Saturday, November 19, 2022

ஊடகம் என்பது சமுதாய வளர்ச்சியில் சனநாயகத்தின் நான்காம் தூண்.

 ஊடகம் என்பது

சமுதாய வளர்ச்சியில் சனநாயகத்தின் 

நான்காம் தூண்.

 மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் 

உள்ள இடைவெளியில் கண்ணாடி போல 

நின்று அனைத்து 

செய்தி களையும் உலகிற்குச் சொல்லும் மிகப்பெரிய சாதனம் 

இந்த ஊடகம் ஆகும்.

 ஊடகம் என்பது பல வகைகளாகும் பழங்காலத்தில் செய்தி தொடர்பாகவும் 

வானொலி 

கைபேசி 

தொலைபேசி தொலைக்காட்சி செய்தித்தாள்

 வார மாத இதழ்கள் கட்டுரைகள் பத்திரிக்கைகள்

 போன்றவைகள் அனைத்தும் 

ஊடகத்தின் கீழ் வரும்

இந்தியா என்கிற

 இந்த தேசம் மிகப்பெரிய சனநாயக நாடு; 

உலகின் மூன்றாம் இராணுவத்தை கொண்ட நாடு; மக்கள் தொகையில் இரண்டாம் இடம் கொண்டுள்ள நாடு. அத்தகைய நாட்டில் 

ஊடகம் எத்தகைய செயல்பாடுகள் செய்ய வேண்டுமோ, 

அத்தகைய ஆக்கப்பூர்வ

சமுதாய வளர்ச்சிக் காண செயல்பாடுகளை இந்தியாவில் ஊடகங்கள் செய்துகொண்டிருக்கிறது.

காட்சி ஊடங்களின் செயல்பாடுகள்

பல இலட்சம் மைல் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பியதை பெரும்சாதனையாக  தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் சொல்லி சமுதாயத்தில் அறிவியல் வளர்ச்சியை  வெளிப்படுத்துகின்றனர்.

 பல கோடி செலவு 

செய்து செயற்கைகோள் அனுப்ப முடிந்த அரசியல்வாதிகளால் 

ஒரு கிராமத்திற்கு 

பேருந்து அனுப்ப 

முடியாத இயலாமையை 

ஊடகம் வெளிப்ப்டுத்தி

சமுதாய வளர்ச்சியில் பங்கு கொள்கிறது

வியட்நாம் போரின்

போது 1974-ஆம் ஆண்டு போர்க்களத்தில், பாஃன் தி கிம் என்ற வியட்நாம் சிறுமி ஒருவள் உடலில் தீக்காயங்களோடு நிர்வாணமாக ஓடி வரும் அந்த ஒரு காட்சி உலகையே உறைய வைத்தது. அந்தப்படம் போருக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட பேருதவி  செய்தது. அதனை செய்ததும் இதே போன்ற ஊடகங்கள்தான்.

இதனைவிட

மிகப்பெரிய மனித பேரவலங்கள் 2009-ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்தது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு  அவ்வளவு பெரிய கொடுமைகள்  அங்கு அரங்கேர

சனநாயகத்தை

ஒரு சமுதாயத்தைத் காப்பாற்றும் நிலையில்

ஊடகம் செயல்பட்டது 

 அச்சு ஊடகங்களில் அதிகளவில் வரும் 

கள்ள உறவு, 

கற்பழிப்பு,

தகாத குடும்ப உறவுகள் போன்ற செய்திகள் 

தினசரி நாளிதழ்களில் கைது என அறிவித்தும்

விழிப்புணர்வும் செய்து வருவதால் அதனைப் 

படிக்கும் சமுதாயம்

 திருந்த வாய்ப்பு அளிக்கிறது

ஒரு சமுதாயம் வளர்ச்சி பெற வேண்டுமானால் அந்த சமுதாயத்தில்

 கல்வி வளர்ச்சி வேலைவாய்ப்பு 

 தனிமனித வளர்ச்சி இருந்தால் தான் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு அந்த சமுதாயமானது 

வளர்ச்சி அடையும் 

ஒரு சமுதாயம் முன்னேறுவதற்கு அடிப்படையான காரணம் அங்கு வாழக்கூடிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்

 எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகளை 

நம் கண் முன்னே கொண்டு வந்து ஒலி ஒளியாக காட்டுவது சிறப்பு

 காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் 

நவ நாகரிக உலகில் வளர்ச்சி பெற்று உள்ளான் என்றால் அதற்கு அடிப்படை காரணம் ஊடகங்களின் பங்கு தான் 

மக்கள் மனதில் 

உள்ள தீய கருத்துக்களை தீய எண்ணங்களை அகற்றி நல்வழி காட்டிய பெரியோர்களின் சிந்தனைகளை 

அவரின்  கருத்துக்களை அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறியை மக்களிடம் கொண்டு சேர்த்து சமுதாயத்தில்

 ஒரு மறுமலர்ச்சி உண்டாக்க செய்தது ஊடகங்கள் தான்

மக்கள் உலகெங்கும் இருக்கும் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை ஊடகங்கள் 

கிராமப்புற 

நகர்புற 

பட்டணத்தில் உள்ள மாணவர்களிடையே கொண்டு சேர்த்து தனிமனித வளர்ச்சி தினசரி நாளிதழ்களின் பங்கு பெரும் பங்கு வகிக்கிறது

 நாட்டு நடப்புகளை தினமும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை ஊடகங்கள் செய்கின்றன 

கிராமத்து டீக்கடையில் குப்பனும் 

சொக்கனும் எழுந்தவுடன் டீக்கடைக்கு சென்று

டீ குடித்துக் கொண்டே தினசரி நாளிதழ்களை படித்தவாறு  தனது அறிவை பெருக்கிக் கொள்கிறார். உலக அறிவோடு தொடர்பு கொள்கிறார் என்றால் காரணம் பத்திரிக்கை என்ற

ஊடகம்.

கிராமத்து  டீக்கடையில்

தினத்தந்தி, தினமணி, தினகரன் நாளிதழ்களை

படித்து சமுதாயம்

விழிப்புணர்வு பெற்றது என்றால்  தினசரி செய்திதாள் என்ற ஊடகம்

இன்றைக்கு உலகம் சுருங்கி விட்டது அதற்கு அடிப்படை காரணம் ஊடகங்களின் 

வளர்ச்சியே ஆகும் இன்றைய காலகட்டத்தில் கைபேசியில் மிகப்பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளோம் 

கிராமத்தில் இருந்தவாறு தனது வங்கி கணக்கை நடைமுறைப்படுத்துகிறான் பணத்தை வங்கிக் கணக்கை கையாள்கிறார்

 பேரழிவு ஏற்படக்கூடிய காலங்களில் 

புயல் மழை பூகம்பம் மற்றும் இயற்கை சீற்றங்களை பற்றிய செய்திகளை முன்கூட்டியே ஊடகங்கள் அறிவித்து சமுதாயத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றுகிறது

 மாணவர்கள் விளையாட்டு துறையில் இன்றைக்கு ஆர்வம் அதிகமாக உள்ளதன் காரணம் ஊடகத்தின் பங்கு தான்

 தமிழ்நாடு மிகப் பெரிய ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்த உதவியது கைபேசி எண்ணும் ஊடகம் தான் ஒரு மாற்றத்தை உருவாக்கியது 

ஒரு புரட்சியை உருவாக்கியது 

ஒரு சமுதாயத்தை பண்பாட்டை

நாகரிகத்தை

கலாச்சாரத்தை

வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றது ஊடகங்கள் தான்

 ஊடகங்களில் நன்மை தீமை இருந்தாலும் கூட நாம் நன்மையையே எடுத்துக் கொள்ள வேண்டும் தீமை என்பது புறந்தள்ளி நன்மையை மட்டுமே ஆராய வேண்டும்

திரைப்படம் என்பது கூட ஒரு ஊடகம் தான் 

ஆன்மீக கருத்து 

சமுதாய சிந்தனைக் கருத்துக்களை 

சமுதாய சீர்திருத்த கருத்துக்களை பாரதியாரின் பாடல்களை காமராஜரின் பண்புகளை அண்ணாவின் பேச்சினை பெரியாரின் 

 சீர்திருத்த கருத்துக்களை விவேகானந்தரின்

ஆன்மீக சிந்தனையை

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களை விழிப்புணர்வு கருத்துக்களை நம் கண் முன்னே காட்டியது திரைப்படம் என்ற ஊடகம்

ஒரு நாடு முன்னேற வேண்டும் என்று சொன்னால் ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் அந்த சமுதாயத்தில் உள்ள மக்கள் விழிப்புணர்வை பெற வேண்டும் கல்வி வேலைவாய்ப்பு 

அறிவில் முன்னேற்றம் விளையாட்டு துறை மருத்துவ துறை பொருளாதார துறை போன்ற இன்னும் 

பல துறைகளையும் கிராமத்திற்கு கொண்டு சேர்த்ததில் ஒரு சமுதாயத்தை மேம்படுத்தியதில் 

சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை காரணமாக இருந்ததில் பெரும் பங்கு ஊடகங்கள் தான் 

என்று சொல்வது 

முற்றிலும் உண்மையான கருத்து 

ஊடகங்களை 

நல்வழியில் பயன்படுத்தினால் சமுதாயம் முன்னேற்றமடையும் சமுதாயம் முன்னேற்றம் அடைந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வலுவடையும் 

ஆகவே 

மரத்தின் கீழ் 

முடங்கிக் கிடந்த 

கூரை வீட்டில் கூனி குறுகி கிடந்த மக்கள் பலரை 

தட்டி எழுப்பி 

இன்றைக்கு முன்னேற்றம் பெற்ற மனிதனாக உருவாக்கியிருக்கிறது என்று சொன்னால் 

அதற்கு அடிப்படையான காரணம் 

ஊடகங்களே ஆகும்

தேவையானயிடங்களில் தேவையானதை தேவையான நேரத்தில் சொல்ல ஊடகம் கட்டாயம் தேவை. 

சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு மிக அதிகம். அதன் செயல்பாடுகள் சமூகத்தில் பெரும்மாற்றங்களை உண்டாக்கும். 

அதனை உணர்ந்து உணர்ந்து ஊடகவியலாளர்கள் செயல்பட்டாலே சமூகம் நற்பாதையில் பயணிக்கும்

No comments: