ஒரு சூப்பர் மார்க்கெட் வாசலில் ஒரு இளம்தம்பதிக்குள் வாக்குவாதம்
மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் "தம்பி நான் கேட்டா தப்பா நினைக்காதீங்க
ஏன் இப்படி அவங்க கூட சண்டை போடுறீங்க" எனக் கேட்டார்..
"ஒன்னுமில்லைங்க நானும்
கூட வந்து சாமான் வாங்கணுமாம், எனக்கே அசதியா இருக்கு
இப்படிதான் கடுப்பேத்தராங்க" என்று பதிலளிக்க
முதியவர் சிறுபுன்னகையோடு
"தம்பி முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன் இப்போ அவங்க இறந்து 5 மாசமாச்சி
எங்க ரெண்டுபேருக்கும் ஒரே வயசுதான்
ரெண்டு பேருமே ஆசிரியர்கள்
பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்றாகவே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்
எங்களோட 3 பிள்ளைங்களும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்.
என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா சுகர், பிரஷர் இதெல்லாம் இருந்தது...
தினமும் மருந்து சாப்பிடணும்
அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்
இப்ப அவங்க இல்லை,
நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன்
என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு,
இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு ....
நினைவுபடுத்திகிட்டே இருக்கு
அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துக கூட என்னை கவலைப்படுத்துது
அவங்க நம்பர் இருக்கு,
ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,
முன்னே படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்
இப்பஅதே படுக்கையில் நடுவில தனியா படுத்திருக்கேன்..
சமையலறைக்குத் தனியா போறேன்,
சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன்,
வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை,
கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை,
விழியோரம் நீர் தேங்க இருக்கேன்
அதான் தம்பி
அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும்,
அதிகமாக போற்றணும்,
...இன்னிக்குத் தினமும் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன்,
எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாம்மா?
இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்,
சரி தம்பி நான் வரேன் என்று புறப்பட்ட பெரியவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்திருந்த அந்த இளம் கணவன்....திடீரென பேரங்காடிக்கு உள்சென்று மனைவியைத் தேட ஆரம்பித்தான்
ஆம்
நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும்,
நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் ஏன் எண்ணக்கூடாது
புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறோம் ...இடையில் தும்முகிறோம்
"I'm sorry sir" என்கிறோம்
பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது,
உடனே "excuse me sir" சொல்றோம்
ஒரு நபரைச் சந்தித்த 10 நிமிடத்தில் அதன்பின் அவரைச் சந்திப்போமா என தெரியாது
ஆனாலும் எவ்வளவு அடக்கமாக மரியாதை தருகிறோம்?...காலம் முழுதும் வாழ்கிற
கும்பத்தில் ஒருவரை ஒருவர் பாராட்டுவதே இல்லைதான்
மனைவி சமையலை
கணவன் பிரமாதமுன்னு பாராட்டுறதுமில்லை
அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவரை மனைவி கணிவாக பேசுவதும் இல்லை
ஆக எப்பவும்
ஒருவரை ஒருவர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சாதான் வாழ்க்கை இனிக்கும்.
No comments:
Post a Comment