Sunday, January 17, 2016

Pallikudam news

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள்: ஜனவரி 18-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஒப்பந்த அடிப்படையில் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்புத் துறையால் மொத்தம் 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தொகுப்பூதியம் ரூ.33,250 ஆகும்.
கல்வித் தகுதி: சமூகப்பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளர்ச்சி ஆகிய துறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், அடிப்படை கணினி இயக்கும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைத் தொழிலாளர் நலன், சமூக நலம், குழந்தைகள் நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 1.1.2016-ஆம் தேதியன்று 26 வயதுக்கு மேற்பட்டவராகவும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
18-ஆம் தேதிக்குள்..: குழந்தைத் தொழிலாளர் நலன், சமூக நலன், குழந்தை நலம் ஆகிய துறைகளில் கள ஆய்வில் புதிய திட்டங்களை வகுப்பதில் பங்குபெற்ற அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் நிலையில் பணிபுரிந்த அனுபவமிக்க ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களைwww.tn.gov.in/department/30என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செயயலாம். புகைப்படங்களுடன் கூடிய விண்ணப்பங்களை ஜனவரி 18-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர்-செயலாளர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூகப் பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லிஸ், சென்னை-10, தொலைபேசி: 044-26421358.

Pallikudam news

Happy PONGAL
Pongalo pongal

Saturday, January 9, 2016

Pallikudamnews

எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பில் பிழை: ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பிழை உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது."எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சாசனம் அனுமதிக்கிறது.

ஆனால், இது தொடர்பாக அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது'என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அளித்த தீர்ப்பு ஒன்றில் தெரிவித்திருந்தது.எனினும், இந்தத் தீர்ப்பில் ஒரு பிழை இருப்பதாகவும், அதை சரிசெய்யுமாறும் கோரி சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா உள்பட பல்வேறு வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.செலமேஸ்வர் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:வங்கிகளில் குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்தஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு பெற முடியும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் ஒரு பத்தியில் கூறப்பட்டுள்ளது.எனினும், அதற்கு அடுத்த பத்தியில் அதற்கு முரணான வாசகம் இடம்பெற்றுள்ளது. அதாவது, "குரூப்-ஏ பணியிடங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ.5,700 வரை ஊதியம் பெறும் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது; சலுகைகள் மட்டுமே உண்டு' என்று கூறப்பட்டுள்ளது. தீர்ப்பைச் செயல்படுத்துவது தொடர்பான உத்தரவைக் கொண்டிருக்க வேண்டிய இந்தப் பத்தியில் இவ்வாறு தவறான வாசகம் உள்ளது. இந்த வாசகத்தை நீக்க நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என்று ரோத்தகி வாதிட்டார்.இந்நிலையில், மறு ஆய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது, அட்டர்னி ஜெனரலின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பில் பிழை இருப்பதை ஒப்புக் கொண்டனர். தீர்ப்பில் பிழையான வாசகம் அடங்கிய சம்பந்தப்பட்ட பத்தியை நீக்குமாறும் உத்தரவிட்டனர். மேலும், இந்தப் பிழை காரணமாக எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டிருந்தால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி நியாயம் பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Friday, January 8, 2016

Pallikudamnews

பி.எட். படிப்பு விண்ணப்பிக்கும் தேதி: சாஸ்த்ரா பல்கலை.யில் நீட்டிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பி.எட். தொலைநிலைக் கல்விக்கான விண்ணப்பங்களை ஜன. 18-ம் தேதி வரை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பி.எட். தொலைநிலைக் கல்விக்கான நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 31-ம் தேதி வரை கொடுக்கலாம் என்று இருந்த நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் ஜன. 18-ஆம் தேதி வரை அளிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இணையதளமானwww.sastra.edu -ல் தெரிந்துகொள்ளலாம்.

Pallikudamnews

நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?
நாடு முழுவதும்,
               ஆறு முதல், 14 வயதுவரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிகளில் ஒரேவிதமான பாடத்திட்டத்தை அமல்படுத்தஉத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில்பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டு உள்ளது.ஏற்றத் தாழ்வுகள்:சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் அஸ்வின்உபாத்யாயா என்பவர் தாக்கல்செய்துள்ள பொது நல மனுவிவரம்:
                                 நம் நாட்டில் தற்போது நடைமுறையில்உள்ள, பள்ளி கல்வி பாடத்திட்டத்தில்,பலவேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள்உள்ளன. குழந்தைகளின்,சமூக,பொருளாதார நிலைக்கு ஏற்பகல்வியும் மாறுபடுகிறது.
நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?
             நம் நாட்டை, மதச்சார்பற்ற மற்றும்ஜனநாயக நாடு என கூறுவதற்கு,இப்போதுள்ள பள்ளி கல்வி பாட திட்ட முறைநிச்சயம் உதவாது.சமூகம்,பொருளாதாரம், மதம்,கலாசாரம் என, எந்தவகையிலும்,குழந்தைகளிடம் வேறுபாடு இருக்கக் கூடாதுஎன,அரசியல் சட்டத்தின், 21வது பிரிவில்கூறப்பட்டுள்ளது.மேலும், மத்திய அரசின் கல்வி உரிமைசட்டமானது, குழந்தைகளுக்குஇலவசமாககல்வி வழங்க வேண்டும் என்பதை மட்டுமின்றி,ஆறுமுதல், 14 வயதுக்கு உட்பட்டகுழந்தைகளுக்கு, நாடு முழுவதும்,ஒரேமாதிரியான பாட திட்டத்துடன் கூடியகல்வியை வழங்க வேண்டும் என்பதையும்வலியுறுத்துகிறது.சமூக, பொருளாதார பாகுபாடுநீங்க வேண்டும் என்றால், ஒரேவிதமானபாடத் திட்டம் உடைய கல்வியை, நாடு முழுவதும்அமல்படுத்த வேண்டும்.
பின்லாந்து,டென்மார்க், நியூசிலாந்து, நார்வே,கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா,ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் போன்றநாடுகளில், ஒரே மாதிரியான கல்வி முறைதான் அமலில் உள்ளது.உத்தரவிட வேண்டும்:அதுபோல, நம்நாட்டிலும், பள்ளிகளில் ஒரேமாதிரியானபாடத்திட்டத்தைஅமல்படுத்தும்படி, மத்திய,மாநிலஅரசுகளுக்குஉத்தரவிட வேண்டும்.இவ்வாறுஅவர் மனுவில் கூறியுள்ளார்.குளிர்காலவிடுமுறை முடிந்து, சுப்ரீம் கோர்ட் மீண்டும்இந்தவாரத்தில் செயல்படத் துவங்கும்.அப்போது, இந்த மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது

Pallikudamnews

தேர்தல் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை:மத்திய இணை அமைச்சர் தகவல்
                    தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கேத்ரியா தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தருவதில் தங்களது தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
                தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்விப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களை இதிலிருந்து விடுவிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.

Thursday, January 7, 2016

Pallikudamnews

அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகள்: ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு
         தனியார் நிறுவனங்களிடம் இருந்து அரசு அலுவலகங்களுக்கு இலவச இணையதள இணைப்புகளைப் பெறுவது தொடர்பான மனு மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.
           தமிழக அரசு கடந்த 2000-ஆம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி ஒரு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணைப்படி, தமிழகம் முழுவதும் சாலைகளில் பள்ளம் தோண்டி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கேபிள் வயரை பதித்துக் கொள்ளலாம். அதற்காக, தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் அரசுக்கு எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதற்கு பதில், அந்தப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு இலவசமாக 2 எம்.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் இணையதள இணைப்புகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
   இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர், மனுதாரர் அளித்த மனு மீது தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் முடிவெடுத்து, இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Pallikudamnews

சேவை மையங்களில் வாக்காளர் அட்டை
      சென்னை: அரசு பொது சேவை மையங்களில், வாக்காளர் அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானி கூறியதாவது:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள், அரசு பொது சேவை மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன;
      இம்மையங்களில், வாக்காளர் அடையாள அட்டையும் வழங்க முடிவு செய்துள்ளோம்; தேர்தல் கமிஷனிடம் அனுமதி கேட்டுள்ளோம்.தற்போது, புதிய அட்டை வழங்க வசூலிக்கப்படும், 25 ரூபாய் கட்டணத்தை, 15 ரூபாயாகக் குறைக்கவும், தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.மேலும், வாக்காளர் பட்டியலில், முகவரி மாற்றம் செய்வதை எளிமைப்படுத்த, புதிய, 'சாப்ட்வேர்' உருவாக்கப்பட்டுள்ளது. அதில், வாக்காளர் அட்டை எண்ணை பதிவு செய்தால், பழைய முகவரி வரும். அதன் அருகே புதிய முகவரியை, 'டைப்' செய்தால் போதும்; தானாகவே பழைய முகவரி
அகற்றப்பட்டு, புதிய முகவரி சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Pallikudam

தமிழகத்தில் மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஜனவரி 18ல் துவக்கம்
         மக்கள் தொகை விபரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தில் ஜன.,18 முதல் பிப்.,5க்குள் 2வது முறையாக ஆசிரியர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் ஈடுபட்ட ஆசிரியர்கள் வீடுகள் தோறும் சென்று வீட்டில் உள்ள தலைவர், தலைவி பெயர், குழந்தைகள், அசையும், அசையா சொத்துக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற 42 விதமான விபரங்களை சேகரித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்தனர்.
        இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2011ல் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை ஜனவரி 18ல் துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
         கணக்கெடுப்பு எப்படி: 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விபரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு 'பிரிண்ட் அவுட்' செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்தையே வீடுகள் தோறும் எடுத்துச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர் சரியாக உள்ளதா, குழந்தைகள் மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை கண்டிப்பாக கேட்டு பெற வேண்டும். 2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரங்களை கூடுதலாக சேகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
         மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குனர் ஒருவர் கூறுகையில், “வீடுகள் தோறும் வரும் ஆசிரியர்களுக்கு குடும்ப தலைவர்கள் முழு விபரம் வழங்கி, ஒத்துழைப்பு தர வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, அலைபேசி எண்களை ஆசிரியர்களிடம் கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாதோர் மக்கள்தொகை பதிவேடு (இ.ஐ.டி.,எண்) எண்ணை காண்பிக்கலாம். இக்கணக்கெடுப்பு படி தான், ரேஷன் கார்டுக்கு 'ஸ்மார்ட் கார்டு' தயாரிக்கும் திட்டம் உள்ளது. எனவே மக்கள் உண்மையான தகவலை தரவேண்டும்,” என்றார்.

Tuesday, January 5, 2016

pallikudam news

       எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு எழுத வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா சிறுபான்மையின மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-


கற்றல் சட்டம்
தமிழ்மொழி கற்றல் சட்டம் 2006-ல் குறிப்பிட்ட வழிமுறையின்படி அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறுபான்மை மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி 1-ல் தமிழ் மொழியை தொடக்கப்பள்ளிகளில் 2006-ம் ஆண்டு முதல் 1-வது வகுப்பில் அறிமுகப்படுத்தவேண்டும். 

அதன்படி படித்த அந்தமாணவர்கள் இப்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளனர்.

சிறுபான்மை மொழியில் படிக்கலாம்
இது குறித்து அனைத்து ஆய்வு அதிகாரிகளுக்கும் பலதடவை சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பகுதி 2-ல் ஆங்கில பாடத்தையும், பகுதி 3-ல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை சிறுபான்மை மொழியிலும் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 2015-2016 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு பெறக்கோரி மாணவர் ஒருவர் மனுகொடுத்துள்ளார். அந்த மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது.

தமிழ் பாடப்புத்தகம் வினியோகம்
அந்த மாணவர் படிக்கும் சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் கற்பிக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பாடப்புத்தகம் வினியோகிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் தமிழ்ப்பாடம் போதிக்க முறையான தமிழ்ப்பாட பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு தமிழ்ப்பாடம் போதிக்கப்பட்டு வந்துள்ளது. முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு குறிப்பிட்ட மாணவருக்கு தேர்ச்சி அறிக்கை பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கஇயலாது 
எனவே 2015-1016 கல்விஆண்டில் 10-வது வகுப்பு தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு வழங்குவது சார்ந்த கோரிக்கையினை ஏற்க இயலாது. 

இவ்வாறு த.சபீதா உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் சிறுபான்மையின மாணவர்களும் தமிழை முதல் பாடமாக வைத்து எழுதவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
            மேலாண்மை படிப்புக்கான, 'சிமேட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர, சிமேட் எனப்படும், பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 

இதை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நடத்துகிறது. வரும், 17ம் தேதி, இந்த தேர்வு, நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட, 62 இடங்களில் நடக்க உள்ளது; இதற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
                  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது. இதில், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள், 12 லட்சம் பேர் பயனடைவர்; அதற்காக, 326 கோடி ரூபாய் செலவாகும் என, அரசு அறிவித்துள்ளது.
ஆனால், இந்த பட்டியலில், அரசு பள்ளிகளில் பணி புரியும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் இடம் பெறவில்லை; இந்த ஆண்டும் சிறப்பாசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார்.
                பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், சட்டசபைக்கு தேர்தல் வருவதால், பொதுத் தேர்வை தாமதப்படுத்த முடியாமல், தேர்வுத் துறை குழப்பம் அடைந்தது.

இந்நிலையில், மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வை துவக்க அனுமதி கேட்டு, தேர்வுத் துறை சார்பில், முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைத்து, அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2, மார்ச், 22ல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு துவங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
            எழுத்தர், துணைநிலை அலுவலர்கள் பணியிட நேர்முகத் தேர்வை ரத்து செய்யும்படி பொதுத் துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசுத் துறைகளில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு நிலையிலான பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மத்திய நிதியமைச்சக செயலர் தலைமையில், செயலர்கள் நிலையிலான கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளில் கீழ்நிலை அளவிலான பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.அதன்படி, எழுத்தர், துணை நிலை அலுவலர்கள் நிலையிலான பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி,பொதுத் துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.அதற்குப் பதிலாக, சைக்கோ மெட்ரிக் தேர்வு உள்ளிட்டவற்றைச் சேர்த்து எழுத்துத்தேர்வை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயும்படி பொதுத்துறை வங்கிகள் அறிவுறுத்தபடுகின்றன என்று அந்த சுற்றறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக, மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித்துறை அண்மையில் வெளியிட்டஅறிவிப்பில், நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும், திறனறித் தேர்வு அல்லது உடல் தகுதித் தேர்வு தொடர்ந்து நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. குறிப்பிட்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்துவது அவசியம் என்று சம்பந்தப்பட்ட துறை விரும்பும்பட்சத்தில், அதுகுறித்து மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறைக்கு விரிவாக அறிக்கை அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
            தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 37
பணி: பேராசிரியர், இணை பேராசிரியர்உயர்கல்வித்துறையின் கடித எண் 2(டி) எண் 58 நாள் 19.4.2002ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஒரு துறையின் ஒவ்வொரு பணிநிலையும் தனித்தனி பிரிவாக கருதியும், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 206 நாள் 6.11.2008-இன் படியும், இடஒதுக்கீடு மற்றும் இனவாரி சுழற்சி முறை பின்பற்றப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான அருந்ததியர் பணியிடம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 65 நாள் 27.5.2009-இன் படி ஒதுக்கீடு ́செய்யப்பட்டுள்ளது. அருந்ததியரில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இப்பணியிடங்களுக்கு கருதப்படுவர்.விண்ணப்பப் படிவம், PBAS படிவம், கல்வித்தகுதிகள் மற்றும் சிறப்புக் கல்வித்தகுதிகளைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் தொடர்பான விவரங்களுக்கு பல்கலைக்கழக நல்கைக்குழு இணைய தளத்தினை (www.ugc.ac.in) பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500/- க்கான (தாழ்த்தப்பட்ட வகுப்பு எனில் ரூ.300/-) வரைவோலை “பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்” என்ற பெயரில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதன் இணைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.1.2016. ஏற்கனவே பணியில் உள்ளோர் பணியாற்றும் நிறுவனம் வழி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.கல்விநிலைப் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக ஏற்கெனவே பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் ந.க.எண் அ1/2609/2012 நாள் 12.8.2013 மற்றும் ந.க.எண் அ1/2609/2012 நாள்:19.12.2013 ஆகியனதிரும்ப பெறப்ப ́கிறது. செலுத்தப்பட்ட விண்ணப்பக்கட்டணம் உரியவர்களுக்கு மீள அளிக்கப்படும்.

குறிப்பு:நேர்காணலில் மேற்குறித்த அவ்வவ் பதவிகளுக்கான தகுதி நிலையில் விண்ணப்பதாரர்கள் முழுநிறைவு அளிக்காத நிலையில் அவ்வவ் பதவிகளுக்குக்கீழ்நிலையில் உள்ள பதவிகளுக்கே நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கருதப்படுவார்கள்.மேற்குறிப்பிடப்பட்ட பணியிடங்களை நிரப்புவது அல்லது நிரப்பாமல் இருப்பதற்கான உரிமை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.ஒரு பதிவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் தனித்தனியே விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

மேலும் கல்வித்தகுதி, தேர்வு முறைகள் முழுமையான விவரங்கள் அறிய

Sunday, January 3, 2016

Pallikudamnews

இரண்டாம் பருவத் தேர்வுக்கு முன், மூன்றாம் பருவத்திற்கான பாடங்களை நடத்தலாமா?

Pallikudam

ஒரே நாளில் இரு தேர்வுகள்!
         பொறியியல் பட்டம் பெற்றவர்கள், முதுநிலை பொறியியல் பட்டம் படிக்கவும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட, 18 துறைகளில் பொறியாளர் பதவிகளில் சேரவும், 'கேட்' தேர்வு எழுத வேண்டும்; இத்தேர்வு, இம்மாதம் 31ல் நடக்கிறது.

இந்த தேர்வுக்காக, ஓராண்டுகளுக்கு மேல், பயிற்சி மற்றும் தயாரிப்புப் பணிகளில், பொறியியல் பட்டதாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இத்தேர்வு, ஆன் - லைன் மூலம் நடத்தப்படுகிறது.இந்நிலையில், தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் பதவிக்கான தேர்வுகளை, தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வும், 31ல் நடத்தப்படுகிறது.பொறியியல் பட்டதாரிகள் கூறியதாவது:'கேட்' தேர்வு பொறியியல் பட்டதாரிகளுக்கு மிக முக்கியமான தேர்வு. பொறியியல் மேற்படிப்போடு மத்திய அரசு துறை பதவிகளுக்கும், இத்தேர்வு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், டிச., 28ல் அறிவிப்பு வெளியிட்டு, ஜன.,31ல், தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் பதவிக்கான தேர்வை நடத்துகின்றனர். மிகக் குறைவான இடைவெளியில், தமிழக அரசு இத்தேர்வை அறிவித்துள்ளது. 'கேட்' தேர்வு அகில இந்திய அளவில் நடப்பது; அதனால், தள்ளிப்போக வாய்ப்பில்லை. ஆனால், மின் வாரிய தேர்வை தள்ளி வைக்க முடியும்.

Pallikudam

தனியார் வசம் செல்கிறது பள்ளி கழிப்பறை சுத்தம்
       உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள, 35 ஆயிரம் அரசு பள்ளிகளின், கழிப்பறை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 57 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

          தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் பராமரிப்பில், 27 ஆயிரத்து, 700 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள்; கல்வித் துறையின் கீழ், 7,247 பள்ளிகள் என மொத்தம், 34 ஆயிரத்து, 947 பள்ளிகள் உள்ளன. 

         பற்றாக்குறைஉள்ளாட்சி அமைப்புக்களில் உள்ள துப்புரவு பணியாளர்களே இப்பள்ளிகளின், கழிப்பறைகளை சுத்தம் செய்கின்றனர்.'உள்ளாட்சி அமைப்பில் உள்ள, 24 ஆயிரத்து, 928 முழுநேர துப்புரவு பணியாளர்கள், பிற துப்புரவு பணிகளுக்கு மத்தியில், பள்ளிக் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள முடியாமல்உள்ளனர். எனவே, பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய, தனியாக துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என, திடக்கழிவு மேலாண்மை மற்றும் துாய்மை இந்தியா திட்ட விதிகள் வலியுறுத்துகின்றன.
இதை தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புக்களின் பராமரிப்பில் உள்ள பள்ளிகளுக்கு, துப்புரவு பணியாளர்களை நியமிப்பது குறித்து, தமிழக அரசின்,
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவு:
பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியை, தனியார் முகமைகளிடம் ஒப்படைக்கலாம். அல்லது, முழுநேரம் மற்றும் பகுதி நேர துப்புரவு பணியாளர்களை உள்ளாட்சி அமைப்புகள் நியமிக்கலாம்.
பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் துப்புரவுப் பணியாளர் எண்ணிக்கையை, உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்யலாம். துப்புரவு பணியாளர் வருகை பதிவேட்டை, பள்ளி தலைமை ஆசிரியர் பராமரிக்க வேண்டும். கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை, உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும்.சுகாதார உத்தரவாதம்இதற்கான செலவை, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், திடக் கழிவு மேலாண்மை திட்ட நிதியில் இருந்தும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கல்வி வரி மூலமும் ஈடுகட்டலாம். 2015 - 16ல், கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்கான பொருட்கள் வாங்க, 17 கோடி ரூபாயும், துப்புரவுப் பணியாளர் ஊதியத்துக்காக, 40 கோடி ரூபாயும் என ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து, உள்ளாட்சி துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி கழிப்பறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். பல நேரங்களில், பள்ளி கழிப்பறைகளிலிருந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உள்ளாட்சி அமைப்பில் போதிய, துப்புரவுப் பணியாளர் இல்லாத நிலையில், துாய்மைப் பணியை தனியாரிடம் அளிக்க அரசு முன் வந்துள்ளது. இத்திட்டம் மூலம், குழந்தைகளின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். உள்ளூர் துப்புரவுப் பணியாளர்களுக்கும் வேலை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.