Friday, June 30, 2017

Raj-Pallikudam

நவகிரகம்
ஞாயிறு
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் கலைவாய்!

சந்திரன்
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குரு போற்றி
சங்கடம் தீர்ப்பாய் சதுரா போற்றி!
செவ்வாய்
சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறையிலாதருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு!
புதன்
இதமுடன் வாழ இன்னல்கள் நீக்கு
புத்பகவானே பொன்னடி போற்றி
பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி!
வியாழன்
குணமிகு வியாழ குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழ பரகுரு நேசா
கிரகதோஷமின்றி கடாக்‌ஷித்தருள்வாய்!
சுக்கிரன்
சுக்கிரமூர்த்தி சுபமிக ஈவாய்
வக்கிரமின்றி வரமிக தருவாய்
வெள்ளி சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய்அடியார்க்கருளே!
சனி
சங்கடந்தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
ச ச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தாதா!
ராகு
அரவேனும் ராகு ஐயனே போற்றி
கரவாதருள்வாய் கஷ்டங்கள் நீக்கு
ஆக அருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகு கனியே ரம்மியா போற்றி!
கேது
கேது தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேது தேவே கேண்மையாய் ரக்‌ஷி!

No comments: