பிறப்பு சான்று இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை : அரசு உத்தரவு
பிறப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே தொடக்க பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
பள்ளிகளில் சேர்க்கப்படும் அனைத்து மாணவர்களையும் பிறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே சேர்க்க வேண்டும். மேலும் பள்ளி பதிவேடுகளில் பிறப்பு சான்றிதழில் உள்ள தேதியை மட்டுமே குறிப்பிட வேண்டும். சில ஊரக பகுதிகளில் தலைமை ஆசிரியர்கள் பிறப்பு சான்றிதழை சரிபார்க்காமலேயே அவர்களின் விருப்பப்படி தோராயமான பிறந்த தேதியை பதிவேடுகளில் பதிவு செய்து மாணவர்களை பள்ளியில் சேர்க்கை செய்வதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது ஆகும்.
இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் நடைபெற கூடாது.
பிறப்பு சான்றிதழில் உள்ள தேதியை மட்டுமே பள்ளி பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக தக்க அறிவுரை வழங்க வேண்டும். ஜூன் 1ம் தேதி அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை திறக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளன்றே மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகம், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ் தாமதம் இன்றி பெற்றுத் தர போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment