Tuesday, July 14, 2015

Kamarajar

பள்ளி மாணவர்களுக்கு - "கடமை வீரர்" , "பாரத ரத்னா " காமராசர் வாழ்க்கை வரலாறு

காமராஜரின் பிறந்த தினமான (15/03), "கல்வி வளர்ச்சி தினமாக'  கடைபிடிக்கப்படுகிறது. காமராஜர் பிறந்த தினத்தை  கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து பள்ளிகள் தோறும் கொண்டாட  வைத்தது, தமிழகத்தில் ஏழைகளும் கல்வி பயில காமராஜர் ஆற்றிய பணிக்கு  மிகச்சரியான புகழாரம்.

"கர்ம வீரர்' என அன்பாகஅழைக்கப்பட்ட காமராஜரின் வாழ்க்கை 1903 ஜூலை 15: இன்று விருதுநகராக  வளர்ந்திருக்கும் அன்றையதிருநெல்வேலி மாவட்டம்விருதுபட்டியில் குமாரசாமி  நாடார், சிவகாமி அம்மாள் தம்பதிக்குமகனாக பிறந்தார்.
1914 : ஆறாம் வகுப்புடன் பள்ளிசெல்வதை நிறுத்திக் கொண்டார்.
1919 : ரவுலட் சட்டத்தை எதிர்த்துகாந்திஜியின் அழைப்பை ஏற்று, காங்கிரசின் முழு நேர ஊழியரானார்.
1920 : ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கு கொண்டார். திருமண பேச்சை தாயார் தொடங்கிய போது மணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
1922 : சாத்தூர் தாலுகா, காங்கிரஸ் மாநாட்டில் வரவேற்புச் செயலாளராக பணியாற்றினார்.
1923 : நாகபுரி கொடி போராட்டத்தில் பங்கு கொண்டார். மதுரையில்கள்ளுக்கடை மறியலில்ஈடுபட்டார்.
1925 : கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1927 : சென்னையில் கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த  காந்திஜியிடம் அனுமதி பெற்றார். (போராட்டம் நடப்பதற்குள் நீல் சிலையை அரசே  அகற்றியது)
1928 : சைமன் குழுவை எதிர்த்து,மதுரையில் காமராஜர் போராட்டம்.
1930 : வேதாரண்யத்தில் நடந்தஉப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதால், இரண்டு ஆண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1932 : போலீஸ் ஸ்டேஷன் மீதுவெடிகுண்டு வீசியதாக சதி வழக்கு, காமராஜர் மீது  சுமத்தப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார்.
1933 : பிரிட்டனில் நடந்த வட்டமேஜை மாநாடு தோல்வியுற்றதால், நாடெங்கும்  கிளர்ச்சி ஏற்பட்டது. பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காமராஜரும்  ஓராண்டு சிறை தண்டனை பெற்றார்.
1934 : காமராஜர் உழைப்பால், பொதுத்தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகள் பெற்று வென்றது.
1935 : டிச.28ம் தேதி காங்கிரஸ் பொன்விழா விருதுநகரில் காமராஜர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
1936 : காரைக்குடியில் நடந்தகாங்கிரஸ் கமிட்டித் தேர்தலில்சத்தியமூர்த்தி  தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1937 : சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக  போட்டியிட்டு வெற்றி பெற்றார். விருதுநகர் நகராட்சி மன்றத்தேர்தலில் 7வது  வார்டில் போட்டியிட்டு வென்றார். நகராட்சித் தலைவராகும்படி பலரும்  வேண்டியும் மறுத்து விட்டார்.
1940 : தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வென்றார்.
1941 : யுத்த நிதிக்கு பணம் தரவேண்டாம் என மக்களிடையே பிரசாரம் செய்ததால்,  பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  சிறையில் இருக்கும் போதே மே 31ல் விருது
நகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1942 : ஆகஸ்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, அமராவதி சிறைச்சாலையில்  இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு, வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
1945 : இரண்டாவது உலகப்போரில் பிரிட்டிஷார் வெற்றி பெற்றதால், காமராஜர் விடுதலை செய்யப்பட்டார்..
1946 : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு சென்னை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக் கப்பட்டார்.
1947 ஆக.15: சுதந்திரம் கிடைத்ததும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார்.
1954 : குலக்கல்வி திட்ட எதிர்ப்புகாரணமாக ராஜாஜி முதல்வர்பதவியை ராஜினாமா  செய்யவும், சட்டசபை கட்சி தலைவராக காமராஜர் போட்டியிட்டு வென்றார்.
1954, ஏப்.13: காமராஜர் முதல்வரானார்.
1956 : மொழிவாரி மாநில பிரிவினையின் படி தமிழகம் உருவாவதற்கு ஆதரவு  தெரிவித்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார்.
1957 : பொதுத்தேர்தலில் போட்டியிட்டு, வென்று, இரண்டாவது முறையாக முதல்வரானார்.
1960 : ஏழைக் குழந்தைகளுக்கு 11ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிப்பதற்கு ஆணையிட்டார்.
1962 : பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதல்வரானார்.
1963 : எல்லோருக்கும் இலவசகல்வி திட்டத்தை அமல்படுத்தினார். பின் பதவியை ராஜினாமாசெய்தார்.
1964 : அனைத்திந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1966 : இந்திரா பிரதமர் ஆவதற்கு, காமராஜர் பெரும் முயற்சி செய்தார்.
1967 : பொதுத்தேர்தலில் காமராஜர் தோல்வி.
1969 : நாகர்கோவில் பார்லிமென்ட் இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாயார் சிவகாமி அம்மையார் மறைவு.
1971 : பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி. பார்லிமென்ட்உறுப்பினராக காமராஜர் தேர்வு.
1975: அக்.2ம் தேதி எதிர்பாராமல் காமராஜருக்கு உடல் வியர்த்தது. டாக்டர் வருவதற்குள் உயிர் பிரிந்தது.
இவரது ஆட்சியின் போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை, எளிய  மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், இலவச மதிய உணவு  திட்டத்தை கொண்டு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், மத்திய  அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
காமராஜர், தான் அணிந்த கதராடை போல் தூய மனதுடையவர். ஏழ்மை காரணமாக 6 ம்  வகுப்பு வரை மட்டுமே படித்த அவருக்கு , கல்வி தாகம் கொண்ட ஏழை  சிறுவர்களுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
முதல்வரானதும், ஏழை மாணவர்கள் கற்க வேண்டும் எண்ணத்தை செயல்படுத்த  முனைந்தார். கிராமம் தோறும் கல்விக்கூடங்களை அமைத்தார்.
பசிக்கும்  வயிற்றோடு சிறுவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது என்பதால், மதிய  உணவு திட்டத்தை அமல்படுத்தி, பள்ளிகளுக்கு மாணவர்களை வர செய்தார்.
இதற்காக  கல்வித்துறையின் அப்போதைய இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் தனது  எண்ணத்தை கூறியபோது, இயக்குனரோ, ""அதிகம் செலவாகுமே,'' என்றார். ""பணத்தை  பற்றி கவலைப்பட வேண்டாம்; வசதியுள்ளவர்களிடம் பிச்சை எடுத்தாவது திட்டத்தை  அமல்படுத்த வேண்டும்,'' என்றார் காமராஜர் .
தமிழகத்தில் கல்லாமையை  இல்லாமை ஆக்கியவர் காமராஜர். சுய நலம் இல்லாதவர்.
அவர் முதல்வராக  இருந்தபோது, தாயார் சிவகாமி, தண்ணீர் பற்றாக்குறையால், நகராட்சி  அதிகாரிகளிடம் குடிநீர் வசதி செய்து தர கேட்டார். முதல்வரின் தாயார்  என்பதால் அதிகாரிகளும் அவரது வீட்டுக்குள்ளே குடி நீர் குழாய் அமைத்தனர்.  இதை அறிந்த காமராஜர், தன் வீட்டுக்கு குழாய் போட்ட அதிகாரி யார் என  அறிந்து, அவரிடமே, ""24 மணி நேரத்திற்குள் வீட்டில் உள்ள குழாயை அகற்ற  வேண்டும்,'' என, உத்தரவிட்டார். குழாய் அகற்றப்பட்டது .
கட்சியின்  மூத்த தலைவர்கள் பதவிகளை இளைஞர் களிடம் கொடுத்து விட்டு, கட்சிப் பணியாற்ற  வேண்டும் என்ற இவரது கொள்கையை பிரதமர் நேரு, காங்கிரஸ் கட்சி அளவில்  செயல்படுத்த விரும்பினார்.
அது "கே- பிளான்' என்ற சிறப்பினைப் பெற்றது.
இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு, தேசிய அரசியலில்  முக்கியத்துவம் பெற்றவராக விளங்கினார். இவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும்  விதத்தில் "காமராஜர்' என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது.
தமிழகத்தில் ஆரம்பத்தில் ஆதிதிராவிடர்களுக்கு தான் இலவச கல்வி சலுகை  அளிக்கப்பட்டது.
இச்சலுகையை பின், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும்,  ஆதிதிராவிடர்களாக இருந்து மதம் மாறியவர்களுக்கும் அளித்து 1957-58ம்  ஆண்டில் காமராஜர் அரசு உத்தரவிட்டது. இதனால் பலரும் பலன் பெற்றனர்.  ஆண்டு  வருமானம், ஆயிரத்து 200 ரூபாய்க்கு கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவச  கல்வி என 1960ம் ஆண்டில் காமராஜர் தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது.
அதுவே, அனைவருக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என 1962ல்  மாற்றப்பட்டது. இதே ஆண்டு 6-11 வயது வரை உள்ள அனைவருக்கும்  கட்டாயக்கல்வியாக அறிமுகப்படுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சிப் பொறுப்பேற்ற  1954ம் ஆண்டில் 6 முதல் 11 வயது குழந்தைகளில், 45 சதவீதம் பேர் வரை மட்டுமே  பள்ளிக்கு சென்றனர்.
ஆனால் 1963ல் அதே வயது பிரிவை சேர்ந்த 80 சதவீதம்  குழந்தைகள், பள்ளிக்கு சென்றனர். அதாவது, 1954ல் 18 லட்சம் சிறுவர் மட்டுமே  பள்ளிக்கு சென்றனர் என்ற நிலை மாறி 1963 பள்ளிக்கு சென்ற சிறுவர்களின்  எண்ணிக்கை 47 லட்சமாக உயர்ந்தது.
இடைநிலை கல்வியை பொறுத்தவரை 1954ல்  ஆயிரத்து 6 பள்ளிகளில் 4 லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள் பயின்றனர்.  இது  காமராஜரின் ஆட்சியில், இரண்டு மடங்காகியது.
1954ல் இருந்த 141 ஆசிரியர்  பயிற்சி பள்ளிகள், காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் 209 ஆக உயர்ந்தது.  கல்வித்துறையில் காமராஜர் செய்த புரட்சி, தமிழக மக்களிடையே கல்வி கற்பதில்  விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழகத்தில் "ஆரம்ப பள்ளிகள் இல்லாத கிராமமே  இல்லை' என்ற நிலை, காமராஜர் காலத்தில் உருவானது. தேவையான அளவு வசதிகளுடன்  கூடிய உயர்நிலைப்பள்ளிகள், தமிழகத்தில் ஐந்து கி.மீ., தூரத்துக்கு ஒன்றாக  அமைந்தன.  ஒரு சமுதாயம், வெற்றிகரமான சமுதாயமாக திகழ விழிப்புணர்வும்  அவசியம். இதை உணர்ந்த காமராஜர் அரசு, கல்விக்கு அளித்த முன்னுரிமையை நூலக  இயக்கத்துக்கும் அளித்தது. தங்கள் ஊர்களில் நூலகம் அமைத்து செயல்பட,  நூலகத்துக்கு இடம், கட்டடம், நூல்கள், பொருட்கள் ஆகியவற்றை தருவதற்கு  பொதுமக்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.
இதன் காரணமாக, நூலகங்கள் இல்லாமல்  இருந்த தமிழ்நாட்டில் 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும்  திறக்கப்பட்டன.
காமராஜர்  மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார். காமராஜரையும்,  காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா.,"பச்சைத்தமிழன்' என காமராஜரைப்  பாராட்டினார். காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் துவக்க காலத்தில்  கடுமையாக விமர்சனம் செய்த கருணாநிதி ,அண்ணா ,எம்ஜிஆர்  போன்றோர் தனிப்பட்ட முறையில் காமராஜர் மீது மரியாதையையும் அன்பும் செலுத்தினர்.
காமராஜர் ஆட்சி .அமைச்சர்களிடம் அவர் கூறும் போது, "பிரச்னைகளை எதிர்கொள்ளுங்கள்.  அதிலிருந்து தப்பிக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். அதற்கு சிறிய  அளவிலேனும் தீர்வு காணுங்கள். நீங்கள் ஏதாவதுசெய்தால்தான் மக்கள்  திருப்திஅடைவார்கள்' என்பார்.
முதல்வர் என்பதற்காகவோ, கட்சித் தலைவர்  என்பதற்காகவோ அவர் சிறிதும், தனக்கென வசதி செய்து கொள்ளாத தியாக உள்ளம்  படைத்தவர்.
இந்தக் காலத்தில் சாதாரண திட்டத்தை செயல்படுத்திய தலைவர்கள் தங்கள் படத்தைகூட தம்பட்டம்  அடித்துக்கொள்கின்றனர்.
முதல்வராக இருந்து அவர்  நிறைவேற்றிய முக்கிய திட்டங்கள்:அணைகள்
* தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மணிமுத்தாறு அணை கட்டப்பட்டது. இதனால் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
* மேட்டூர் அணையில் ரூபாய் 2.5 கோடியில் பாசன கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இதனால் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது.
* அமராவதி அணை 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இதனால் 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடைகின்றன.
* 2.5 கோடி ரூபாய் செலவில் வைகை அணை கட்டப்பட்டது. இதனால் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது.
* 2.5 கோடி ரூபாய் செலவில்சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதனால் 20 ஆயிரம் ஏக்கர்
நிலங்கள் பயன்பெறுகிறது.
* வாலையாறு அணை 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இதனால் 6,500 ஏக்கர் நிலம்பயன் பெறுகிறது.
* மங்கலம் அணை 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.இதனால் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
* ஆரணி அணை, 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதனால் 1,100 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகிறது.
* காவிரி டெல்டா பகுதியில் 30 லட்சம் ரூபாய் செலவில் கால்வாய்கள் புதுப்பிக்கப்பட்டன.
* கிருஷ்ணகிரி அணை, 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதனால் 7,500 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன.
* 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் 2 லட்சம் ஏக்கர் நிலம் பயன் பெறுகின்றன.
* புள்ளம்பாடி திட்டம் 1.5 கோடிரூபாயில் உருவாக்கப்பட்டது.இதனால் 22 ஆயிரம் ஏக்கர்நிலங்கள் பயனடைகின்றன.
* கோமுகி ஆற்றுத்திட்டம், 75 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதனால் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் பெற்றன.
* பேச்சிப்பாறை, அழியாறு, பரம்பிக்குளம் மற்றும் குந்தா ஆகியஅணைகள்  காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன.தொழிற்சாலைகள்அவரது ஆட்சிக்  காலத்தில் சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட்  கார்ப்பரேஷன், எண்ணூர் அனல் மின் நிலையம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியவை  முக்கியமானவை.
சிமென்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், அலுமினிய உற்பத்தி  நிறுவனங்கள், மாக்னசைட்,சுண்ணாப்பு சுரங்கங்கள், ரப்பர் தொழிற்சாலைகள்  ஆகியவற்றையும் காமராஜர் ஏற்படுத்தினார்.
நூல் நூற்பு, கார் உற்பத்தி, கார்  உதிரிபாகம், சைக்கிள், என்ஜின், மோட்டார் வாகனம், தட்டச்சு பொறிகள்,  சுவிட்சு கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவை சிகிச்சை  கருவிகள், தொடர்வண்டிப் பெட்டிகள், ராணுவவாகனங்கள் ஆகியவைதயாரிக்கும்  தொழிற்சாலைகளையும் காமராஜர் நிறுவினார்.
1952 பொதுத்தேர்தலில் காமராஜர்,  ஸ்ரீவில்லிபுத்தூர் லோக்சபா தேர்தலில் நின்றபோது அவரை எதிர்த்துப்  போட்டியிட்டவர்களுள் விஞ்ஞானி என்ற புகழ்பெற்ற ஜி.டி.நாயுடு.
அதே  ஜி.டி.நாயுடு, காமராஜர் முதல்வரான பின், அவர் புரிந்த சாதனைகளை வியந்து,  காமராஜர் தான் என்றென்றும் தமிழக முதல்வராக இருக்க வேண்டும்என்றார்.
காமராஜரையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா., "பச்சைத்  தமிழன்' என காமராஜரைப் பாராட்டினார். அவரது சாதனைகளை காங்கிரஸ்காரர்களைவிட  அதிகம் போற்றினார்.
காமராஜர், ரஷ்யாவுக்கு செல்லும் போது  அணிய கோட் தைத்திருந்தார்.
ஆனால் நான் கதர் சட்டை கதர் வேட்டியுடன் தான்  சென்று வருவேன் எனக் கூறி சென்று வந்தார்.
" தியாக உணர்வுடன்,  தேசப்பணியில் ஈடுபட்ட காமராஜர், 1975 அக்.2ல்,   மறைந்தார். மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது.
வங்கிக்  கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.  இவரது சேவைகளை பாராட்டி, மறைவுக்குபின் 1976ல்,   நாட்டின் மிக உயரிய  "பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது.
புனிதமான, எளிமையான  வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப்பங்காளன்,  கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை  சூட்டி அவரை போற்றி வருகின்றனர்."

Monday, July 6, 2015

Pallikudam

பி.எஸ்சி. நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது
       பி.எஸ்சி.நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் இன்று (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் பி.எஸ்சி.நர்சிங் படிப்பில் சேர 250 இடங்கள் உள்ளன.

            பிஸியோதெரபி படிப்புக்கு 120 இடங்கள் இருக்கின்றன. பி.எஸ்சி. ரேடியாலஜி படிப்பில் சேர 60 இடங்களும், பி.எஸ்சி.ரேடியோதெரபி டெக்னாலஜி படிப்புக்கு 20 இடங்களும், பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்பூசன் டெக்னாலஜி படிப்புக்கு 10 இடங்களும் உள்ளன. பி.எஸ்சி.ஆப்டோ மெட்ரி படிப்புக்கு 20 இடங்கள் உள்ளன. மேற்கண்ட படிப்புகள்தவிர சில மருத்துவம் சார்ந்த படிப்புகளும் உள்ளன.பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 5 ஆயிரத்து 296 இடங்களும், பி.பார்மஸி படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 1,172 இடங்களும், பிஸியோதெரபி படிப்புக்கு சுயநிதி கல்லூரிகளில் 630 இடங்களும் இருக்கின்றன. இந்த படிப்புகள் அனைத்தும் 4 வருட பட்டப்படிப்பாகும்.

நாளை முதல் விண்ணப்பம்

இவற்றுக்கான விண்ணப்ப படிவம் விலை ரூ.350. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ–மாணவிகள் தங்களது சாதிச்சான்று நகல் கொடுத்தால் அவர்களுக்கு விண்ணப்ப படிவம் இலவசம். அனைத்து படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது. விண்ணப்ப படிவம் நாளை(திங்கட்கிழமை) முதல் 17–ந்தேதி வரை அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் கொடுக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 18–ந்தேதிக்குள் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, அரசு மருத்துவக்கல்வி இயக்குனரகம், கீழ்ப்பாக்கம், சென்னை–10 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பிவைக்கவேண்டும்.கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2–வது வாரத்தில் நடத்த தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.2 ஆண்டு பி.எஸ்.சி. செவிலியர் படிப்பு2 ஆண்டு பி.எஸ்சி. செவிலியர் பட்டப்படிப்பு (செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு மட்டும் ) மற்றும் 2 ஆண்டு மருந்தியல் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் ( www.tnhealth.org) இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தேர்வுக்குழுவுக்கு ஜூலை 9–ந் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரவேண்டும்.
Pada Salai.

Pallikudam

'ஜாக்டா' குழுவினர் இன்று இயக்குனருடன் சந்திப்பு
           பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 19 ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இன்று பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளனர்.

          அரசு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டா' அமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் தலைமையில் சென்னையில் நடந்தது.ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் பள்ளிக்கல்வி அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று காலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பனை நேரில் சந்தித்து ஜாக்டா நிர்வாகிகள் மனு அளிக்க உள்ளனர்.
Pada Salai

Thursday, July 2, 2015

Pallikudam

புதிய வலைதளம் "எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு"
       தொடக்கக்கல்வி - 4 முதல் 8 அகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற "எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு" ஓவியப்போட்டி - புதிய வலைதளைதில் மாணவர்கள் இலவசமாக உறுப்பினராக சேர்த்தல் சார்ந்து இயக்குனரின் செயல்முறைகள்

Pallikudam

90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்து சென்றதால், உயர் நீதிமன்ற உத்தரவு வெற்றி அடைந்துள்ளது என, போலீசார் பெருமிதம்
          'இருசக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயம். இந்த உத்தரவு, ஜூலை, 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

          இதையடுத்து, மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், 'இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்வோரும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது. 'ஹெல்மெட் அணிய தவறினால், இருசக்கர வாகன ஓட்டிகளின் உரிமம், வாகன பதிவு சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து அசல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டது. உயர் நீதிமன்றம் மற்றும் மாநில அரசு பிறப்பித்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதனால், மாநிலத்தில் உள்ள, இருசக்கர வாகன உரிமையாளர்களில், 90 சதவீதம் பேர், நேற்று ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டினர். பின்னால் அமர்ந்து இருந்தோர் மற்றும் பெண்கள், 65 சதவீதம் பேரும், ஹெல்மெட் அணிந்து சென்றது, போலீசார் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்தது.


மாநிலம் முழுவதும் போலீசார், மறைவான இடங்களில், தனித்தனியாக காத்து நின்றனர்.
ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை விசில் அடித்து மடக்கிய போலீசார், எந்த ஆவணமும் இல்லாதவர்களிடம், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, படிவம் ஒன்றில், வாகன ஓட்டியின் பெயர், பிடிபட்ட இடம், ஆவணங்கள்
திரும்ப பெற வேண்டிய நீதிமன்றம், மொபைல்போன் எண்ணை நிரப்பி, ஒப்புகை சான்று வழங்கினர்.ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்று போன்றவற்றுக்கான அசல் ஆவணங்களை வைத்திருந்தவர்களிடம், ஹெல்மெட் வாங்கி விட்டதற்கான ரசீதை சமர்ப்பித்ததும், நீதிமன்றத்தில் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் வகையில், படிவம் எண் இரண்டில், ஒப்புகை சான்று வழங்கினர். ஆனால், வாகனங்களை விடுவித்து விட்டனர்.
கெடுபிடி தள்ளிவைப்பு:
'ஹெல்மெட் கட்டாயம்' என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், ஏராளமானவர்கள், ஒரே நேரத்தில், ஹெல்மெட் வாங்க குவிந்ததால், சென்னையில் மட்டுமின்றி, மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ள கடைகளில், ஹெல்மெட்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. நேற்றைய நிலவரப்படி, ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்ற ஹெல்மெட், 1,500 ரூபாய் வரை விற்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு பிரச்னையாலும், பணப்பற்றாக்குறை உட்பட, வேறு சில பிரச்னைகளாலும், மாதச் சம்பளம் பெறும் பலர், ஹெல்மெட் வாங்காமல் உள்ளனர். எனவே, ஹெல்மெட் விஷயத்தில், அதிக கெடுபிடி காட்டுவதை, சில நாட்களுக்கு மட்டும் தள்ளிப்போட, போலீசார் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தேவையில்லாமல், இருசக்கர வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்யக்கூடாது என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. கட்டாய ஹெல்மெட் உத்தரவு நேற்று நடைமுறைக்கு வந்தபின், காலை, 9:00 மணியில் இருந்து, இரவு, 7:00 மணி வரை, 1,008 வாகனங்கள் சிக்கின. அதில், 556 வாகன ஓட்டிகளின் உரிமங்கள் மற்றும் 452 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
ஜார்ஜ்
போலீஸ் கமிஷனர், சென்னை
Thanks
Pada Salai

Monday, June 22, 2015

pallikudam

தமிழகத்தில் 13 அரசு கலைக் கல்லுாரிகளில் 61 புவியியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, சென்னை, கோவை, கரூர், நாமக்கல், சேலம்,
தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 அரசு கலைக் கல்லுாரிகளில் புவியியல் பாடப்பிரிவு உள்ளது.

இப்பிரிவில் 61 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதில் திருச்சி ஈ.வெ.ரா., கல்லுாரியில் 9 பணியிடங்கள், கும்பகோணம் அரசு மகளிர் கல்லுாரி, திருச்சி அரசு கல்லுாரியில் தலா 8, திண்டுக்கல் எம்.வி.எம்.,அரசு மகளிர் கல்லுாரி, நாமக்கல் அரசு கல்லுாரியில் தலா 6. தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லுாரியில் 5, மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியில் 3, நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லுாரி, சென்னை ராணி மேரி கல்லுாரி, கோவை அரசு கல்லுாரியில் தலா 4, சேலம் அரசு கல்லுாரியில் 2, சென்னை மாநில கல்லுாரி, கரூர் அரசு கல்லுாரியில் தலா ஒரு பணியிடம் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நீண்டகாலமாக நிரப்பாததால் நெட்,' 'ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றோர், முனைவர் பட்டம் பெற்றோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012 ல் புவியியல் பாடத்தில் 4 பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது. பல காரணங்களால் இதுவரை நிரப்பப்படவில்லை.

தற்போது காலியிடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் ரூ.10 ஆயிரம் மாத ஊதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கின்றனர். இதனால் எங்களுக்கு பணிவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை செயலருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம், என்றார்.

Tuesday, June 16, 2015

pallikudam

கற்பித்தலை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 14 வகையான பணியிடப் பயிற்சிகள்,மொத்தம் 22 நாள்கள் வழங்கப்பட உள்ளன
பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்கு 14 வகையான பணியிடப் பயிற்சிகளை அளிக்க பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
மாநிலக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.இதுகுறித்து மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திங்கள் கிழமை வெளியிட்ட செய்தி:ஆண்டுதோறும் இதுபோன்ற பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளிப்பதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.
இதுபோல, 2015-16 கல்வியாண்டில் தொடக்க, உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கில மொழி பயிற்சிகள் மட்டுமின்றி கணிதம் கற்பித்தல் பயிற்சி, அறிவியல் பயிற்சி, சமூக அறிவியல் பயிற்சி, உடற்கல்வி, அது சார்ந்த செயல்பாடுகளுக்கான பயிற்சி என 14 வகையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
மொத்தம் 22 நாள்கள் வழங்கப்பட உள்ள இந்தப் பயிற்சிகளின் மூலமாக ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படுவதோடு, கூர்ந்து ஆராயும் திறனும், மொழித் திறனில் வல்லமையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 11, 2015

pallikudam

வரும் 15ல் இன்ஜி., கவுன்சிலிங் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
        அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தொழிற்கல்வி மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி, வரும், 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

          அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 580 அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, அண்ணா பல்கலை மூலம் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 1.53 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஜூன், 28ம் தேதி விளையாட்டுப் பிரிவினர்; 29ம் தேதி மாற்றுத் திறனாளிகள்; ஜூலை, 1ம் தேதி முதல் பொதுக் கவுன்சிலிங் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும் கவுன்சிலிங் தேதி இதுவரை அறிவிக்கவில்லை. இதுகுறித்து அண்ணா பல்கலை பேராசிரியரும், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலருமான ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது, ''தொழிற்கல்வி மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி, இன்னும் முடிவு செய்யவில்லை. வரும், 15ம் தேதி, 'ரேண்டம்' எண் வெளியிடப்படும். அப்போது, தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும்,'' என்றார்.

அண்ணா பல்கலை ஒற்றைச் சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கையில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 100 இடங்கள் ஒதுக்கப்படும். தனியார் சுயநிதி இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 4 சதவீதம் ஒதுக்கப்படும்.

Tuesday, June 9, 2015

pallikudam

கண்ணியமான ஆடைகளை அணிவது அவசியம்: ஆசிரியர்களுக்கு உத்தரவு.

          பள்ளி வளாகத்துக்குள், வரும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் பண்பாட்டுக்கும், கலாசாரத்துக்கும் ஏற்ற ஆடைகளை கண்ணியமாக அணிந்துவரவேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். 
 
         கல்வியாண்டு துவங்கி வகுப்புகள் நடந்துவரும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு, கல்வித்தர மேம்பாடு குறித்து பல்வேறு உத்தரவுகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டிய ஆசிரியர்களும், தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, பள்ளி வளாகத்துக்குள் கண்ணியமான ஆடைகளை அணியவேண்டும். மாணவ, மாணவிகளிடம் ஒழுக்கக் கேடான முறையில் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை, தலைமையாசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பதை தவிர்க்கவேண்டும்; தலைமையாசிரியர்கள் உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று விடுப்பு எடுப்பது அவசியம். விடுப்பில் செல்லும்போது உதவி தலைமை ஆசிரியர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும். வேலை நேரத்தில், வகுப்பை விட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது என்றும் மொபைல்போன் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, அரசையோ, அரசு சார்ந்த அதிகாரிகளையோ தேவையற்ற விமர்சனம் செய்வது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடத்தை விதி, 12ல் நடவடிக்கை எடுக்கப்படும். வருகைபதிவேடு உட்பட அனைத்து தபால்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பம் இடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.கோவை மாவட்ட பள்ளிகளில், இதுகுறித்த சுற்றறிக்கை தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் அறிவுறுத்த உத்தரவிடபட்டுள்ளது.