Monday, December 8, 2014

Pallikudam

ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை'ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
     'தமிழகத்தில் துவக்கப்பள்ளி முதல் கல்லுாரி வரையிலான ஆசிரியர்களுக்குபாதுகாப்பு இல்லை'' என துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறினார்.

         பழநி தொப்பம்பட்டியில் தமிழகஆசிரியர் கூட்டணி சங்க மாநாடு நடந்தது.இதில் பங்கேற்ற துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய பொது செயலாளர் அண்ணாமலை கூறியதாவது:

          தமிழகத்தில் தொடக்கபள்ளி முதல் கல்லுாரி வரை ஆசிரியர்களுக்கு மாணவர், பெற்றோர், அரசிடமிருந்து எவ்வித பாதுகாப்பும் இல்லை. ஆசிரியர்கள் மீது பொய்யான புகார் அளிக்கப்படுகிறது. அதன்மீது போதிய விசாரணை இல்லாமல்அரசு நடவடிக்கை எடுக்கிறது.தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அரசு அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்தியஅரசு திருக்குறளையும், பாரதியார் பிறந்த நாளையும் சிறப்பு செய்துள்ளதற்கு நன்றியை தெரிவிக்கிறோம்,' என்றார்.

தீர்மானம்:

ஆசிரியர்களை முறையின்றி பணிஇடமாறுதல் செய்வதை நிறுத்தவேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பள்ளிக்கூடம்

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் மீதான விமர்சனம் தவறு
          தமிழக அரசு அனைவருக்கும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள் என அறிவித்துள்ளது. தற்போது 9-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி செய்திட வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

          இங்கேதான் கோளாறு உள்ளது எனக் கல்வி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் தேர்ச்சி நிச்சயம் உண்டு.

ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியுடனும், சேவை மனப்பான்மையுடனும் வேலை செய்தால்தான் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி கற்பிக்க இயலும்.

அடுத்து பாடத் திட்டங்களை எடுத்துக் கொள்வோம். அப்போதெல்லாம் தேர்வில் சாய்ஸ் என்பது மிகமிக குறைவாகவே இருக்கும்.

மேலும் ஒரு கேள்விக்கு 4 பதிலைக் கூறி, இதில் எது சரி எனக் கூறு என்ற கேள்விகள் இருக்காது. தற்போது உள்ள இந்த இரு முறைகளினால் மாணவர்கள் படிக்கும் திறன் குறைந்து விடுகிறது. அவர்களின் ஞாபகத் திறன் மழுங்கடிக்கப்படுகிறது.

மேலும், தற்போது மனக்கணக்கு என்கிற பாடம் இல்லை. இந்த மனக் கணக்கு ஞாபக சக்தியை வளர்ப்பதோடு, பிற்காலத்தில் பல வேலைகளை சுலபமாகச் செய்ய வழி செய்யும்.

தற்போது கால்குலேட்டர் வந்துவிட்டது. அந்த காலத்தில் பின்னல் கணக்கு, அல்ஜீப்ரா கணக்கு என எதையும் எழுதி பார்த்து தான் விடையளிக்க முடியும். இதனால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் வளர்ந்தது. தற்போது கால்குலேட்டர் பயன்படுத்தப்படுவதால், இந்தத் திறன் வளர்க்கப்படுவதில்லை.

மேலும், நோட்ஸ் புத்தகம் வாங்கி அக் காலத்தில் யாரும் படிப்பதில்லை. வகுப்பில் ஆசிரியர் கற்பிக்கும்போதே கேள்வி பதிலைக் கூறிவிடுவார். அதனை நோட்டுப் புத்தகத்தில் எழுதி படிக்க வேண்டும்.

தற்போது எங்கும் நோட்ஸ். எதற்கும் நோட்ஸ் என மாணவர்களின் கற்கும் திறனை மிகவும் குறைத்து விடுகிறது.

அடுத்து அந்தக் காலத்தில் ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை இருந்தது. தற்போது அது இல்லை. காரணம் பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க இயலாது. அப்படி கண்டித்தால் ஆசிரியர் அடித்து விட்டார் என புகார் எழும்.

மாணவர்களை அடிக்கக் கூடாது என அரசு கூறியுள்ளதை மாணவர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பல ஆசிரியர்கள் மாணவர்களின் தவறுகளைக் கண்டும் காணாதது போல இருந்து விடுகிறார்கள்.

தற்போது பள்ளியில் வகுப்பறையை மாணவர்கள் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தால் சிலர் மாணவர்களின் நிலை பாரீர் எனக் கூக்குரலிடுகின்றனர். இதுபோன்ற பல காரணங்களால் மாணவர்களுக்கு ஆசிரியர்களிடம் பயமும், மரியாதையும் இல்லாமல் போய் விட்டது.

இப்படிப் படிப்பவர்கள் பின்னாளில் ஆசிரியர்களாக பணிபுரிய நேர்ந்தால் எப்படி இருக்கும்? இது போன்ற காரணங்களால்தான் ஆரம்பக் கல்வியின் தரம் குறைந்து வருகிறது.

நம் பிள்ளைகள் நம்மைவிட பல மடங்கு புத்திசாலி எனக் கூறி வருகிறோம். அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி அளித்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பாக அமைவதோடு, வருங்கால சமுதாயமும் மேம்படும்.

பள்ளிக்கூடம்

60:40 விழுக்காடு பதவி உயர்வு வழங்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
         நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் இடைநிலை ஆசிரியர் நியமன தேதியை அரசாணை எண்.400ன் படி 60:40 விழுக்காடு பதவி உயர்வு வழங்க தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
        தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி -மாநில திட்ட இயக்குனருக்கு கோரிக்கை மனுவை அளித்தார்.குறுவள மைய பயிற்சி நாட்களை, சிறப்பு தற்செயல் விடுப்பு அல்லது வேலை நாளாக அறிவிக்க  வலியுறுத்தப்பட்டது; தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.இரா.தாஸ் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனர் திருமதி.பூஜா குல்கர்னி அவர்களை சந்தித்து கீழ்காணும் கோரிக்கைகளை வைத்தார்.

*உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்குவது போன்று தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து மாநில திட்ட இயக்குனர் உடனடியாக உரிய அலுவலரிடம் விசாரித்தார். மேலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
*கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட மணி நேரம் கற்பித்தல் பணி இலக்கு உள்ளது என்றும், அதற்கான திட்டங்கள் தொகுத்து அனுப்பப்பட்டுள்ளது எனவும் இயக்குனர் தெரிவித்தார்.
*பள்ளிகளில் பாடத்திட்டம், புத்தகம், செயல்வழிக்கற்றல் துணைக்கருவிகளில் ஏதேனும் ஒன்றை வைத்து கற்பிக்க வழிவகை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து இயக்குனர் தெரிவிக்கையில் அட்டைகள் அச்சிடப்பட்டு தயாராக உள்லதெனவும், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
*14 வகை விலையில்லா பொருட்களை (உடை, புத்தகம், நோட்டுகள் உட்பட) பள்ளிகளுக்கே நேரடியாக வழங்கவும், அதற்கான நிதி ஒதுக்கீடு, திட்டமிடல், திட்டவடிவான சத்துணவு பொருட்களை வழங்குவது போன்றே வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஏற்னெவே இதற்கு முன் அஞ்சலக வழியாக புத்தகங்கள் அனுப்பியுள்ள நிலைமையை சுட்டிக்காட்டப்பட்டது. மேற்காணும் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக இயக்குனர் உறுதியளித்தார்.

தொடக்கக் கல்வி இயக்குனருடன் சந்திப்பு
*நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் இடைநிலை ஆசிரியர் நியமன தேதியை அரசாணை எண்.400ன் படி 60:40 விழுக்காடு பதவி உயர்வு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

*நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் பொழுது தலைமையாசிரியர் பதவியிறக்கத்தை தவிர்த்து அதே ஒன்றியத்திற்குள் கூடுதல் தலைமையாசிரியர் பணியிட்ம் வழங்கவும், பட்டதாரி ஆசிரியரை விருப்பத்தின் அடிப்படையில் துறை மாறுதல் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைப்பதாக இயக்குனர் உறுதியளித்தார்.

Pallikudam

பள்ளிக்கல்வி இயக்குநராக ச.கண்ணப்பன் அவர்கள் நியமனம்

Friday, December 5, 2014

pallikudam

அகஇ - 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா வருவதால், அன்றைய தினத்தில் நடைபெறவுள்ள குறுவளமைய பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
ஆனால் பயிற்சி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒத்திபோக வாய்ப்புள்ளது.

pallikudam

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள் மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள் சார்ந்த விடுப்பு, உயர்கல்வி,

முன்அனுமதி, மருத்துவவிடுப்பு, ஈட்டியவிடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, வைப்புநிதி முன்பணம் கோரல், பகுதி இறுதிப்பணம் கோரல்,சேமநலநிதி கணக்கீடு,ஊக்கஊதியம் அனுமதித்தல், பதவிஉயர்வுக்குண்டான ஊதிய நிர்ணயம்,பண்டிகை முன்பணம்,மருத்துவ விடுப்பு அனுமதித்தல்,ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்,பொன்ற நடைமுறைகள் அந்தந்த உதவித்தொடக்கக்கல்வி அலுவலகப் பணியாளர்களால் அவர்கள் ஏற்கனவே கையாண்ட நடைமுறைகளின்படி அலுவலககுறிப்புகளும்,ஆணைகளும் வழங்கப்பட்டு வந்தன ஆனால் தமிழகம் முழுவதும் உள்ளஅனைத்து உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான வழிமுறையிணை பின்பற்ற தொடக்கக்கல்வித்துறை இயக்குனரகம் மூலம் ”மாதிரிப்படிவங்கள்,அலுவலகநடைமுறைக்கடிதம்,அலுவலகசெயல்முறை ஆணைகள் மற்றும்,பணிப்பதிவேட்டில் பதிய மாதிரி சீல்கள்” ஆகியன நிர்வாகப்பயிற்சியின் போது வழங்கப்ப்ட்டுள்ளது. .அதனை கடைபிடிக்க கோரப்பட்டு அனைத்து உதவிதொடக்கக்கல்விஅலுவலகங்களுக்கும் உரிய மாவட்டக்கல்வி அதிகரிகள் வாயிலாக அனுப்பப்படுள்ளதாக அறியப்படுகிறது.

pallikudam

பொருள் வாங்காத குடும்ப அட்டை: இணையதளம் மூலம் புதுப்பிக்கலாம்

எந்தப் பொருளும் வேண்டாத குடும்ப அட்டை வைத்திருப்போர், தங்களது அட்டையை இணைய தளம் மூலம் புதுப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

www.consumer.tn.gov.in என்ற உணவுப் பொருள் வழங்கல் துறை- நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணையதளத்துக்குச் சென்று அதன் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள

குடும்ப அட்டை ("என் கார்டு') புதுப்பித்தல் அறிவிப்பை "கிளிக்' செய்து 2015-ஆம் ஆண்டுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளை உள்தாள் ஒட்டி புதுப்பிக்கும் பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எந்தப் பொருளும் வேண்டாதவர்களும் தங்களது குடும்ப அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அட்டையை சுமார் 10 லட்சம் பேர் வைத்துள்ளனர்.

அவர்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்த பிறகு, கிடைக்கும் பதிவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து அட்டையில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Click Here - Renewal of "N" Family Card for the Year - 2015

Tuesday, December 2, 2014

Pallikudam

VIT பொறியியல் நுழைவுத் தேர்வு: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
           விஐடி பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பப் படிவங்களின் விற்பனை நாடு முழுவதும் உள்ள 232 முக்கிய தபால் நிலையங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.
    விஐடியில் வரும் கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு வரும் ஏப்ரலில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடக்க நிகழ்ச்சி வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சரவணன், மாணவர் சேர்க்கை இயக்குநர் மணிவண்ணன், சீனியர் போஸ்ட் மாஸ்டர் ஷீபா செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நுழைவுத் தேர்வு: இப்படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை கணினி முறையில் நாட்டில் உள்ள 112 முக்கிய நகரங்கள், துபை, குவைத்தில் நடைபெறுகின்றன.

விண்ணப்பங்கள் பெறும் வழிகள்: தபால் நிலையங்கள் மூலமும், இணைய வழி மூலமும் நுழைவுத் தேர்வு விண்ணப்பப் படிவங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் ரூ.990-ஐ விஐடியில் நேரில் செலுத்தி விண்ணப்பத்தைப் பெறலாம். ரூ.990 மதிப்புக்கு விஐடி யுனிவர்சிட்டி, வேலூர் என்ற முகவரிக்கு கேட்பு காசோலை மூலமும் விஐடி வேலூர் வளாகம், சென்னை வளாகத்தில் விண்ணப்பங்கள் பெறலாம். இணைய வழி மூலம் விண்ணப்பங்களைப் பெற ரூ.940-ஐ செலுத்தி www.vit.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2015 பிப்ரவரி 27-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Monday, December 1, 2014

Pallikudam

மாணவர்களை குறை கூறுவதை விடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற கல்வித்துறை உத்தரவு.
           தமிழகத்தில், மாணவ, மாணவியரை குறைகூறுவதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

          தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படவில்லை என்ற புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. சில மாதங்களுக்கு முன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செயலர், இயக்குநர் ஆகியோர், மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் 80 சதவீத ஆசிரியர்கள் கல்வி போதிப்பதில் முழு ஈடுபாடு காட்டுவதில்லை. மாணவர்களை குறைகூறி தங்களது கடமையிலிருந்து தவறி வருவதாகவும், இதன் தாக்கம் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் கடுமையாக எதிரொலிப்பதாகவும் தெரியவந்தது. மேலும், பாடங்களை மனனம் செய்வதால், மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும்போது தடுமாறுவதாகவும், கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கல்வித் துறை இணை இயக்குநர்கள், கல்வித் துறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மாணவ, மாணவியர்களுக்கு 6, 7, 8ஆம் வகுப்புகளில் இருந்தே கல்வி கற்பிப்பதில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் முழு ஈடுபாட்டுடன், அறிவுப்பூர்வமாக கற்கச் செய்துவிட்டால், உயர் கல்வியில் மாணவர்களின் தடுமாற்றங்களை அறவே தடுக்க முடியும். மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை ஆசிரியர்களைச் சார்ந்தது. மாவட்டந்தோறும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்த, 6, 7, 8ஆம் வகுப்புகளிலேயே போதிய பயிற்சிகளை வழங்கி, முன்னேற்பாடுகளை செய்யவேண்டும். இதற்கு, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த, மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகளை, அரசு பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக, கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Pallikudam

மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை
            சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் .

Pallikudam

CRC Trainings
      அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி முறையே 06.12.2014 மற்றும் 13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

Pallikudam

குருப் 4 தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு
        டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி குருப் 4 பதவியில் அடங்கிய 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை வருகிற 21ம் தேதி நடத்த உள்ளது.

          இத்தேர்வுக்கு 13 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Only Middle NO HIGH school

10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறை - மத்திய அரசு விரைவில் முடிவு.
இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற, மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டது. அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில் சேர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், இம்மாதம், 17 மற்றும் 18ம் தேதிகளில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள, ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்வி பிரிவான, 'பாரதிய சிக் ஷா மண்டல் - பி.எஸ்.எம்.,' மாநாட்டில், புதிய கல்வி முறைக்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட உள்ளது.அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 என்ற முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த, அந்த மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது.

பிரதமர் மோடி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, மூத்த அமைச்சர் வெங்கையா நாயுடு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா போன்ற பலர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலிருந்து, பா.ஜ.,வில் இணைந்தவர்கள். பா.ஜ.,வை கட்டுப்படுத்தும் உயரிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., விளங்குகிறது என சொல்லப்படுகிறது.இந்திய கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வர, மத்திய அரசு, படிப்படியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னோடியாக, கடந்த அக்., 30ல், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலர் சந்தித்தனர் என, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்கள், சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோசபலே போன்றோர், அமைச்சர் ஸ்மிருதியை சந்தித்து, கல்வி முறையை எந்தெந்த விதங்களில் மாற்ற வேண்டும் என கூறியதன் அடிப்படையில் தான், மத்திய அரசு, சமீப காலமாக செயல்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

*வெறும் எழுத்தர்களை உருவாக்கும், மெக்காலே கல்வி முறையை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும். சிந்திக்கத் தெரிந்த, நாட்டின் நலன், பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை போன்றவற்றுடன் இயைந்தவாறு கல்வி முறை இருக்க வேண்டும். *நவீன தொழில்நுட்ப யுக்திகளுடன், பாரம்பரிய கல்வி முறையையும் இணைத்து, புதியதொரு கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும். பொறுப்பு

கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற, ஆர்.எஸ்.எஸ்., அதற்கான வடிவமைப்பு, செயல்திட்டத்தை, அந்த அமைப்பின் சிறந்த கல்வியாளரான தினாநாத் பத்ராவிடம் வழங்கியுள்ளது. அவர், இதற்காக ஆராய்ச்சி செய்து வடிவமைத்துள்ள கல்விமுறை, குஜராத்தில் பின்பற்றப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுகிறது.

புதிய கல்வி திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:

*இப்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 கல்வி முறை, 1968ல், கோத்தாரி கமிஷன் பரிந்துரைப்படி அமலில் உள்ளது; இந்த முறை, விரைவில் மாற்றப்பட உள்ளது. *மாணவர்களின் முதல் எட்டாண்டு படிப்பு, தனி பிரிவாகவும்; அதன் பின், நான்காண்டு தனிப்பிரிவாகவும்; அதன் பின், மூன்றாண்டு தனிப்பிரிவாகவும் பிரிக்கப்பட உள்ளது.

*முதல் எட்டாண்டு படிப்பு, மாணவர்களின் அடிப்படை கல்வி தொடர்பானதாக இருக்கும்; இதில், அவர்களின் தாய்மொழி தான், முதல் மொழியாக இருக்கும்; ஆங்கிலம், இந்தி துணை மொழிகளாக இருக்கும்.

*முதல் எட்டாண்டு படிப்பில், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி, வேலை, சுத்தம், பாரம்பரிய கல்வி, சமூக சேவை ஆகிய பாடப்பிரிவுகள் இருக்கும்.

*முதல் எட்டாண்டு படித்து முடிக்கும் மாணவன், விரும்பினால், படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டு, தொழில்கள் செய்யவோ, அல்லது தொழிற்கல்வி படிக்கவோ செய்யலாம்.

*அதன் பின், விரும்பினால், நான்காண்டு படிப்பை தொடரலாம்.

*நான்காண்டு படிப்பு, கல்லூரி மட்ட படிப்பை ஒரே வீச்சில் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விரும்பினால், முதலாண்டுடன் நிறுத்திக் கொள்ளலாம்; அப்போது முதலாண்டு சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டு முடித்த பிறகு, இன்னொரு சான்றிதழ் வழங்கப்படும்; அது, டிப்ளமோ சான்றிதழாகவும், மூன்றாம் ஆண்டு, டிகிரி சான்றிதழாகவும், நான்காம் ஆண்டு சான்றிதழ், ஹானர்ஸ் டிகிரி சான்றிதழாகவும் வழங்கப்படும்.

*இதனால், கல்வி, தொழில் ரீதியாகவும், நாட்டின் உற்பத்திக்கு உகந்ததாகவும் இருக்கும்.

*எந்த படிப்பில் சேரவும், நுழைவுத் தேர்வு முறை இருக்காது என்பது, பி.எஸ்.எம்., வரைந்துள்ள கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சம். மதிப்பெண் மட்டுமின்றி, பிற தகுதிகளும், பொருளாதாரமும் கவனத்தில் கொள்ளப்படும்.

*எல்லா வகையான படிப்பிலும், செய்முறை எனப்படும் பிராக்டிகல் அவசியம் இருக்கும்.