Saturday, March 1, 2014

Pallikudam

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக, பல்வேறு முக்கிய முடிவுகளை எடு்ப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள். மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள். தற்போது அகவிலைப்படி 100 சதவீதத்தை அடைந்துள்ளதால், இது தொடர்பான பரிந்துரையை ஏழாவது ஊதியக் குழுவுக்கு அனுப்பவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்‌யப்பட்டது. இதன்மூலம், ஏழாவது ஊதியக் குழு தனது இடைக்கால அறிக்கையில், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை செய்ய முடியும். அவ்வாறு இணைக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 30 சதவிகிதம் உயரும்.

No comments: