறுதியாக மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஆய்வறிக்கை கேட்டுப்பெற்றுக்கொண்டார். இயக்குனரின் திடீர் ஆய்வால் கல்வித்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்

No comments: