Tuesday, January 5, 2016

pallikudam news

       எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மொழிகளை தாய்மொழியாக கொண்ட மாணவர்களும் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு எழுத வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா சிறுபான்மையின மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-


கற்றல் சட்டம்
தமிழ்மொழி கற்றல் சட்டம் 2006-ல் குறிப்பிட்ட வழிமுறையின்படி அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறுபான்மை மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி 1-ல் தமிழ் மொழியை தொடக்கப்பள்ளிகளில் 2006-ம் ஆண்டு முதல் 1-வது வகுப்பில் அறிமுகப்படுத்தவேண்டும். 

அதன்படி படித்த அந்தமாணவர்கள் இப்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளனர்.

சிறுபான்மை மொழியில் படிக்கலாம்
இது குறித்து அனைத்து ஆய்வு அதிகாரிகளுக்கும் பலதடவை சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பகுதி 2-ல் ஆங்கில பாடத்தையும், பகுதி 3-ல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை சிறுபான்மை மொழியிலும் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 2015-2016 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு பெறக்கோரி மாணவர் ஒருவர் மனுகொடுத்துள்ளார். அந்த மனு கவனமுடன் பரிசீலிக்கப்பட்டது.

தமிழ் பாடப்புத்தகம் வினியோகம்
அந்த மாணவர் படிக்கும் சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் கற்பிக்க ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் பாடப்புத்தகம் வினியோகிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் தமிழ்ப்பாடம் போதிக்க முறையான தமிழ்ப்பாட பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு தமிழ்ப்பாடம் போதிக்கப்பட்டு வந்துள்ளது. முறையாக தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு குறிப்பிட்ட மாணவருக்கு தேர்ச்சி அறிக்கை பள்ளியில் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கஇயலாது 
எனவே 2015-1016 கல்விஆண்டில் 10-வது வகுப்பு தேர்வில் பகுதி 1-ல் தமிழ்ப்பாடம் எழுதுவதில் இருந்து தவிர்ப்பு வழங்குவது சார்ந்த கோரிக்கையினை ஏற்க இயலாது. 

இவ்வாறு த.சபீதா உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் சிறுபான்மையின மாணவர்களும் தமிழை முதல் பாடமாக வைத்து எழுதவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
            மேலாண்மை படிப்புக்கான, 'சிமேட்' தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர, சிமேட் எனப்படும், பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. 

இதை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நடத்துகிறது. வரும், 17ம் தேதி, இந்த தேர்வு, நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட, 62 இடங்களில் நடக்க உள்ளது; இதற்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
                  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது. இதில், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள், 12 லட்சம் பேர் பயனடைவர்; அதற்காக, 326 கோடி ரூபாய் செலவாகும் என, அரசு அறிவித்துள்ளது.
ஆனால், இந்த பட்டியலில், அரசு பள்ளிகளில் பணி புரியும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் இடம் பெறவில்லை; இந்த ஆண்டும் சிறப்பாசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இத்தகவலை, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியுள்ளார்.
                பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, பாடம் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், சட்டசபைக்கு தேர்தல் வருவதால், பொதுத் தேர்வை தாமதப்படுத்த முடியாமல், தேர்வுத் துறை குழப்பம் அடைந்தது.

இந்நிலையில், மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 தேர்வை துவக்க அனுமதி கேட்டு, தேர்வுத் துறை சார்பில், முதல்வர் அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைத்து, அதிகாரப்பூர்வமாக தேர்வு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2, மார்ச், 22ல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு துவங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
            எழுத்தர், துணைநிலை அலுவலர்கள் பணியிட நேர்முகத் தேர்வை ரத்து செய்யும்படி பொதுத் துறை வங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசுத் துறைகளில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு நிலையிலான பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மத்திய நிதியமைச்சக செயலர் தலைமையில், செயலர்கள் நிலையிலான கூட்டம் கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளில் கீழ்நிலை அளவிலான பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.அதன்படி, எழுத்தர், துணை நிலை அலுவலர்கள் நிலையிலான பணியிடங்களுக்கு நடத்தப்படும் நேர்முகத் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி,பொதுத் துறை வங்கிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.அதற்குப் பதிலாக, சைக்கோ மெட்ரிக் தேர்வு உள்ளிட்டவற்றைச் சேர்த்து எழுத்துத்தேர்வை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயும்படி பொதுத்துறை வங்கிகள் அறிவுறுத்தபடுகின்றன என்று அந்த சுற்றறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக, மத்தியப் பணியாளர் நலன், பயிற்சித்துறை அண்மையில் வெளியிட்டஅறிவிப்பில், நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும், திறனறித் தேர்வு அல்லது உடல் தகுதித் தேர்வு தொடர்ந்து நடத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது. குறிப்பிட்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்துவது அவசியம் என்று சம்பந்தப்பட்ட துறை விரும்பும்பட்சத்தில், அதுகுறித்து மத்திய பணியாளர் நலன், பயிற்சித் துறைக்கு விரிவாக அறிக்கை அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
            தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 37 பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 37
பணி: பேராசிரியர், இணை பேராசிரியர்உயர்கல்வித்துறையின் கடித எண் 2(டி) எண் 58 நாள் 19.4.2002ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஒரு துறையின் ஒவ்வொரு பணிநிலையும் தனித்தனி பிரிவாக கருதியும், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 206 நாள் 6.11.2008-இன் படியும், இடஒதுக்கீடு மற்றும் இனவாரி சுழற்சி முறை பின்பற்றப்பட்டுள்ளது.தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான அருந்ததியர் பணியிடம் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அரசாணை எண் 65 நாள் 27.5.2009-இன் படி ஒதுக்கீடு ́செய்யப்பட்டுள்ளது. அருந்ததியரில் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இப்பணியிடங்களுக்கு கருதப்படுவர்.விண்ணப்பப் படிவம், PBAS படிவம், கல்வித்தகுதிகள் மற்றும் சிறப்புக் கல்வித்தகுதிகளைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து (www.tamiluniversity.ac.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கல்வித்தகுதி மற்றும் அனுபவம் தொடர்பான விவரங்களுக்கு பல்கலைக்கழக நல்கைக்குழு இணைய தளத்தினை (www.ugc.ac.in) பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.500/- க்கான (தாழ்த்தப்பட்ட வகுப்பு எனில் ரூ.300/-) வரைவோலை “பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்” என்ற பெயரில் எடுக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் அதன் இணைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.1.2016. ஏற்கனவே பணியில் உள்ளோர் பணியாற்றும் நிறுவனம் வழி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.கல்விநிலைப் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக ஏற்கெனவே பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் ந.க.எண் அ1/2609/2012 நாள் 12.8.2013 மற்றும் ந.க.எண் அ1/2609/2012 நாள்:19.12.2013 ஆகியனதிரும்ப பெறப்ப ́கிறது. செலுத்தப்பட்ட விண்ணப்பக்கட்டணம் உரியவர்களுக்கு மீள அளிக்கப்படும்.

குறிப்பு:நேர்காணலில் மேற்குறித்த அவ்வவ் பதவிகளுக்கான தகுதி நிலையில் விண்ணப்பதாரர்கள் முழுநிறைவு அளிக்காத நிலையில் அவ்வவ் பதவிகளுக்குக்கீழ்நிலையில் உள்ள பதவிகளுக்கே நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கருதப்படுவார்கள்.மேற்குறிப்பிடப்பட்ட பணியிடங்களை நிரப்புவது அல்லது நிரப்பாமல் இருப்பதற்கான உரிமை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.ஒரு பதிவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் தனித்தனியே விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

மேலும் கல்வித்தகுதி, தேர்வு முறைகள் முழுமையான விவரங்கள் அறிய

No comments: