Tuesday, November 11, 2014

Trb

PGTRB: தேர்வு எழுத தகுதியானவர்கள் யார்?

    முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் தகுதியானவர்கள். ஏற்கனவே பி.எட் முடித்து விட்டு முதுகலை பட்டத்திற்கான தேர்வு எழுதி வெற்றி பெற்று சான்றிதழ் களுக்காக காத்திருப்பவர்கள் தகுதியானவர். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு நேரத்தில் உரிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.

        முதுகலை பட்டம் பெற்று பி.எட் தேர்வை எழுதி வெற்றி பெற்று சான்றிதழுக்காக காத்திருப்பவர்களும் தகுதியானவர்கள் தான்.

Monday, November 10, 2014

CPS silp

Trb

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு : இன்று முதல் விண்ணப்பம்
         முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (நவம்பர்10) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

          1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நவம்பர் 10 முதல் 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னையில்?..

சென்னை மாவட்டத்தில் இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா தெரிவித்தார். விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.

Trb

PGTRB - New Method Implemented
         அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.
      அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு என்பது பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வில் இருந்து வேறுபட்டது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால்தான் ‘பாஸ்’ செய்ய முடியும். போட்டித் தேர்வுகளில் அதுபோல கிடையாது. காலியிடங் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பெண் வரிசைப்படி ஆட்களை தேர்வு செய்வார்கள். அந்த கட்ஆப் மதிப்பெண் என்பது தேர்வுக்குத் தேர்வு மாறக் கூடியது.

இந்நிலையில், தற்போது முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பாஸ் மார்க் எவ்வளவு?

அதன்படி, பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 50% மதிப்பெண், எஸ்சி வகுப்பினர் 45% மதிப்பெண், எஸ்டி வகுப்பினர் 40% மதிப்பெண் எடுத்தாக வேண்டும். இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’ செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். ‘பாஸ்’ செய்தவர்கள் எண்ணிக்கை குறை வாக இருந்தால், எஞ்சிய பணி யிடங்கள் காலியாகவே வைக்கப் படும். ‘ஃபெயில்’ ஆனவர்களைக் கொண்டு அந்த இடங்கள் நிரப்பப் படாது. இதுபோன்ற ‘பாஸ்’ மதிப் பெண் முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு களில் (30 சதவீதம்) பின்பற்றப் படுவது குறிப்பிடத்தக்கது.

எதற்காக இந்த மாற்றம்?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி விரிவுரை யாளர்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் ஆள் இல்லாத காரணத்தால், மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த தேர்வு நியமனம் ரத்துசெய்யப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் குறிப்பிட்ட சில பிரிவுகளி லும், இதேபோல தமிழ்வழி இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்யவேண்டி இருந்தது. எனவே, தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 10-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 26-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரி அலுவலகங்களில் வழங்கப் படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத் தேர்வில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது.

Saturday, November 8, 2014

W app

  WELCOME TO THE
📍 21ST CENTURY!!! 📍
*Our Phones ~    Wireless
*Cooking ~           📛 Fireless
 *Cars ~          Keyless
 Food ~            Fatless
 Tyres ~          ⚪ Tubeless
*Dress ~            Sleeveless
👬👬 Youth ~  Jobless
Relationships 👥Meaningless
*Attitude ~       👤 Careless
 Feelings ~   Heartless
 Education ~ ✖ Valueless
 Mobile comes
 Camera  gone

 Mobile comes
⏰ Wrist Watch gone

 Mobile comes
🔦 Torch gone

 Mobile comes
 Radio gone

 Mobile comes
 MP3 gone

 Mobile comes
 Letters gone

 Mobile comes
📟 Calculator gone

Mobile comes
 Computer gone

 Mobile comes
 Peace of mind gone  .....
      @  
  (     )
   \ 👅 /     
🎽c
     👖
     /  \
   👞👞

People getting mental 
&
Phones getting Smart 😀

Vao results

VAO Exam தேர்வு முடிவு 4 வாரத்தில் வெளியிடப்படும் : தேர்வாணைய தலைவர் தகவல்
          தமிழகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் இன்னும் 4 வாரத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

குரூப்-2 தேர்வுகள்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் குரூப்-2 தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 1,064 பதவிகளுக்கு நடைபெறும் தேர்வில் 11,497 பேர் இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு மற்றும் விரிவான எழுத்து தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வுகள் நேற்று தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களில் 44 தேர்வு மையங்களில் நடைபெற்றது. சென்னையில் 12 மையங்களில் நடைபெற்றது.

சென்னை பல்லாவரம் வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற ஆன்லைன் கணினி தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். தேர்வாணைய தேர்வு கட்டுபாட்டு அலுவலர் வி.சோபனா மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதை ஆய்வு செய்த பின்னர் தேர்வாணைய பொறுப்பு தலைவர் சி.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நேர்முக தேர்வு

குரூப்-2 இரண்டாம் கட்ட எழுத்து தேர்வுகள் நடைபெறுகிறது. 1,064 பணி இடங்களுக்கு 11 ஆயிரத்து 497 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 44 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 12 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

காலையில் ஆன்லைன் மூலம் தேர்வுகளும் மாலையில் விரிவான எழுத்து தேர்வும் நடைபெறுகிறது. இதில் தேர்வு பெற்றவர்கள் விகிதாசார அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்.

4 வாரத்தில் முடிவுகள்

ஆன்லைன் தேர்வுகள் மற்ற குருப் தேர்வுகளிலும் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் வெளியிடும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்.

குருப்-4 தேர்வுகளுக்கு இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இன்னும் நாட்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன் பிறகு அடுத்த தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Group2

TNPSC Group 2: தேர்வு மைய கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு : 40 பேருக்கு இன்று மீண்டும் தேர்வு
          சென்னை அருகே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு மையத்தில் கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு ஏற்பட்டதால் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேருக்கு இன்று மீண்டும் தேர்வு நடைபெறுகிறது.

குரூப்-2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு மூலம் 1,204 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதில் முதல்நிலை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 11 ஆயிரத்து 497 பேருக்கு நேற்று தமிழகம் முழுவதும் 24 தேர்வு மையங்களில் முதன்மை தேர்வு நடைபெற்றது.

முதலில் காலை 10 மணியில் இருந்து 12 மணி வரை ஆன்லைன் மூலம் தேர்வும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை எழுத்து தேர்வும் நடந்தது.

இதில், சென்னையை அடுத்த மறைமலைநகர் சட்டமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியின் தேர்வு மையத்தில் சுமார் 300 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இங்கு தேர்வு எழுதுவதற்காக வேலூர், அரக்கோணம், ஆற்காடு பகுதிகளில் இருந்து 270 பேர் வந்து இருந்தனர்.

கம்ப்யூட்டர்கள் இயங்கவில்லை

காலை 10 மணிக்கு ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கு அவர்கள் கம்ப்யூட்டரை இயக்கியபோது அவர்களில் 40 பேருடைய கம்ப்யூட்டர்கள் மட்டும் செயல்படவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே தேர்வு மைய அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த கம்ப்யூட்டர் களை அதிகாரிகள் சரி செய்ய முயன்றனர். எனினும் முடியவில்லை.

இதனால் தேர்வு எழுத முடியாத 40 பேரும் தேர்வு மையத்தின் முன்பாக தரையில் அமர்ந்து தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவருக்கு தேர்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

உடனே தேர்வாணையத்தின் தலைவர் சி.பாலசுப்ரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் சட்டமங்கலம் தேர்வு மையத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு 2½ மணி நேரம் நீடித்தது.

அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தேர்வாணையக்குழு தலைவரிடம் கூறியதாவது:-

நாங்கள் 40 பேரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். காலை 8 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்துவிட்டோம். ஆனால் தேர்வுகள் எந்த அறையில் நடைபெறுகிறது என்பது குறித்த தகவல் கூட இந்த மையத்தில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்படவில்லை. இதனால் தேர்வு அறைகளை கண்டுபிடிப்பதற்கே முடியவில்லை. இந்த தேர்வு மையத்திற்கு வருவதற்கு தேவையான பஸ் வசதியும் கிடையாது. இது போன்ற மையங்களில் இனி வரும் காலங்களில் தேர்வு நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

எங்களது கம்ப்யூட்டர்கள் இயங்காத காரணத்தால் நாங்கள் மீண்டும் தேர்வு எழுதினால் கேள்விகள் கடினமாக வர வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேர்வு எழுதுங்கள்

இதற்கு தேர்வாணைய தலைவர் கூறும்போது, “உங்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு எனக்கு வருத்தமாக உள்ளது. உங்கள் கஷ்டம் எங்களுக்கு புரியும். எனவே மாலை நடைபெறும் தேர்வை நீங்கள் 40 பேரும் எழுதுங்கள். காலையில் நடைபெறும் தேர்வை நாளை, அதாவது இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வைத்துகொள்ளலாம்” என்றார்.

இதற்கு பாதிக்கப்பட்டவர் கள் அனைவரும் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். இதன் பின்னர் மீண்டும் தேர்வாணைய தலைவர் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 40 பேருக்கும் இதே தேர்வு மையத்தில் நாளை காலை ஆன்லைன் தேர்வும், மாலை எழுத்து தேர்வுகளும் நடைபெறும் என்று அவர் உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

உணவு, தங்கும் இடம் ஏற்பாடு

இது குறித்து தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், “எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு காரணமாக வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 40 பேரால் குரூப்-2 முதன்மை தேர்வை எழுத இயலவில்லை. இவர்கள் அனைவருக்கும் இதே தேர்வு மையத்தில் தங்குவதற்கும், அவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு புதிய கேள்வித்தாள் வழங்கி நாளை (இன்று) காலை தேர்வு நடைபெறும். இனிவரும் காலங்களில் தேர்வு மையங்கள் பஸ் போக்குவரத்து வசதிகள் கொண்ட பகுதியில் மட்டும் அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Tnpsc4

குரூப்-4 தேர்வு; 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்
      தமிழகத்தில் குருப் 4 தேர்வு எழுத இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

              தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் குருப் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. 1064 பதவிகளுக்கு நடைபெறும் தேர்வில் 11497 பேர் 2 கட்ட ஆன்லைன் தேர்வு மற்றும் விரிவான எழுத்து தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வுகள் நேற்று நடைபெற்றது. பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆன்லைன் கணினி தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலை வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார். தேர்வாணைய தேர்வு கட்டு பாட்டு அலுவலர் வி.ஷோபனா மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

              பின்னர் பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில்: குருப் 2 இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு நடைபெறுகிறது. 1064 பணியிடங்களுக்கு 11,497 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 44 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 12 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

காலையில் ஆன்லைன் கணினி மூலம் தேர்வுகளும், மாலையில் விரிவான எழுத்து தேர்வும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் விகிதாச்சார அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். குரூப் 2 பிரதான தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுவது போல விரைவில் பிற தேர்வுகளும் இதே முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குருப் 4 தேர்வுகளுக்கு இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். விஏஒ தேர்வு முடிவு: தமிழகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) தேர்வு முடிவுகள் இன்னும் 4 வாரங்களில் வெளிவரும். அதில், தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்.

PG TRB

1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பாணை வெளியீடு
            தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்  நியமனத்துக்கான அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

             இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நவம்பர் 10 முதல் 26 வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் விநியோகம் செய்யப்படும். ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும்.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை விவரம்:

தமிழ்ப் பாடத்தில் 277 பேர்,
ஆங்கிலப் பாடத்தில் 209 பேர்,
கணிதப் பாடத்தில் 222 பேர்,
இயற்பியல், வேதியியலில் தலா 189 பேர்,
உயிரியலில் 95 பேர்,
விலங்கியலில் 89 பேர்,
வரலாறு பாடத்தில் 1989 பேர்,
பொருளாதாரத்தில் 177 பேர்,
வணிகவியலில் 135 பேர்,
உடற்கல்வி இயக்குநர்களாக 27 பேர்

என மொத்தம் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி:

சம்பந்தப்பட்ட பாடத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம். படிப்போடு, பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் ஒரே பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஒரு ஆண்டுப் பட்டப் படிப்பை முடித்திருந்தாலோ, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் அதிகமான படிப்புகளைப் படித்திருந்தாலோ அவர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.

எனினும், வேறு பிரிவில் பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் அவர்களது படிப்பு, அறிவிப்பாணையில் உள்ள பாடங்களுக்கு இணையானது என்ற சான்றிதழ் பெற்றிருந்தால் போட்டித் தேர்வு எழுதலாம். இந்த அறிவிப்பாணை வெளியாவதற்கு முன்பே இணையானது என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் எந்த இடத்தில் விண்ணப்பத்தை வாங்கினாரோ அதே இடத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படும். பிரதான பாடம், கல்வி முறை, பொது அறிவு ஆகியவை தொடர்பாக 150 கேள்விகள் கேட்கப்படும். இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.

பதிவு மூப்புக்கு 4 மதிப்பெண்:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்புக்காக மொத்தம் 4 தகுதிகாண் (வெயிட்டேஜ்) மதிப்பெண் வரை வழங்கப்படும். ஒராண்டு முதல் மூன்றாண்டு வரை 1 மதிப்பெண், 3 முதல் 5 ஆண்டுகள் வரை 2 மதிப்பெண், 5 முதல் 10 ஆண்டுகள் வரை 3 மதிப்பெண், 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மதிப்பெண் என வழங்கப்படும்.

பணி அனுபவத்துக்கு 3 மதிப்பெண்:

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகப் பணியாற்றியிருந்தால் பணி அனுபவத்துக்கு 3 தகுதிகாண் மதிப்பெண் வரை வழங்கப்படும்.

1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவத்துக்கு 1 மதிப்பெண்ணும், 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவத்துக்கு 2 மதிப்பெண்ணும், 5 ஆண்டுகளுக்கு மேல் 3 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

New schools

துவக்கப்பள்ளி இல்லாத குடியிருப்புபட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு
             துவக்கப்பள்ளி வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

             வரும் 2015-16 கல்வியாண்டில், புதிதாக தொடங்க வேண்டிய துவக்கப்பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய துவக்கப்பள்ளிகள் குறித்த பட்டியலை, உடனடியாக தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

            அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 2015-16 கல்வியாண்டில், துவக்கப்பள்ளிகள் இல்லாத குடியிருப்பு பகுதிகளில், பள்ளிகளை துவக்கும் பொருட்டு, கடந்த மாதம், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.

                இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மையங்களில் பள்ளிகள் தேவைப்படும் குடியிருப்பு பகுதிகளின் பட்டியலை பெற்று, தனி நபரைக்கொண்டு, நேரடியாக தொடக்கக்கல்வி இயக்ககத்தில், வரும் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட வேண்டிய, துவக்கப்பள்ளிகளின் பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HSC private

பிளஸ் 2 தனித்தேர்வுஅறிவிப்பு வெளியீடு
வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி வரை, இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அதன் விவரம்: தனித் தேர்வர்கள், தேர்வுக்கு பதிவு செய்ய வசதியாக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்களை, தேர்வுத் துறை அமைத்துள்ளது. இதன் விவரங்களை, www.tndge.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். வரும், 10ம் தேதி முதல், 21ம் தேதி மாலை, 5:00
மணி வரை, சேவை மையங்களுக்கு, நேரில் சென்று மாணவர்கள், தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Sunday, November 2, 2014

Rain leave

நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.