Tuesday, February 20, 2024

 

ஒரு ஊரில் ஒரு விவசாயி நெல் பயிரிட்டான்.

நல்ல விளைச்சல் கண்டது அந்த நிலம், ஒரு நாள் நிலத்தை சுற்றி பார்த்தவன்.

ஒரு வரப்பின் ஓரம் நின்று தனக்குள்ளே பேசி கொண்டான்.

ஆ! நல்ல விளைச்சல் நாளை ஆட்களை அழைத்து வந்து எப்படியும் அறுவடை செய்துவிட வேண்டும், என கூறினான்.

இதை அந்த விளைச்சலில் கூடு கட்டி கூட்டில் இருந்த குருவி குஞ்சுகள் கேட்டுகொண்டு இருந்தது.

அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை ஆட்களை கூட்டி வந்து அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளை அறுவடை செய்யமாட்டார் கவலை பட வேண்டாம் என கூறியது.

மறுநாள் அறுவடை நடைபெறவில்லை.

மறுநாள் வந்த விவசாயி அதே இடத்தில் நின்றுகொண்டு எப்படியாச்சும் வெளியூரில் இருந்து ஆட்களை கொண்டுவந்தாவது நாளை அறுவடை செய்துவிட வேண்டும் என் கூறினான்.

மீண்டும் அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை வெளியூரில் இருந்தாவது ஆட்களை கூட்டி வந்து அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளையும் அறுவடை செய்யமாட்டார் கவலை பட வேண்டாம் என கூறியது.

அது போலவே மறுநாளும் அறுவடை நடக்கவில்லை.

மறுநாள் வந்த விவசாயி அதே இடத்தில் நின்றுகொண்டு எப்படியாச்சும் நாளை நாமே இறங்கியாவது அறுவடை செய்துவிட வேண்டும் என் கூறினான்.

மீண்டும் அந்த குஞ்சிகளின் தாய் வந்தவுடன் அம்மா! நிலத்தின் உரிமையாளர் வந்தார், நாளை அவரே இறங்கி அறுவடை செய்ய போவதாக சொன்னார், அம்மா! என்று கூறியது.

உடனே தாய் குருவி நாளையும் அறுவடை கட்டாயம் நடைபெறும்,வாருங்கள் நாம் வேறு இடத்திற்கு பத்திரமாக சென்றுவிடலாம் என கூறியது.

உடனே குஞ்சுகள் ஏன் அம்மா நாளை கட்டாயம் நடைபெறும் என்று கூறுகின்றீர்கள் என கேட்டன,

அதற்கு தாய் குருவி கூறியது

இதுநாள் வரை விவசாயி அடுத்தவர் மீது நம்பிக்கை வைத்திருந்தான்,

ஆனால் இன்றோ தன் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறான். என கூறியது.

*தன்னம்பிக்கை வெல்வது உறுதி*

என் தம்பிகளின் வெற்றி உறுதி👍👍👍

No comments: