Friday, November 13, 2015

pallikudam

முகநூலில் அரசுக்கு எதிராக இயங்குபவரா- உங்களை குறித்த விவரம் தற்போது அரசின் கையில்
           உலகில் உள்ள பல்வேறு நாடுகள், முகநூலில் (பேஸ்புக்) தங்களுக்கு எதிராக இயங்குபவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என பேஸ்புக் நிர்வாகம் கூறியுள்ளது.

         இந்தியாவில் மட்டும், சட்டத்துக்குப் புறம்பான கருத்துகளை வெளியிட்டதாக இந்த ஆண்டில் 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்  நிறுவனத்தில் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் உள்ள அரசாங்கங்கள் கேட்கும் தகவல்கள் கடந்த ஆறு மாதத்தைவிட தற்போது 18 மடங்கு அதிகரித்துள்ளது. 2014 ஆண்டு பிந்தைய ஆறுமாதங்களில் 35,051 பேரின் தகவல்கள் கேட்கப்பட்ட நிலையில், நிகழ் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 41,214 பேரின் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

அரசுகளின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, 20,568 ஆட்சபேகரமான கருத்துகள் பேஸ்புக் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த 6 மாதத்தைவிட இரு மடங்காகும்.

மேலும் அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்யும் நபர்களின் அடிப்படை தகவல்கள், அவர்கள் பயன்படுத்தும் கணினி, மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் (IP address), அவர்கள் பதிவிடும் தகவல்களை தர வேண்டும் என்பது உலக அரசுகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

பேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.55 மி்ல்லியனை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்திடமிருந்துதான், தனிநபர்கள் குறித்த தகவல்கள் கேட்டு அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளிலிருந்து அதிக கோரிக்கைகள் வந்துள்ளன.

உள்ளூர் சட்ட விதிகளை மீறியதாகவும், தகவல்களை நீக்க வலியுறுத்தி இந்தியா மற்றும் துருக்கி நாடுகளிலிருந்து அதிக வேண்டுகோள்கள் வந்துள்ளன. 190 மில்லியன் இந்திய வாடிக்கையாளர்கள் பேஸ்புக்கில் உள்ள நிலையில், இந்த ஆண்டு மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாகும்.

அரசாங்கங்கள் விடுக்கும் கோரிக்கையை தட்டிகழிக்க இயலாமல், தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, அவர்கள் குறித்த விவரங்களை அரசுகளுக்கு வழங்கி வருகிறது பேஸ்புக்.

எனினும், தனது வாடிக்கையாளர் விவரங்களை எந்த அரசும்  நேரிடையாக பயன்படுத்திகொள்வதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

pallikudam

பள்ளிகளில் 4 முறை வருகைப்பதிவு
      தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் இளங்கோவன் அவர்கள், பள்ளிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
          மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை உறுதிபடுத்த வேண்டும். காலையில் வகுப்பு துவங்கியதும், இடைவேளை முடிந்து, 

      மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு வந்ததும், வருகை பதிவேடு சரிபார்க்கப்பட வேண்டும்; தொடர்ந்து, மதிய உணவு முடிந்து, வகுப்பு துவங்கும் போதும்; மாலைஇடைவேளைக்கு பிறகும் சரிபார்க்கப்பட வேண்டும்.

pallikudam

TNPSC OFFICIAL GROUP-I Tentative Answer Keys


 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN CCS-I EXAMINATION (GROUP-I SERVICES)
(Date of Examination:08.11.2015 FN)
       1
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 18th November 2015 will receive no attention.

pallikudam

TNPSC VAO தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்.

குரூப் -1 முதல் நிலை, குரூப் -2 முதல் நிலை, குரூப் -4 தேர்வுகளுக்கு என்ன புத்தகங்கள் படிக்கலாம் ...
 S.No
SUBJECTS
Books for Group I Prelims,
                      Group II ,Group IV & VAO    www.asiriyar.com
  Group I Mains
  1
இந்திய வரலாறு
1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10 
2. 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம்வகுப்பு வரலாறு 
3.கனி அகாடமியின் Class Notes
1.Indian Freedom struggle                           K.Venkatesan
2. TamilNadu History-                               J. Dharmarajan 
 2
இந்திய அரசியல்அமைப்பு சட்டம்
1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10. 11 & 12 Selected Portions
2.கனி அகாடமியின் Class Notes
3.பாக்யா இந்திய அரசியலமைப்பு 
1.INDIAN POLITY For CSE                              M.LAXMIKANTH 
2. இந்திய அரசமைப்பு
         பேரா..சந்திரசேகரன் 
  3
புவியியல்
1.சமச்சீர் சமுக அறிவியல் 6 -10  
2.கனி அகாடமியின் Class Notes 
3.Oxford/orient Black Swan School Atlas 
பாக்யா புவியியல்
4
இந்திய பொருளாதாரம்
1.பொருளாதாரம் 11ஆம் வகுப்பு மற்றும்12th Selected Portions 
2.கனிஅகாடமியின் இந்தியபொருளாதாரம்-Class Notes
இந்திய பொருளாதாரம்                                        கலியமூர்த்தி
5
பொது அறிவியல்(General Science)
1.சமச்சீர்  அறிவியல் 6 -10  ஆம் வகுப்பு 
2.Tata MacrawHill GS 2013-GS portion only 
3.அறிவியல் 11 & 12 ஆம் வகுப்பு Some Portions
Science and Technology in India                                                                   spectrum
6
கணிதம்மற்றும் பொதுஅறிவுகூர்மை 
1.சக்தி பொது அறிவு கூர்மை 
2.கனி அகாடமியின் Class Notes
1.QUANTITATIVE APTITUDE
                         R.S.Agarwal
2.QUANTITATIVE APTITUDE AND REASONING 
                         R.V.Praveen
7
நடப்பு நிகழ்வுகள்
1.தினமணி/தினத்தந்தி/இந்து தமிழ்Edition 
2. The Hindu English
3.பொது அறிவு உலகம்/GK Leaders
4.GK Today /
5.கனி அகாடமியின் நடப்பு நிகழ்வுகள்மாத இதழ்
6.Radio News
1.        Frontline
2.        Yojana
3.        Thittam
 8
பொது அறிவு
1.சக்தி 2014/ சுரா 2014/Manorama/Vikatan Year Book 2014
-Any One
Tata MacrawHill GS 2014                         GK portion only
  9
தமிழ்நாடு பற்றியதகவல்கள் 
1.சங்கர் IAS Academy  தமிழ்நாடு தகவல்களஞ்சியம் /
2.
சுரா தமிழ்நாடு
http://www.tn.gov.in/
 10
தமிழ்-  பகுதி ''
              
              
1.தமிழ் 6 -12 வகுப்பு புத்தகங்கள்.
2.கனி அகாடமியின் Class Notes
3.பன்முக நோக்கில் தமிழ் இலக்கியவரலாறுவாசுதேவன்
தமிழ் இலக்கிய வரலாறு                              மு.வரதராஜன்
            பகுதி ''
1.கனி அகாடமியின் Class Notes 
தமிழ் இலக்கியதகவல்களஞ்சியம்  
                            தேவிரா 
           பகுதி  ''
1.கனி அகாடமியின் Class Notes
  .

Thursday, November 12, 2015

pallikudam

CPS திட்டத்தில் கட்டணம் வசூலிக்க உத்தரவு அரசு ஊழியர் அதிர்ச்சி

         மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், பல்வேறுதலைப்புகளின் கீழ், கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு, 1.1.2004 முதல் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

         இத்திட்டம் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மற்ற மாநிலங்கள் எல்லாம் நிதி பிடித்தம் செய்து, ஓய்வு ஊதிய நிதி ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தி உள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுநாள் வரை ஒரு பைசா கூட ஓய்வு ஊதிய திட்டத்தில் பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த பிரச்னை ஒரு புறம் நீடித்து வருகிறது.இந்நிலையில், புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்ட சந்தாதாரர்களுக்கு கணக்குகளை பராமரிக்க, கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசின் ஓய்வு ஊதிய துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மத்திய கணக்கு பதிவு முகமைக்கு (சி.ஆர்.ஏ) வந்துள்ள உத்தரவில், கணக்கு துவங்குவதற்கு ரூ.50 ம், ஆண்டு பராமரிப்பு கட்டணமாக ரூ.190 ம், ஒவ்வொரு பண பரிவர்த்தனையின் போதும் ரூ.4 ம், ஓய்வு ஊதிய நிதி மேலாளர்களுக்கும் கணக்கு பராமரிப்புகட்டணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்நிலையில், 1.1.04 க்கு முன்பே பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட கணக்குளை பராமரிக்க, பராமரிப்பு கட்டணம் வசூல் செய்வதில்லை. மத்திய அரசின்தற்போதைய அறிவிப்பானது, அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குமுறுகின்றனர்.திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: புதிய ஓய்வு ஊதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும், ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்கவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தையே நடைமுறை படுத்த உள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதை இதுவரை நிறைவேற்றாததால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கட்டண அறிவிப்பானது, மேலும் அதிருப்தியை அதிகரிப்பதாக உள்ளது.இது குறித்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் மவுனம் சாதிப்பதுவியப்பை ஏற்படுத்துகிறது. குடும்ப ஓய்வு ஊதியம், மற்றும் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பலன்களை முறையாக வழங்க முன்வர வேண்டும், என்றார்.

pallikudam