தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்த கல்வித்துறை முயற்சி - நாகை பாலா
தமிழக அரசு ஊழியர்களின் பணித்திறனை (Performance) மதிப்பிடுவது எந்தவொரு துறையிலும் நடைமுறையில் இல்லை. பணி நியமனம் செய்வது போட்டித்தேர்வின் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு பதிவு மூப்பின்படியோ நியமிக்கப்படுகிறார்கள்.
பதவி உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வு என்பது கூடுதல் கல்வித்தகுதி துறைத்தேர்வு மற்றும் பணிமூப்பு அடிப்படையில் அளிக்கப்படுகிறது. ஓர் ஆண்டு முழுவதும் நீண்ட விடுப்போ அல்லது துறை நடவடிக்கையோ இல்லாமல் இருந்தாலே ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற பலன்கள்.
தனியார்துறையில் மட்டுமே பிரிட்டிஷ் நடைமுறையை பின்பற்றி தனிபட்ட ஊழியரின் பணித்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
தற்போது 12 பக்கங்களை கொண்ட திறன் அறியும் படிவம் (PINDICS) ஒன்று அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் தொடக்க்க்கல்வித்துறைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படிவத்தின் 10 ஆம் பக்கத்தில் உள்ள ஒரு மதிப்பீட்டு படிவத்தில் தலைமையாசிரியர் ஆசிரியரைப்பற்றி மதிப்பிடுவதாக உள்ளது.
இந்தப் படிவத்தில் ஆசிரியரின் பாடம் பற்றிய அறிவு தொழிற்வளர்ச்சி உள்ளிட்ட 8 செயல்நிலைகளை தலைமையாசிரியர் நான்கு தரநிலைகளில் மதிப்பிடுவதாக உள்ளது.
இந்தப்படிவத்தில் தலைமையாசிரியரும் சம்பந்தப்பட்ட ஆசிரியரும் கையொப்பமிடுவதாக உள்ளது,
இதனால் ஏற்படும் விளைவுகள்
• இது ஒரு அரசு ஊழியரை மற்றொரு சக அரசு ஊழியர் வெளிப்படையாக மதிப்பிடப்படுவதற்கான ஒரு மோசமான தொடக்கம்.
• ஒரு தலைமையாசிரியருக்கும் அந்தப்பள்ளியில் உள்ள ஆசிரியருக்கும் நல்ல புரிதல் இல்லாத நிலையில் அவருடைய பணித்திறன் நன்றாக இருந்தாலும் ”எதிர்பார்த்த நிலையை அடையவில்லை” என உள்நோக்கத்தோடு குறிப்பிட வாய்ப்புள்ளது.
• ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் ஓரு ஆசிரியரை உயர்வாகவும் மற்றொரு ஆசிரியரை குறைவாகவும் தலைமையாசிரியர் மதிப்பீடு செய்யும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கிடையே கருத்து வேறுபாடும் பள்ளியில் சுமூகமற்ற சூழ்நிலை ஏற்படும். இது கற்றல் கற்பித்தல் பணியை பாதிக்கும்.
எனவே இது போன்று மற்ற துறைகளில் உள்ள அரசு ஊழியர்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படாத நிலையில் ஆசிரியர்களை மட்டும் மதிப்பீடு செய்வதை தொடக்க்க்கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் எதிர்க்கின்றனர்.
அல்லது தலைமைச் செயலர் முதல் இரவுக்காவலாளி வரை இது போன்ற வெளிப்படையான மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவார்களா? நாகை பாலா....
Pada Salai
No comments:
Post a Comment